India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், தெற்கிலும் வடக்கிலும் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் இன்று எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக போராடிய அனைவரையும் வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று 10 மணிக்கு <<14502741>>GK <<>>வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) லாகூர் (AQI-708) 2) Central Intelligence Agency 3) மரகதவள்ளி டேவிட் 4) Common Sense (Thomas Paine) 5) இந்திய ராட்சத அணில் 6) தொற்றுநோயியல் 7) வள்ளலார். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் கரன்சியை தயாரிக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா? ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க ₹1.11 செலவாகும். இது நாணய மதிப்பைவிட அதிகம். 5 ரூபாய் நாணயத்திற்கு ₹3.69 தயாரிப்பு செலவாகிறது. ரூபாய் தாள்களைப் பொறுத்தவரை ₹10-ஐ தயாரிக்க ₹0.96, ₹50-க்கு ₹1.13, ₹100-க்கு ₹1.77 செலவிடப்படுகிறது. நாட்டில் UPI பரிவர்த்தனை அதிகளவில் நடந்தாலும், இன்னும் ₹34.7 லட்சம் கோடி பணம் புழக்கத்தில் உள்ளது.
நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சேலம், நாமக்கல், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் ஆகிய 25 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்றும் கூறியுள்ளது.
விஜய்யின் அரசியல் வருகை INDIA கூட்டணியை மேலும் வலுவடையவே செய்யும் என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு என்ற விஜய்யின் பேச்சால், INDIA கூட்டணியில் எந்த சலனமும் இல்லை என்று கூறிய அவர், கூட்டணி வலுவாக உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், மக்கள் தரும் முடிவை பொறுத்து 2026ல் ஆட்சி அதிகாரப் பகிர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடந்த ஐபிஎல் அணிகளின் வீரர்கள் ரிட்டென்ஷனில், தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.4 கோடி கொடுத்து தக்கவைத்தது. கடந்த ஆண்டில் தோனிக்கு ரூ.12 கோடி கொடுத்த நிலையில், இந்த ஆண்டு வெறும் ரூ.4 கோடியா என கேள்வி எழலாம். ஐபிஎல் விதிமுறைப்படி, கடந்த 5 ஆண்டுகளில் எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாதவரை அன்கேப்ட் வீரராக மட்டுமே கருத முடியும். அதனால் தான் தோனிக்கு குறைந்த தொகையாம்.
புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து மீண்டுவர விரும்புவோர் புகைப்பதை உடனடியாக நிறுத்தினால் பாதிப்பு ஏற்படுமென வெளியான தகவலை மருத்துவர்கள் முழுமையாக மறுக்கின்றனர். அதாவது, 100இல் 10 பேருக்கு Nicotine Withdrawal Symptom பாதிப்புகள் ஏற்படலாம். அதனை மருந்துகளை உட்கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம். ஆகவே, புகைபிடிப்பதை படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும் என இல்லை. உடனே நிறுத்தலாம் என்றும் கூறுகின்றனர்.
டாஸ்மாக்கில் மதுவை கூடுதல் விலைக்கு விற்றால் மேற்பார்வையாளர் உள்பட கடையில் பணிபுரியும் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட பாட்டில் ஒன்றுக்கு ₹10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருவதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கூடுதல் விலை விற்பனை புகாருக்கு, சேல்ஸ்மேன் மீது மட்டும் தான் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஐபிஎல் 2025 ரிட்டென்ஷனில், இளம் வீரர்களை அணிகள் அதிக விலைக்கு தக்கவைத்துள்ளன. 2024-ல் வெறும் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட RR விக்கெட் கீப்பர் துருவ் ஜுரல், இப்போது ₹14 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். இது 6900% அதிகம். இதேபோல் பத்திரனா (₹13 cr), ரஜத் பட்டிடார் (₹11 cr), மயங்க் யாதவ் (₹11 cr), சாய் சுதர்சன் (₹8.5 cr), ஷஷாங்க் சிங் (₹5.5 cr), ரிங்கு சிங் (₹13 cr) தொகைக்கு ரீட்டெயின் செய்யப்பட்டனர்.
பொதுத்துறை & தனியார் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கு அளிக்கும் தீபாவளி பரிசுகள் & போனஸ் தொகைக்கும் வருமான வரி விதிக்கப்படும். வருமான வரிப் பிரிவு 17இன் கீழ், போனஸ் தொகை ஊழியரது சம்பளத்தோடு இணைக்கப்பட்டு, மொத்த தொகைக்கும் வருமான வரி அடுக்குக்கு ஏற்ப, உரிய வருமான வரி பிடித்தம் செய்யப்படும். தீபாவளி பரிசின் மதிப்பு ₹4,999-க்குள் இருந்தால், பரிசின் மதிப்பில் ஆவணங்களைக் காட்டி அதற்கு விலக்கு கோரலாம்.
Sorry, no posts matched your criteria.