news

News November 1, 2024

$20,000,000,000,000,000,000,000,000,000,000,000.

image

ரஷ்ய ஊடகங்களை கூகுள் மற்றும் யூடியூபில் முடக்கிய குற்றத்துக்காக, கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. எவ்வளவு தெரியுமா? undecillion ரூபிள்கள்! டாலர் மதிப்பில் $20,000,000,000,000,000,000,000,000,000,000,000 ஆகும். ரூபாய் மதிப்பில் இதை சொல்லவே முடியாது. இந்த தொகை உலகின் ஒட்டுமொத்த ஜிடிபி மதிப்பைவிட அதிகமாம். அபராதம் கட்டலன்னா தினமும் இந்த தொகை அதிகரிக்குமாம். SHARE IT

News November 1, 2024

வீடு வாங்குனா Lamborghini கார் இலவசம்!

image

மக்களை ஈர்க்க ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வேற லெவலில் இறங்கியுள்ளன. உ.பி., நொய்டாவில், லக்‌சுரி வில்லா வாங்குபவர்களுக்கு லம்போர்கினி கார் ஃப்ரீ என்கிறார் ரியல் எஸ்டேட் ஓனர் கௌரவ் குப்தா. Lamborghini Urus காரின் விலை ரூ.4 கோடி. வீட்டின் விலையோ ரூ.26 கோடி. கார் ஃப்ரீ என்றாலும் பார்க்கிங் இல்லை. அதுக்கு கூடுதல் ரூ.30 லட்சம் கட்டணம். நம்மூரில் ரியல் எஸ்டேட்காரர்கள் எந்த மாதிரி ஆஃபர்கள் தருகிறார்கள்?

News November 1, 2024

விஜய்யோட இந்த ஆசை மட்டும் நிறைவேறல..!

image

விஜய்யின் நிறைவேறாமல் போன ஆசை பற்றி நடிகர் சதீஸ் பகிர்ந்துள்ளார். ரஜினியின் எந்த படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறீர்கள் என சதீஸ் கேட்டதற்கு, ‘அண்ணாமலை’ என விஜய் பதில் சொல்லியதாக அவர் தெரிவித்துள்ளார். ஏன் என கேட்டதற்கு, ஒரு தங்கச்சி, ஒரு அம்மா, சாதாரண மனுஷன் எப்படி வாழ்க்கையில ஜெயிக்கிறான்னு இருக்கும். அதனால அது தனக்கு வொர்க்காகும் என விஜய் பதில் சொல்லியதாகவும் கூறியுள்ளார்.

News November 1, 2024

தீபாவளி ராசி பலன்கள் (1-11-2024)

image

➤மேஷம் – போட்டி
➤ரிஷபம் – செலவு
➤மிதுனம் – சிக்கல்
➤கடகம் – லாபம்
➤சிம்மம் – முயற்சி
➤கன்னி – விவேகம்
➤துலாம் – வரவு
➤விருச்சிகம் – சிந்தனை
➤தனுசு – கோபம் ➤மகரம்- வெற்றி
➤கும்பம் – எதிர்ப்பு ➤மீனம் – நற்செயல்

News November 1, 2024

நள்ளிரவிலும் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், திருச்சி, தேனி, குமரி, நெல்லை, வேலூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News October 31, 2024

கான்ட்ராக்டருக்கு ₹1 கோடியில் ரோலக்ஸ் வாட்ச்..!

image

ராஜஸ்தானில் கோட்டை போல பங்களா கட்டி கொடுத்த ஒப்பந்ததாரர் ராஜிந்தர் சிங்கிற்கு ₹1 கோடி மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்சை தொழிலதிபர் குர்திப் தேவ் பரிசளித்துள்ளார். 18 காரட் மஞ்சள் தங்க நிறத்தில் ஜொலிக்கும் வாட்ச் கவனத்தை ஈர்க்கிறது. வேகமாகவும், தரமாகவும் கட்டி கொடுத்ததற்காக பரிசு வழங்கியதாக தொழிலதிபர் தெரிவித்துள்ளார். 9 ஏக்கர் நிலத்தில் ராஜஸ்தான் கட்டட பாணியில் பங்களா கட்டப்பட்டுள்ளது.

News October 31, 2024

நாளை மறக்காமல் இதை செய்துவிடுங்கள்!

image

புண்ணியம் தந்திடும் ஐப்பசி அமாவாசை திதியில் (நவ.1) அதிகாலையிலேயே புனித நீராடி தர்ப்பணங்கள் செய்து முன்னோர்களுக்கு வழிபாடு ஆற்றுதல் அவசியம். ஏனெனில் அன்றைய தினத்தில்தான் பித்ருக்கள் தங்களுடைய பித்ருலோகத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்கின்றனர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே அன்றைய தினம் தங்களது வாரிசுகளால் அளிக்கப்படும் படையலை ஏற்றுக்கொண்டு அவர்களை மனமகிழ்வுடன் ஆசிர்வதித்துச் செல்வதாக ஐதீகம்.

News October 31, 2024

மோடி எப்படி வெல்கிறார் தெரியுமா?: கார்கே

image

தேர்தலில் முறைகேடு செய்வதன் மூலமே மோடி வெற்றி பெறுவதாக காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார். மோடி உண்மையில் எந்த தேர்தலிலும் வெல்லவில்லை, எல்லாமே முறைகேடுதான் எனவும், வாக்காளர் பட்டியலில் 10,000 பேரின் பெயரை நீக்கிவிட்டு 20,000 ஆயிரம் பெயரை சேர்ப்பதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், இதை எப்படி நிரூபணம் செய்வது என்பதுதான் கேள்வி எனவும் கூறியுள்ளார்.

News October 31, 2024

3 அணிகளுக்கு புதிய கேப்டன்

image

2024 ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக செயல்பட்ட கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்கள் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால், LSG, DC, KKR அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஐபிஎல்லில் சிறந்த வீரர்களாக செயல்படும் இவர்களுக்கு பதில் வேறு யார் யார் கேப்டனாக இருந்தால் சரியாக இருக்கும் என்பதை கமெண்ட் பண்ணுங்க.

News October 31, 2024

ஆங்கிலம் அறிவோம்: Hurricane Vs Tornado

image

Hurricane என்பதற்கும், Tornado என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன? Hurricane என்பதை சூறாவளி என்றும் Tornado என்பதை சுழல் காற்று எனவும் சொல்லலாம். பொதுவாக அட்லாண்டிக் & பசிஃபிக் கடல் பகுதிகளில் தோன்றும் பெருங்காற்றை Hurricane என்கிறார்கள். பலத்த இடி, மின்னல், புயல் ஆகியவை ஒரே நேரத்தில் ஏற்படும்போது Tornado உருவாகிறது. இது குறுகிய நேரத்தில் குறுகிய இடத்தில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாகும்.

error: Content is protected !!