India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சித்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவித்துள்ளார். பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்ததை கண்டு திமுகவினர் நடுங்கி போயிருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். ஆட்சியை தொடரலாம் என்ற கனவு கண்டிருந்த ஸ்டாலினுக்கு தலையில் இடி விழுந்தது போல ஆகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
ஒரேயொரு நிமிடம் ஆபீஸில் இருந்து சீக்கிரம் புறப்பட்டதற்காக வேலை போனால் மனம் எப்படி தவிக்கும்? அப்படித் தான் சீனாவின் குவாங்டாங்கை சேர்ந்த வாங் என்ற பெண் தவித்து போனார். 3 ஆண்டுகள் திறமையாக பணியாற்றியபோதும், ஒரு நிமிடம் சீக்கிரம் புறப்பட்டதற்காக அவரது வேலை பறிக்கப்பட்டது. ஆனால், வாங் விடவில்லை. கோர்ட் படியேறி நியாயம் கேட்க, கம்பெனிக்கு எதிராக தீர்ப்பு வந்தது. உங்கள் கருத்து என்ன?
ChatGPT-யின் மெமரியை மேம்படுத்த புதிய அம்சத்தை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் அறிவித்துள்ளார். இதன் மூலம், பயனர்கள் அளித்த, கேட்ட தகவல்கள் அனைத்தும் முழுவதுமாக ChatGPT-யில் சேமிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ChatGPT-யின் புதிய அம்சத்தால், பயனர்கள் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சம்மரில் வெளியில் சென்று வீட்டுக்கு வந்தவுடன் உடனே பலரும் ஃபிரிட்ஜில் இருந்து ஜில்லென தண்ணியை எடுத்து பருகுவார்கள். ஆனால், இப்படி அதிக ஜில்லென இருக்கும் தண்ணியால், ஆரோக்கியத்திற்கு தீங்கு என்பது தெரியுமா? தொண்டை வலி, தொண்டையில் சதை வளர்ச்சி மற்றும் செரிமான பிரச்சினைகள் வரலாம் என்கின்றனர். அதனால், வெளியே சென்று வந்த பிறகு, ஓவராக ‘ஜில்’லென இருக்கும் தண்ணியை பருக வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.
எழுத்தாளர் சு.விஜயபாஸ்கர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு Dy CM உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், விஜயபாஸ்கரின் அகால மரணம் அதிர்ச்சி அளிப்பதாகவும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார். விஜயபாஸ்கர் எழுதிய ‘உயர்ஜாதியினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?’ நூல் சமூகநீதியை அழுத்தமாக சொல்லும் ஆவணம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். #RIP
பிரபல நடிகை மேகனா ராஜ் நடிகர் விஜய் ராகவேந்திராவை 2வது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்தது. ஆனால், அதில் உண்மையில்லை என இருவருமே மறுத்து விட்டனர். மேகனாவின் கணவர் சிரஞ்சீவி சர்ஜா, கடந்த 2020ல் உயிரிழந்ததை தொடர்ந்து, அவர் தனது குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 430 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
காரம் சுவையை கொடுத்தாலும் அதிகம் எடுத்தால் ஆபத்து என்கின்றனர் டாக்டர்கள். *அளவுக்கு அதிகமான காரம் நிறைந்த உணவை சாப்பிட்டால் மார்பில் தொடர்ந்து எரிச்சல் ஏற்படும். *மிளகாய் பொடியை உணவில் அதிகம் பயன்படுத்தினால் செரிமான பிரச்னை ஏற்படுவதோடு குமட்டல், வாந்தி ஏற்படலாம். *மிளகாய் பொடியை அதிகமாக உட்கொள்வது வாய் புண்களுக்கு வழிவகுக்கும். குறிப்பாக கோடைக்காலம் என்பதால் காரத்தை குறைப்பது நல்லது.
பாஜகவில் தேசிய பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றதும், அண்ணாமலைக்கு கட்சியில் தேசிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது திறமையை மேலிடம் பயன்படுத்த விரும்புகிறது என அமித் ஷாவும் கூறியிருந்தார். இதையடுத்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற அண்ணாமலைக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.
உக்ரைனின் குசும் நகரில் இந்திய தொழிலதிபர் ராஜீவ் குப்தாவின் மருந்து கம்பெனி இயங்கி வருகிறது. குழந்தைகள், முதியவர்களுக்கான மருந்துகள் குடோனில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தது. அதனை ஏவுகணை வீசி ரஷ்யா அழித்ததாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவின் நல்ல நண்பன் என கூறும் ரஷ்யா, வேண்டுமென்றே இதனை செய்ததாகவும் விமர்சித்துள்ளது. ஆனால், ட்ரோன் மூலமே தாக்குதல் நடந்ததாக பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.
மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் RCB, RR அணிகள் இன்று மதியம் 3:30 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன. அதே நேரத்தில், இந்த தொடரில் இதுவரை தோற்காத DC அணியை தோல்வியால் துவண்டு போயுள்ள, MI அணி இரவு 7:30 மணிக்கு எதிர்கொள்கிறது. இந்த 2 மேட்ச்சில் யார் வெற்றி பெறுவாங்க?
Sorry, no posts matched your criteria.