news

News November 1, 2024

பொருளாதார நிபுணர் பிபேக் டெப்ராய் காலமானார்

image

PM மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், பொருளாதார நிபுணருமான பிபேக் டெப்ராய் (69) காலமானார். உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவரது உயிர் பிரிந்தது. பத்ம ஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள அவர், 2019 வரை NITI ஆயோக் குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். அவரது சாதனைகளை நினைவுகூர்ந்து PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

News November 1, 2024

ஐபிஎல் ரிட்டென்ஷன்: பேட்டர்ஸ் தான் முக்கியமா?

image

ஐபிஎல் 2025 தொடருக்கு வீரர்களை தக்கவைக்க நேற்று தான் கடைசி நாளாகும். நேற்றிரவு வெளியான அறிவிப்பில், பெரும்பாலான அணிகள் பேட்டர்களையே தக்க வைத்துள்ளன. மொத்தத்தில் 28 பேட்ஸ்மென்களும் 11 பவுலர்களும் அந்தந்த அணிகளால் ரீட்டெயின் செய்யப்பட்டனர். மேலும், 7 ஆல்ரவுண்டர்களும் தக்கவைக்கப்பட்டனர். ஆனால், பேட்ஸ்மென்கள் தான் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்தை கமெண்ட் செய்யுங்க.

News November 1, 2024

ரஷ்யாவில் வ.கொரிய வீரர்கள்; காண்டான அமெரிக்கா!

image

ரஷ்யாவில் வடகொரியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை தனக்காக உக்ரைனில் போரிட ரஷ்யா ஈடுபடுத்தலாம் என ஐநாவில் உக்ரைன் அச்சம் தெரிவித்தது. இதற்கு ஆதரவாக அமெரிக்காவும், வடகொரிய வீரர்கள் உடனே திரும்பப் பெறப்படவில்லை எனில், பிணங்களாக திரும்புவர் என எச்சரித்தது. இதற்கு ரஷ்யா, நீங்கள் உக்ரைனுக்கு பல நாட்டு ராணுவத்தை அனுப்பலாம், நாங்கள் செய்யக்கூடாதா எனக் கேள்வி எழுப்பியது.

News November 1, 2024

Recipe: காஜூ கத்லி செய்யலாம் வாங்க!

image

முந்திரி பருப்பை 6 மணிநேரம் நீரில் ஊறவைத்து, நைஸாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்விட்டு, முந்திரி மாவை கொட்டி நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும் (நிறம் மாறக்கூடாது). பின் அதனுடன் குங்குமப்பூ, ஏலக்காய் பொடி, சர்க்கரை பாகு சேர்க்கவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு இந்த கலவை வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். ஆறியவுடன் டைமண்ட் வடிவில் அதை துண்டுகளாக வெட்டினால் சுவையான காஜூ கத்லி ரெடி.

News November 1, 2024

ஆன்லைனில் வாங்குவதில் இப்படி ஒரு மோசடியா? உஷார்!

image

ஃபிளிப்கார்ட்டில் ஒரே பொருளுக்கு இரண்டு விலைகளா? ஆம், கேஷவ் என்பவர் மொகோபரா சூட்கேஸ் ஒன்றை வாங்க Android, Apple (iOS) என இரு போன்களில் Search செய்துள்ளார். அப்போது அதன் விலை Android-ல் ₹4,119 என்றும், Apple-ல் ₹4,799 எனவும் காட்டியுள்ளது. இது ஏன் என்று அவர் கேட்க, பல காரணிகள் அடிப்படையில் விற்பனையாளர் இப்படி விலையை நிர்ணயிப்பதாக ஃபிளிப்கார்ட் விளக்கம் அளித்துள்ளது. நீங்க எதில் ஆர்டர் பண்றீங்க?

News November 1, 2024

நவ.6ல் அதிமுக மா.செ கூட்டம்

image

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நவ. 6ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. EPS தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாநிலச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அக்கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

News November 1, 2024

APPLY NOW: வங்கியில் 592 பணியிடங்கள்!

image

Bank of Barodaஇல் காலியாக உள்ள 592 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Specialist Officer பணிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Any Degree, B.E, B.Tech, MBA, CA, Post Graduate. வயது வரம்பு: 22-50. சம்பளம்: ₹40,000. தேர்வு முறை: நேர்காணல் & சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: நவ.19. கூடுதல் விவரங்களுக்கு <>இந்த<<>> லிங்க்கை கிளிக் செய்யவும்.

News November 1, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அரசியலமைப்புக்கு எதிரானது என ஜப்பான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ➤இங்கிலாந்தின் கம்பிரியாவில் உள்ள அணுசக்தி கப்பல் கட்டுமான தளத்தில் பெரும் தீவிபத்து நேரிட்டது. ➤பொலிவியா அதிபர் லூயிசு கட்டகோராவுக்கு எதிராக லா பாசிலில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். ➤உக்ரைனுக்கு எதிரான போரில் சண்டையிட வடகொரிய வீரர்கள் 10,000 பேர் ரஷ்யா சென்றடைந்தனர்.

News November 1, 2024

காய்ச்சலை விரட்டி அடிக்கும் ஆடாதொடை தேநீர்

image

மழைக்காலத்தில் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சளி, தலைவலி, உடல்சோர்வு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுவோர் ஆடாதொடை தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆடாதொடை இலை, சுக்கு, திப்பிலி, மிளகு, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான ஆடாதொடை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.

News November 1, 2024

ஆரம்பத்திலேயே அட்டாக்கில் இறங்கிய ஆகாஷ்

image

இந்தியா – நியூசி., இடையேயான 3-வது மற்றும் இறுதி டெஸ்டில் பேட்டிங்கில் இறங்கிய நியூசி., 1 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. 3-வது ஓவரில் ஆகாஷ் தீப் வீசிய பந்தில் lbw முறையில் கான்வே அவுட்டானார். இந்திய அணியில் ரோகித், ஜெய்ஸ்வால், கில், கோலி, சர்ப்ராஸ், பண்ட், சுந்தர், அஷ்வின், ஆகாஷ் தீப், சிராஜ் இடம்பெற்றுள்ளனர். 2-0 என தொடரை நியூசி., கைப்பற்றி உள்ள நிலையில், இந்தியா ஆறுதல் வெற்றிபெறுமா?

error: Content is protected !!