India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று காலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், தி.மலை, அரியலூர், புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, திருப்பூர், நெல்லை, தென்காசியில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது.
விஜய் மீது தனிப்பட்ட வன்மம் தனக்கு இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எடுத்த எடுப்பிலேயே விஜய்யால் எப்படி 30% வாக்குகள் வாங்க முடியும் என கேள்வி எழுப்பிய அவர், எம்ஜிஆர் கட்சித் தாெடங்கும் முன்பே அவர் திமுகவில் இருந்தவர், தேர்தல் அனுபவம் உள்ளவர். ஆனால் விஜய் அப்படியில்லை என்றும் அவர் கூறியுள்ளார். விசிக திமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது லெபனான் நடத்திய ஏவுகணை வீச்சில் 7 பேர் பலியாகினர். லெபனானில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் அடுத்தடுத்து செலுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் 4 வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 1ஆம் தேதி இஸ்ரேல், லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. அதையடுத்து இஸ்ரேல் மக்கள் மீது லெபனானால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது கூறப்படுகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிசோர் ஆதரவு தெரிவித்துள்ளார். கயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1965ஆம் ஆண்டு வரை ஒரே தேர்தல்தான் நடத்தப்பட்டது என்று தெரிவித்தார். ஆதலால் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு சூழல் உகந்ததாக இருந்தது என்றால், விரைந்து அனைத்து தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
▶நவ. 1 (ஐப்பசி 15) ▶ வெள்ளி ▶நல்ல நேரம்: 9:45 AM – 10:30 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நேரம்: 12:15 AM – 1:15 AM, 6:30 PM – 7:30 PM▶ராகு காலம்:10:30 AM – 12:00 PM▶ எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶ திதி: அமாவாசை ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்: வெல்லம் ▶ நட்சத்திரம்: சுவாதி ▶சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.
இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா, 4 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் போட்டி வரும் 8ஆம் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடும் வீரர்களை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது. மார்க்ரம் தலைமையிலான அணியில் கோட்சே, மார்கோ ஜான்சன் ஆகியோர் நீண்ட நாள் கழித்து இணைந்துள்ளனர்.
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் புள்ளிகள் 553 புள்ளிகள் சரிந்து, 79,389 புள்ளிகளாக நிலை காெண்டது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 135 புள்ளிகள் சரிந்து 24,205 புள்ளிகளாக நிலை கொண்டது. இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பப் பெறுவதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
ரஷ்ய ஊடகங்களை கூகுள் மற்றும் யூடியூபில் முடக்கிய குற்றத்துக்காக, கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்ய நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. எவ்வளவு தெரியுமா? undecillion ரூபிள்கள்! டாலர் மதிப்பில் $20,000,000,000,000,000,000,000,000,000,000,000 ஆகும். ரூபாய் மதிப்பில் இதை சொல்லவே முடியாது. இந்த தொகை உலகின் ஒட்டுமொத்த ஜிடிபி மதிப்பைவிட அதிகமாம். அபராதம் கட்டலன்னா தினமும் இந்த தொகை அதிகரிக்குமாம். SHARE IT
மக்களை ஈர்க்க ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வேற லெவலில் இறங்கியுள்ளன. உ.பி., நொய்டாவில், லக்சுரி வில்லா வாங்குபவர்களுக்கு லம்போர்கினி கார் ஃப்ரீ என்கிறார் ரியல் எஸ்டேட் ஓனர் கௌரவ் குப்தா. Lamborghini Urus காரின் விலை ரூ.4 கோடி. வீட்டின் விலையோ ரூ.26 கோடி. கார் ஃப்ரீ என்றாலும் பார்க்கிங் இல்லை. அதுக்கு கூடுதல் ரூ.30 லட்சம் கட்டணம். நம்மூரில் ரியல் எஸ்டேட்காரர்கள் எந்த மாதிரி ஆஃபர்கள் தருகிறார்கள்?
விஜய்யின் நிறைவேறாமல் போன ஆசை பற்றி நடிகர் சதீஸ் பகிர்ந்துள்ளார். ரஜினியின் எந்த படத்தை ரீமேக் செய்ய விரும்புகிறீர்கள் என சதீஸ் கேட்டதற்கு, ‘அண்ணாமலை’ என விஜய் பதில் சொல்லியதாக அவர் தெரிவித்துள்ளார். ஏன் என கேட்டதற்கு, ஒரு தங்கச்சி, ஒரு அம்மா, சாதாரண மனுஷன் எப்படி வாழ்க்கையில ஜெயிக்கிறான்னு இருக்கும். அதனால அது தனக்கு வொர்க்காகும் என விஜய் பதில் சொல்லியதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.