India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சோறு வடித்த கஞ்சியை, ஆறிய பிறகு 6 ஸ்பூன் எடுக்கவும். அதில் 1 ஸ்பூன் பெருங்காயத் தூள், 2 ஸ்பூன் சுக்கு பவுடர், 1 ஸ்பூன் கட்டிக்கற்பூரத் தூளை சேர்க்கவும். அதை ஸ்பூனில் கலக்கி வர, கெட்டியாக மாறும். அதை குழிக்கரண்டியில் வைத்து, அடுப்பில் சூடு காட்டவும். இப்போது அது பேஸ்ட் பக்குவத்துக்கு வரும். சற்று ஆறியதும் இதை நடு முதுகிலும், கீழ் முதுகிலும் நன்றாக தடவவும். மூச்சுப் பிடிப்பு, இடுப்பு வலி ஓடிவிடும்.
ம.பி. தலைநகரம் போபாலில் ₹1,814 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு படை இணைந்து மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 2ஆம் தேதி டெல்லியில் ₹5,600 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விஜய் அரசியலுக்கு வருவதால் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று தான் நினைக்கவில்லை என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். ஓட்டுகள் வேண்டுமானால் சிதறலாம் என்று நினைப்பதாக கூறிய அவர், TAKE என்று சொன்னதும் CM ஆவது அல்ல அரசியல் என்றும் சாடினார். மேலும், விஜய் அரசியலுக்கு வருவது விஜய்க்குத்தான் நெருக்கடியாக இருக்கும் என்று கூறிய அவர், மாநாடு நடத்தவே இவ்வளவு திணறி போய்விட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் Stainless Steel பயன்படுத்தப்படுவது தெரிந்ததே. உண்மையில் ஸ்டீல் என்பது இது தனி உலோகம் இல்லை. இரும்பையும் குரோமியத்தையும் கலந்தால் ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ கிடைக்கிறது. பீரங்கிக் குழாய்கள் துருப்பிடிப்பதை தடுப்பதற்காக இதை பிரிட்டனைச் சேர்ந்த பிரியர்லி 1913ல் கண்டுபிடித்தார். ஆயுத பயன்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட இது இன்று பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் தேர்வு செய்யப்படலாம் என அந்த அணியின் முன்னாள் வீரர் முடாசர் நாசர் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “PCB ரிஸ்வானை தவிர அனைவரையும் முயற்சி செய்துவிட்டது. அனைவரும் அப்பதவியை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் அவரைதான் கேப்டனாக்க முடியும். அதே நேரத்தில், பாக். அணி வீரர்களுக்கும், மேல்மட்ட நிர்வாகத்தினருக்கும் ரிஸ்வான் மீது திருப்தி இல்லை” என்றார்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. சேலம், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்றும், சென்னையில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
இன்று 10 மணிக்கு GK வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) சென்னை 2) டால்பின் 3) International Monetary Fund 4) ஒட்டகச்சிவிங்கி 5) நெருப்புக் கோழி 6) வளையாபதி 7) டைட்டானியம். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட iPhone 16 வரிசை ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் இம்மாதம் அறிமுகப்படுத்த உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தவிர, டெல்லி, மும்பை உள்ளிட்ட 4 நகரங்களில் பிரத்யேக விற்பனையகங்களைத் திறக்கவிருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியச் சந்தையில் முந்தைய ரக iPhone-களைவிட, குறைவான விலையில் இந்த புதிய ரகம் அறிமுகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் 6-9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு நாளை முதல் நடக்கவுள்ளது. OCT முதல் JAN வரை தேர்வு நடக்கிறது. முதல்கட்ட தேர்வு OCT. 7-10, 2ம் கட்ட தேர்வு OCT. 22-25, 3ம் கட்ட தேர்வு NOV. 26-29, 4ம் கட்ட தேர்வு JAN 28-31 வரையும் நடக்க உள்ளது. தேர்வுக்கான வினாத்தாளை https://exam.tnschools.gov.in/#/ என்ற தளத்தில் தேர்வுக்கு முந்தைய நாள் பதிவிறக்கம் செய்யலாம்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் கொடுத்த வாக்குறுதியை வேத வாக்காக நினைத்துச் செயல்படுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீதி நியாயத்துக்குக் கட்டுப்படும் நீங்கள் தன்மானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். விசுவாசமான நீங்கள் நம்பிக்கை துரோகிகளை மன்னிக்கவே மாட்டீர்கள் என்று நந்தி வாக்கியம் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Sorry, no posts matched your criteria.