news

News November 1, 2024

நவ. 1: வரலாற்றில் இன்று!

image

*1945 – புரட்சிகர எழுத்தாளர் நரேந்திர தபோல்கர் பிறந்தநாள்.
*1954 – புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
*1956 – மதராஸ் ஸ்டேட் உருவான நாள் (தமிழ்நாடு)
*1959 – தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் மறைந்தநாள்.
*1974 – முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விவிஎஸ் லட்சுமண் பிறந்தநாள்.
* 1986- பிரபல நடிகை இலியானா பிறந்த நாள்.

News November 1, 2024

இந்த மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை

image

நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

News November 1, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: விருந்தோம்பல்
▶குறள் எண்: 87
▶குறள் : இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்
▶ விளக்க உரை: விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
SHARE IT.

News November 1, 2024

ALERT: ரயில் முன்பதிவு நாள் குறைப்பு அமலுக்கு வந்தது

image

ரயிலில் டிக்கெட் அட்வான்ஸ் முன்பதிவு நாள் 60ஆக குறைக்கப்பட்டது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ரயில் டிக்கெட்டை 120 நாள்களுக்கு முன் முன்பதிவு செய்வது அமலில் இருந்தது. அதை 60 நாள்களாக குறைத்த ரயில்வே, நவ.1 முதல் அமலுக்கு வரும் என அறிவித்திருந்தது. அதன்படி, அது அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, 2015 ஏப்ரலில் அட்வான்ஸ் முன்பதிவு நாள்கள் 60இல் இருந்து 120ஆக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 1, 2024

BIG BREAKING: வணிக பயன்பாடு சிலிண்டர் விலை உயர்வு

image

வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ. 61.50 உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று வரை சென்னையில் ₹1903க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அந்த விலை ரூ.61.50 உயர்த்தப்பட்டு ரூ.1964.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜூலை 1இல் விலை குறைக்கப்பட்டது. அதன்பிறகு சிலிண்டர் விலை தாெடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 4 மாதங்களில் ரூ.155 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.

News November 1, 2024

பெரியாரின் பொன்மொழிகள்

image

* முட்டாள்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது.அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும் * ஊரில் பேசிக் கொள்கிறார்கள் என்பது கீழ்த்தரமான தன்மையாகும் * மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம் * ஓய்வு ,சலிப்பு என்பவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன் * தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகி விடுகின்றான்

News November 1, 2024

2031இல் திராவிட கட்சிகள் இல்லாத TN: அண்ணாமலை

image

2031இல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு உருவாகும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்றும், இதில் எந்த மாற்று கருத்து கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை சொல்வது போல் 2031இல் திராவிட கட்சிகள் இல்லாத தமிழ்நாடு உருவாகுமா? அதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீங்க. உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.

News November 1, 2024

O.N.O.E. சாத்தியமற்றது.. கார்கே உறுதி

image

ஒரே நாடு, ஒரே தேர்தல் (O.N.O.E.) சாத்தியமற்றது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மோடி சொல்வதை செய்ய மாட்டார் என்றும், ஏனெனில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைவரின் கருத்தும் ஒன்றாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே சொல்வது குறித்து உங்கள் கமெண்டை கீழே பதிவிடுங்க.

News November 1, 2024

இந்தியாவை அழிக்க முயற்சி: PM மோடி

image

இந்தியாவுக்குள் இருந்தும், வெளியில் இருந்தும் நாட்டை அழிக்க முயற்சி நடப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வலிமையாகவும், திறமையானதாகவும் மாறுவதை விரும்பாத சக்திகள், நாட்டை அழிக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார். இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும், உலக நாடுகள் மத்தியில் இந்தியா மீது எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தவும் அவர்கள் விரும்புவதாகவும் PM மோடி குறிப்பிட்டுள்ளார்.

News November 1, 2024

காலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் மழை

image

இன்று காலை 4 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், தி.மலை, அரியலூர், புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, திருப்பூர், நெல்லை, தென்காசியில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது.

error: Content is protected !!