India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவுக்கு எதிரான முதல் T20 போட்டியில் வங்கதேசம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. வங்கதேசம் அணியில் அதிகபட்சமாக ஹசன் மிஸ்ரா 35*, நஜ்முல் ஹொசைன் 27 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து இந்தியாவுக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் தீப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Power Atlas மற்றும் The Drone Databook தரவுகளின் அடிப்படையில், ராணுவ பயன்பாட்டிற்கான டிரோன்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா (13,000) முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக துருக்கி 1,421, போலந்து 1,209, ரஷ்யா 1,050 டிரோன்களையும் கொண்டுள்ளது. 625 டிரோன்களுடன் இந்தியா இந்த பட்டியலில் 6ஆம் இடத்தில் உள்ளது. பின்லாந்து 412 டிரோன்களுடன் கடைசி இடத்தில் உள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்து வந்த ‘சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார். படக்குழுவினரின் புகைப்படத்தை பகிர்ந்து, ஒரு ஆரோக்கியமான படப்பிடிப்பு மகிழ்ச்சியாக முடிவடைந்ததாக X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘சூர்யா 44’ படத்தை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றிய கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜான் (56), கார்த்திகேயன் (34), தினேஷ்குமார் (37), சீனிவாசன் ஆகியோர் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 230 பேர் மயக்கமடைந்த நிலையில், அவர்களுக்கு ஓமந்தூரார், ராயப்பேட்டை மற்றும் ராஜீவ்காந்தி அரசு ஹாஸ்பிடல்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஓலா சர்வீஸ் சென்டர்களில் நீண்ட நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் EV பைக்குகளின் போட்டோவை பகிர்ந்து, அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை ஸ்டாண்ட்அப் காமெடியன் குணால் கம்ரா விமர்சித்து இருந்தார். இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள ஓலா CEO பவிஷ் அகர்வால், பணம் பெற்றுக் கொண்டு இதுபோன்று பதிவிட வேண்டாம் எனவும், சர்வீஸ் பிரச்னைகளை சரிசெய்யும் வரை கூச்சல் போடாமல் இருக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாஜக, அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் 22 மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்கினால் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது பிரதமர் மோடிக்கான சவால் என்றும், பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசு நாட்டில் தோல்வியடைந்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், இரட்டை இன்ஜின் என்றால் இரட்டை பணவீக்கம், இரட்டை வேலைவாய்ப்பின்மை என்பதை மக்கள் உணர்ந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முதலில் ஆடிய PAK 20 ஓவரில் 105/8 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய IND அணி 18.5 ஓவரில் 108/4 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய ஃஷபாலி வர்மா 32, ஹர்மன் ப்ரீத் 29* ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சஞ்சு சாம்சன் துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளனர். ஐபிஎல் தொடரில் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசிய இளம் வீரர் மயங்க் யாதவ், ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்க உள்ளனர். இரு அணிகளும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளன.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘கங்குவா’. இப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் வரும் 20ஆம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சாய்ராம் கல்லூரியில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சர்க்கரையின் அளவு குறைந்துள்ளதாகவும், அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் அவரது உடல்நலம் குறித்த மருத்துவ அறிக்கை வெளியாகும் என தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.