news

News April 13, 2025

RSS ஆதரவை பெறுவாரா நயினார்?

image

‘கேசவனை நாம் வணங்குவோம்’ என்ற RSS பாடலைப் பாடி, தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்மூலம், RSS ஆதரவைப் பெற அவர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. திராவிட பின்னணியில் இருந்து வந்த நயினாரை, தலைவராக கொண்டுவர RSS தயக்கம் காட்டியது. அதேபோல், அவரும் இதுவரை தீவிர இந்துத்துவ அரசியலை பேசியதில்லை. இருப்பினும், அமித்ஷா RSS-ஐ சமாதானம் செய்து அவரை பொறுப்பிற்கு கொண்டு வந்துள்ளார்.

News April 13, 2025

சித்திரை மாதப்பிறப்பு: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

image

சித்திரை மாத பிறப்பையொட்டி குமரியின் தோவாளை, திண்டுக்கல்லின் நிலக்கோட்டை சந்தைகளில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தோவாளை சந்தையில் நேற்று ₹1,500க்கு விற்பனையான பிச்சிப்பூ இன்று ₹2,000க்கும், ₹600க்கு விற்பனையான மல்லிகைப்பூ ₹1,000க்கும் விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிலோ முல்லைப்பூ – ₹600, ஜாதிப்பூ- ₹500 சம்பங்கி – ₹150, வாடாமல்லி ₹120, சிவப்பு கேந்தி – ₹90 என விலை உயர்ந்துள்ளது.

News April 13, 2025

அமெரிக்காவில் ஹிந்துக்களை அவமதித்தால் தண்டனை

image

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் ஹிந்து மதம் குறித்து அவதூறு பரப்புபவர்களை தண்டிக்க புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் செனட் சபையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்துள்ளனர். இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டதும் அமலுக்கு வரும். அமெரிக்காவில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக ஒரு மசோதா தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை.

News April 13, 2025

BYE என்பதன் அர்த்தம் தெரியுமா?

image

‘Be With You Everytime’ என்ற சொற்றொடரின் சுருக்கம் தான் BYE. இது 16ஆம் நூற்றாண்டில் ‘கடவுள் உங்களுடன் இருப்பார்’ (God Be With You) என்ற சொற்றொடரில் இருந்து பெறப்பட்டது. ஆரம்பத்தில் இந்த வார்த்தை மத ஆசீர்வாதங்களையும், பிரிந்து செல்லும் மக்களுக்கு தெய்வீக பாதுகாப்பின் அவசியத்தையும் எதிரொலித்தது. இருப்பினும், காலப்போக்கில் ‘குட்பை’ விடைபெறுதலுக்கான உலகளாவிய வார்த்தையாக மாறிவிட்டது.

News April 13, 2025

கோலிவுட் பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம்!

image

தமிழ் சினிமா கடந்த 10 நாள்களில் மட்டும் 4 நடிகர்களை இழந்துள்ளது. கடந்த 4-ம் தேதி நடிகர் ரவிக்குமார் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். அவர் மறைந்து 2 நாள்களுக்குள் நடிகர் சஹானா ஸ்ரீதர் மறைந்தார். நேற்று நடிகர் பிரபாகரன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், இன்று(ஏப்.13) பிரபல நடிகரும், இயக்குநருமான கலைப்புலி ஜி.சேகரன் காலமானார். நடிகர்களின் அடுத்தடுத்த மரணம் கோலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #RIP

News April 13, 2025

Health Tips: கிவி பழத்தில் இத்தனை நன்மைகளா?

image

வைட்டமின் சி அதிகமுள்ள கிவி பழம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மற்ற பழங்களை விட இதில் குறைவான அளவே கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் விரும்பி சாப்பிடலாம். இதில் இருக்கும் பொட்டாசிய சத்துகள், இதய துடிப்பை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. பெண்கள் எளிதாக கருவுறும் தன்மையையும் கிவி பழம் கொடுக்கிறது. சருமத்தை இளமையாக வைக்கவும் இது உதவும். SHARE IT.

News April 13, 2025

IPL: ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்..!

image

ராய்ப்பூர் மைதானத்தில் சற்றுநேரத்தில் (பிற்பகல் 3.30 மணி) தொடங்கும் போட்டியில் பெங்களூரு – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டியில் பச்சை நிற ஜெர்சியுடன் பெங்களூரு அணி களமிறங்குகிறது. நடப்பு சீசனில் 3 போட்டிகளில் வென்றுள்ள பெங்களூரு புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. 2 வெற்றிகளை பெற்று ராஜஸ்தான் 7-வது இடம் பிடித்துள்ளது. இன்றைய போட்டியில் வாகை சூடப் போவது யார்?

News April 13, 2025

பொம்மைகள் ஏற்றுமதி: கோலோச்சப் போகும் இந்தியா!

image

உலகளாவிய அளவில் பொம்மைகள் ஏற்றுமதியில் முதலிடம் பிடிப்பதற்கான கதவுகள் இந்தியாவுக்கு திறக்கப்பட்டிருக்கிறது. அதற்கு காரணம் அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். இத்தனை காலம் சீனா கோலோச்சிய நிலையில், அமெரிக்கா விதித்த 145% வரி அதன் ஏற்றுமதியை பாதித்துள்ளது. இதனால், அந்த இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

News April 13, 2025

தொண்டர்கள் சோர்ந்து போக வேண்டாம்: ராமதாஸ்

image

இன்னும் சில தினங்களில் எல்லா சலசலப்புகளும் சரியாகிவிடும் என பாமக மூத்த நிர்வாகிகளிடம் ராமதாஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தைலாபுரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாமக தொண்டர்கள் யாரும் சோர்ந்து போக வேண்டாம் எனவும், சித்ரா பௌர்ணமி மாநாட்டை அனைவரும் ஒன்றிணைந்து நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இதேவேளையில், சென்னை இல்லத்தில் அன்புமணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

News April 13, 2025

பிரபல நடிகர் கலைப்புலி ஜி.சேகரன் காலமானார்

image

பிரபல நடிகரும், இயக்குநருமான கலைப்புலி ஜி.சேகரன் (73) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உளவாளி, ஜமீன் கோட்டை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், 2000-ல் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவரான பிறகு சினிமாவில் விநியோகஸ்தர்களின் குரலை ஓங்கச் செய்தவர். ஜி.சேகரன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!