news

News April 13, 2025

கவர்னர்களுக்கு எதிரான தீர்ப்பு.. மத்திய அரசின் அடுத்த மூவ்

image

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக SC வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. மாநில அரசு இயற்றும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர்கள் மற்றும் குடியரசு தலைவருக்கு காலவரம்பு நிர்ணயித்து SC சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இத்தீர்ப்பை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநில அரசுகள் வரவேற்ற நிலையில், மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

News April 13, 2025

அசுர வளர்ச்சியில் செமி கண்டக்டர் துறை: UBS

image

இந்தியாவில் செமிகண்டக்டர் துறை அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. 2030க்குள் அதன் சந்தை இரட்டிப்பு வளர்ச்சியை எட்டக்கூடும் என நிதி சேவைகள் நிறுவனமான UBS கணித்துள்ளது. 2025 – 2030 வரையிலான அதன் கூட்டு வருடாந்திர வளர்ச்சி (CAGR) 15% ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது ₹4 லட்சம் கோடியாக இருக்கும் செமி கண்டக்டர் சந்தையின் வருவாய் 2030ல் ₹8 லட்சம் கோடிக்கு அதிகமாக உயருமாம்.

News April 13, 2025

செல்வப்பெருந்தகை Dy CM? திமுக கூட்டணியில் சலசலப்பு

image

‘2026-ன் துணை முதல்வர் செல்வப்பெருந்தகை’ என காங்., சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ADMK-BJP கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி இதனை செய்து வருவதாக பலரும் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்க கருத்து என்ன?

News April 13, 2025

அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா?

image

அறிமுக இயக்குநர் விக்னேஷ் இயக்கும் புதிய படத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை மமிதா பைஜுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ‘பிரேமலு’ வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடித்து வருவதாலும், மேலும், ஒப்புக்கொண்ட படங்கள் லைன்அப்பில் இருப்பதாலும், அர்ஜுன் தாஸுக்கு மமிதா ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு குறைவே எனக் கூறப்படுகிறது.

News April 13, 2025

அடுத்த 10 நாள்கள் முக்கியம்.. ஒதுங்கியே இருங்க: நிதின்

image

அடுத்த 10 நாள்களுக்கு பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என Zerodha நிறுவன CEO நிதின் காமத் அறிவுறுத்தியுள்ளார். அடுத்த 10 நாள்களில் அரசு விடுமுறைகளை தவிர்த்து 4 நாள்கள் தான் வர்த்தக நாள் எனவும், சந்தையின் ஏற்ற இறக்கமான சூழலில் இருந்து ஒதுங்கி இருக்கவும் அவர் கூறியுள்ளார். வெற்றிகரமான வர்த்தகத்திற்கு, சந்தை நிலையை கவனத்தில் கொண்டு நிதானமாக செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 13, 2025

நீங்களும் Phone பின்னாடி பணம் வைக்கிறீங்களா..?

image

அப்படினா போன் வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம். அட ஆமாங்க! ரூபாய் நோட்டுகளில் Calcium Carbonate இருக்கிறது. இதனை, பட்டாசுகளிலும் பயன்படுத்துவார்கள். காலை எழுந்ததில் இருந்து நைட் தூங்கும் வரைக்கும், போனே கதி என இருப்பதால், போன் அதிக ஹீட்டாகும். அந்த நேரத்தில், ரூபாய் நோட்டு இருந்தால், போன் தீப்பிடித்து எரியலாம். ஏன் போனேக்கூட சில நேரங்களில் வெடித்து விடலாம். கொஞ்சம் கவனமா இருங்க..!

News April 13, 2025

புதிய ரேஷன் கார்டு விநியோகம் குறைப்பு.. பின்னணி என்ன?

image

புதிய ரேஷன் கார்டு விநியோகம் 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளது. 2022-ல் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 40,000 – 50,000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்தாண்டு 1.79 லட்சம் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. புதிதாக ரேஷன் கார்டு பெறுவோர் ₹1,000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதை தடுக்கவே புதிய கார்டு வழங்குவதை அரசு தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News April 13, 2025

தள்ளிப்போகும் ‘வாடிவாசல்’ ஷூட்டிங்

image

‘வாடிவாசல்’ படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்து இருந்தார். ஆனால், திரைக்கதை பணிகள் இன்னும் முழுமை அடையாததால், வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஷூட்டிங்கை தள்ளிவைக்க கோரி இப்படத்தின் இயக்குநர் தாணுவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் VFX காட்சிகள் அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில், இசையமைப்பு பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன.

News April 13, 2025

புழுதி புயல்: 400 விமானங்கள் பாதிப்பு

image

தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட புழுதி புயலால், கடந்த 2 நாள்களில் 400 விமானங்கள் பாதிப்படைந்துள்ளது. டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 350 விமானங்கள், சில மணி நேரம் தாமதமாக இயக்கப்பட, டெல்லிக்கு வர வேண்டிய 40 விமானங்கள் பிற விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். டெல்லி விமான நிலையம் நாளொன்றுக்கு 1,300 விமானங்களையும், 2 லட்சம் பயணிகளையும் கையாள்கிறது.

News April 13, 2025

100 நாள்களில் சவரனுக்கு ₹12,080 உயர்ந்த தங்கம்

image

தங்கம் விலை கடந்த 100 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹12,080 அதிகரித்துள்ளது. கடந்த ஜன.3ல் 22 கேரட் ஒரு கிராம் ₹7,260-க்கும், சவரன் ₹58,080-க்கும் விற்பனையான நிலையில், 100-வது நாளான இன்று(ஏப்.13) ஒரு கிராம் ₹8,770-க்கும், சவரன் ₹70,160-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் ஒரு கிராம் 100 ரூபாயில் இருந்து 110 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

error: Content is protected !!