news

News November 3, 2024

சபரிமலையில் மீண்டும் ஸ்பாட் புக்கிங் அறிமுகம்!

image

சபரிமலையில் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை காலங்களில் பெருந்திரளான கூட்டம் வரும். இதனையடுத்து நெரிசலை கட்டுப்படுத்த ஸ்பாட் புக்கிங் மூலம் 10,000 பக்தர்களை அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பம்பை, எருமேலி, பீளமேடு பகுதிகளில் இந்த ஸ்பாட் புக்கிங் மையங்கள் செயல்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் 70,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

News November 3, 2024

சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு

image

திருச்சூர் பூரம் விழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸ் பயன்படுத்திய விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருச்சூர் பூரம் விழாவுக்கு அதிகாலை 3 மணியளவில் ஆம்புலன்ஸில் சென்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், நோயாளிகளை அழைத்து செல்ல பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸில் அவர் பயணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

News November 3, 2024

மீன்களின் விலை குறைந்தது

image

ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு உள்ளிட்ட மீன் சந்தைகளில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகை, அமாவாசை உள்ளிட்ட காரணங்களால் கடந்த 3 நாள்களாக மீன் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், இன்று மீன்களின் விலை குறைந்து காணப்படுகிறது. வஞ்சரம், கொடுவா, சங்கரா, பாறை உள்ளிட்ட மீன்களின் விலை கிலோவுக்கு ₹100 முதல் ₹150 வரை குறைந்ததால், அசைவப் பிரியர்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச்செல்கின்றனர்.

News November 3, 2024

3 விக்கெட்: தடுமாறும் இந்திய அணி

image

நியூசி.,க்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி தடுமாறி வருகிறது. 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து திணறுகிறது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் (11) மீண்டும் ஏமாற்றமளிக்க, கில் (1), கோலி (1) ஆகியோரும் 1 ரன்னில் வெளியேறினர். தற்போது ஜெய்ஸ்வால், பந்த் ஆகியோர் கிரீஸில் உள்ளனர்.

News November 3, 2024

Recipe: பப்பாளிப் பழ அவல் கேசரி செய்யலாம் வாங்க!

image

வாணலியில் வெள்ளை அவலை நன்றாக வறுத்து, ரவை பதத்தில் அரைத்து தூளாக்கி கொள்ளவும். அடிகனமான கடாயில் 2 தேக்கரண்டி நெய், கொதிக்க வைத்த பாலை ஊற்றி, பப்பாளிக் கூழ், சர்க்கரை, பொடித்த அவல், ஏலக்காய் பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து, இந்த கலவையில் நெய்யில் பொன்னிறமாக வறுத்த முந்திரி, பாதாம், வெள்ளரி விதையை சேர்த்து இறக்கினால் சுவையான பப்பாளிப் பழ அவல் கேசரி ரெடி.

News November 3, 2024

சற்றுநேரத்தில் வருகிறார் விஜய்

image

சென்னை பனையூரில் நடைபெறும் தவெக ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், பொதுக்கூட்டம், சுற்றுப்பயணம், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. சீமான் உள்ளிட்டோரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது குறித்தும் அறிவுரை வழங்கப்படுகிறது.

News November 3, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகின் மிகப்பெரிய பெருங்கடல் எது? 2) NIT என்பதன் விரிவாக்கம் என்ன? 3) இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ பயிற்சியாளர் யார்? 4) சென்னை பல்கலைக்கழகம் எந்த ஆண்டில் நிறுவப்பட்டது? 5) சுறாவுக்கு எத்தனை பற்கள் உள்ளன? 6) ஈரப்பதத்தை அளவிட உதவும் கருவி எது? 7) Cake என்பதற்கான தமிழ் சொல் என்ன? 8) Archaeology என்றால் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News November 3, 2024

சஷ்டி: 12 ராசிக்காரர்களும் முருகன் கோயில்களும் (1/2)

image

ஒருவர் தனது ஜென்ம ராசிக்குரிய முருகனின் திருத்தலத்திற்கு சென்று வழிபட்டால் அவருக்கு ஏற்படும் துன்பங்கள் விலகும். 12 ராசிக்காரர்களுக்கு உரிய முருகன் திருத்தலங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். ➤மேஷம்: திருத்தணி மலைநாதர் ➤ரிஷபம்: திருவிடைக்கழி காமேசுவரர் ➤மிதுனம்: அழகாபுத்தூர் சங்கு சக்கர முருகன் ➤கடகம்: திருப்போரூர் கந்தசாமி ➤சிம்மம்: பொன்னேரி சுப்ரமணியர் ➤கன்னி: உத்திரமேரூர் பாலசுப்பிரமணியர்.

News November 3, 2024

சஷ்டி: 12 ராசிக்காரர்களும் முருகன் கோயில்களும் (2/2)

image

➤துலாம்: சிக்கல் சிங்கார வேலன் ➤விருச்சிகம் : எட்டுக்குடி முருகன் ➤தனுசு: திருவையாறு தனுசு சுப்ரமணியர் ➤மகரம்: மருதமலை முருகன் ➤கும்பம்: வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரர் ➤மீனம்: திருச்செந்தூர் சுப்ரமணியர். 12 ராசிக்காரர்களும் துலா ராசியில் சூரியன் நீச்சமான நிலையில் இருக்கும் சஷ்டி காலத்தில் முருகனுக்கு விரதமிருந்து, கோயிலிலுள்ள தீர்த்தத்தில் குளித்து கந்தனை வணங்கினால் கோடி நன்மைகள் பெறலாம்.

News November 3, 2024

மாதவனின் ‘அதிர்ஷ்டசாலி’ first look வெளியானது

image

மித்ரன் ஆர். ஜவஹர், மாதவன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அதிர்ஷ்டசாலி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது, மறைந்த தொழிலதிபரான ஜி.டி நாயுடுவின் வாழ்க்கை கதையை தழுவி உருவாகும் படமாகும். இதில், மடோனா, தன்ஷிகா, ராதிகா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

error: Content is protected !!