news

News November 1, 2024

இம்மாதம் அமலாகும் 5 முக்கிய மாற்றங்கள்

image

*SBI கடன் அட்டைகளுக்கான பைனான்ஸ் கட்டணங்கள் 3.75%ஆக அதிகரிக்கப்பட்டிருப்பது இன்று அமலாகிறது *ICICI கிரெடிட் கார்டுகள் திருத்த விதிகள் நவ.15 முதல் அமலாகின்றன * ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாளாக குறைக்கப்பட்டது இன்று அமலாகிறது *உள்ளூர் பணப்பரிவர்த்தனைக்காக RBI-யால் அறிவிக்கப்பட்ட விதிகள் இன்று அமலாகின்றன * வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று உயர்ந்தது.

News November 1, 2024

காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

image

தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, நவம்பர் முதல் வார இறுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் நவ. 7 முதல் 11 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என்றும் முன்னறிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

News November 1, 2024

பல் வலியா? இதை கொஞ்சம் தெரிஞ்சுகோங்க

image

பல் வலியால் அவதிப்படுகிறீர்களா ? அந்த வலிக்கு வீட்டில் சமையலுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டை வைத்தே தீர்வு காண முடியும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது எப்படி என தெரிந்து கொள்வோம். பூண்டை நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு அதை பல்வலி உள்ள இடத்தில் பற்கள் அல்லது ஈறுகள் மீது தடவினால் வலி குணமாகும் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். SHARE IT.

News November 1, 2024

உலகில் மிக தொலைவு செல்லும் ஏவுகணை எது தெரியுமா?

image

உலகிலேயே மிக தொலைவு செல்லும் ஏவுகணை எது, அது எந்த நாட்டிடம் உள்ளது என்பது குறித்து இங்கு தெரிந்து காெள்வோம். உலகிலேயே மிக தொலைவு செல்லும் ஏவுகணை, R-36M ஏவுகணையாகும். அந்த ஏவுகணை உலக வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யாவிடம் உள்ளது. R-36M ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. ரஷ்யாவில் இருந்து செலுத்தப்பட்டால் 16,000 கி.மீ. பயணித்து எதிரி நாட்டை தாக்கும் திறன் உடையது.

News November 1, 2024

ஆதாரில் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டுள்ளதா?

image

ஆதாரில் மொபைல் எண் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்ய UIDAI வசதி செய்து தந்துள்ளது. அதன்படி, UIDAI-வின் இணையதள பக்கமான https://myaadhaar.uidai.gov.in/verify-email-mobile/en செல்ல வேண்டும். பின்னர் ஆதார் எண், மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். தொடர்ந்து கேப்ட்சாவை உள்ளிட்டு ஓகே கொடுத்தால், மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இதை வைத்து உறுதி செய்யலாம். SHARE IT

News November 1, 2024

ஸ்பெயின் வெள்ள பலி 150ஐ தாண்டியது

image

ஸ்பெயினில் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 150ஐ தாண்டியுள்ளது. வாலன்சியா நகரில் சில தினங்களுக்கு முன்பு கனமழையால் கடும் வெள்ளம் ஏற்பட்டது. யூரோப் நாடுகளில் அண்மையில் நேரிட்ட மிகப்பெரிய இயற்கை சீற்றமாக இது கருதப்படுகிறது. வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 158ஆக தற்போது அதிகரித்துள்ளது. மேலும் பலரை காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

News November 1, 2024

3ஆவது டெஸ்ட்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா?

image

இந்தியா, நியூசி. அணிகள் இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. முதல் 2 போட்டிகளில் நியூசி. அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த சூழ்நிலையில், 3ஆவது டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்கவுள்ளது. ஏற்கெனவே 2 போட்டிகளில் தோற்றதால் இந்திய அணி விமர்சனத்துக்கு ஆளானது. இதனால் 3ஆவது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

News November 1, 2024

ஆஸ்திரேலிய அணிக்கு தண்ணி காட்டிய ஜாம்பவான்

image

இந்திய அணியில் முன்பு சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோரின் ஆதிக்கமே இருந்தது. இவர்களுக்கு மத்தியில் வி.வி. எஸ் லட்சுமண் தனக்கென தனி பாணியை வகுத்து ரன்களை குவித்தார். முன்னணி வீரர்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியபோது இவர் அசத்தினார். 2001இல் நடந்த டெஸ்டில் தனி ஆளாய் 281 ரன் குவித்தது இன்றும் கண் முன் நிழலாடும். அவருக்கு இன்று பிறந்தநாள். உங்கள் வாழ்த்தை கீழே பதிவிடுங்க.

News November 1, 2024

நவ. 1: வரலாற்றில் இன்று!

image

*1945 – புரட்சிகர எழுத்தாளர் நரேந்திர தபோல்கர் பிறந்தநாள்.
*1954 – புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
*1956 – மதராஸ் ஸ்டேட் உருவான நாள் (தமிழ்நாடு)
*1959 – தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் மறைந்தநாள்.
*1974 – முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விவிஎஸ் லட்சுமண் பிறந்தநாள்.
* 1986- பிரபல நடிகை இலியானா பிறந்த நாள்.

News November 1, 2024

இந்த மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை

image

நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

error: Content is protected !!