news

News November 3, 2024

பிறந்த மண்ணில் அசத்திய அஜாஸ் படேல்!

image

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் மும்பையில் பிறந்து நியூசிலாந்தில் குடியேறியவராவார். தான் பிறந்த மண்ணிலேயே சிறப்பாக விளையாடி மேன் ஆப் தி மேட்ச் விருதும் வாங்கியுள்ளார். பிறந்த மண்ணில் சிறப்பாக ஆடியது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

News November 3, 2024

அதிகம் குளிர்பானம் அருந்துபவர்கள் கவனத்திற்கு

image

குளிர்பானங்களை அதிகம் குடித்தால், எலும்புகள் பலவீனம் அடைந்து எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்னையை பெண்கள் அதிகமாக எதிர்கொள்வதாக தெரிகிறது. குளிர்பானங்களில் உள்ள காஃபின், உடலில் கால்சியத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதன் காரணமாக எலும்புகளில் முறிவு ஏற்படுகிறது. எனவே குளிர்பானங்களை அதிகமாக குடிக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.

News November 3, 2024

பிரியங்கா கிடைத்தது பாக்கியம்: ராகுல் MP

image

வயநாட்டின் சிறந்த MP என்ற பெயரை பிரியங்கா பெறுவார் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், மக்கள் அனைவருக்கும் சிறந்த சகோதரியாகவும், தாயாகவும், மகளாகவும் பிரியங்கா இருப்பார் என்றார். மேலும், வயநாட்டின் முழுத் திறனையும் வெளிக்கொண்டு வருவதில் அவர் கவனம் செலுத்துவதாகவும், தனது சகோதரியாக அவர் கிடைத்தது பாக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 3, 2024

கூட்டணி வேண்டாம்: விஜய்யிடம் சொன்ன தொண்டர்கள்

image

இன்றைய தவெக செயற்குழுக் கூட்டத்தில் விஜய் சற்று அதிரடி காட்டினார். பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை திமுக ஏமாற்றுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், கட்சி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்த விஜய், அவர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, கூட்டணி இன்றி தனித்து போட்டியிடுவோம் என பல நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக விரைவில் முடிவெடுப்போம் என விஜய் கூறியதாக தெரிகிறது.

News November 3, 2024

காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: PM மோடி

image

இந்தியாவில் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது பாராட்டத்தக்கது என PM மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அர்ப்பணிப்பு, புதுமையான முயற்சிகளின் விளைவு ஆகியவையே காசநோயால் மக்கள் பாதிக்கப்படுவது குறைந்துள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி அனைவரும் பயணிப்போம் எனவும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார். காசநோய்க்கு எதிரா போராடுவீர்களா? Cmt Here.

News November 3, 2024

வேலையில் இருந்தாலும் பென்ஷன்!! எப்படி தெரியுமா?

image

ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கவே 1995ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது, EPS (ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்) திட்டம். இதனை நிர்வகிப்பது EPFO (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு). இந்த திட்டத்தின் சிறப்புகளில் ஒன்று தான் பணியில் இருக்கும் போதே ஊதியம் பெறுவது. ஓய்வு பெறும் வயதை கடந்து,
அதாவது 58 வயதுக்கு பிறகும் ஒருவர் பணியில் தொடருவார் என்றால் அவருக்கு பென்ஷன் தொடர்ந்து வரும்.

News November 3, 2024

ஒன்றிய அரசுக்கு உரிமையே இல்லை: கண்சிவந்த விஜய்

image

தவெக மாநாட்டுக்கு அடுத்தப்படியாக, அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் மத்திய அரசை ஒன்றிய அரசு என திமுக பாணியில் தவெக குறிப்பிட்டுள்ளது. அதாவது, தமிழ் மொழி சார்ந்த விஷயங்களில் தலையிட ஒன்றிய அரசுக்கு உரிமையே இல்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல, பொய் வாக்குறுதிகளால் மக்களை திமுக அரசு ஏமாற்றுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 3, 2024

மூலிகை: யானை பலம் அளிக்கும் யானை நெருஞ்சில்

image

முகப்பரு, அரிப்பு & தோல் எரிச்சல் போன்ற தோல் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றல் யானை நெருஞ்சிலுக்கு இருப்பதாக நவீன ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பெடலிடின், டினாடின், ஹிஸ்டைடின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இந்த செடியை 200ml நீரிலிட்டு 50ml ஆக சுண்டும்வரை கொதிக்க வைத்துக் குடித்துவந்தால், நீர்த்துப்போன விந்தணு கெட்டிப்படுவதோடு, உடலும் யானை பலம் பெறும் எனவும் சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது.

News November 3, 2024

உ.பி முதல்வருக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது

image

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மிரட்டல் செய்தி அனுப்பிய பெண்ணை மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தானேவில் உல்லாஸ் நகரைச் சேர்ந்த பாத்திமா கான் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் விசாரணை மற்றும் உடல் சோதனைக்காக அவர் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

News November 3, 2024

பெற்ற மகனின் விலை ₹9000

image

வங்கிக் கடனை செலுத்துவதற்காக பெற்ற மகனை ₹9000க்கு தாயார் விற்பனை செய்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிஹார் மாநிலம் பச்சிரா கிராமத்தைச் சேர்ந்த ஹரூன்-ரெஹானா தம்பதிக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் குர்ஃபான் என்ற ஒன்றரை வயது குழந்தையை, வங்கிக் கடனின் தவணை செலுத்துவதற்காக ₹9000க்கு விற்றுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!