India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1) உலகின் 2ஆவது பெரிய ராணுவத்தை கொண்ட நாடு எது? 2) IIT என்பதன் விரிவாக்கம் என்ன? 3) இந்தியாவின் முதல் பெண் அயல்நாட்டுத் தூதர் யார்? 4) இந்தியன் வங்கி எந்த ஆண்டில் நிறுவப்பட்டது? 5) நத்தைக்கு எத்தனை பற்கள் உள்ளன? 6) காற்றின் வேகத்தை அளவிட உதவும் கருவி எது? 7) இஸ்லாமிய கம்பன் என அழைக்கப்பட்ட புலவர் யார்? 8) Astrobiology என்றால் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்தது ஒரு சவரன் ₹58,840க்கும், கிராமுக்கு ₹15 குறைந்து ஒரு கிராம் ₹7,355க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து, ஒரு கிராம் ₹105க்கும், ஒரு கிலோ ₹1,05,000க்கும் விற்கப்படுகிறது.
The US Department of Defense சமீபத்தில் 10,000 வடகொரியா இராணுவத்தினர் ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைன் போரில் களம் இறங்குவார்கள் என செய்தி வெளியிட்டது. அப்படி நடந்தால், ரஷ்யா அணுஆயுத உதவியை வடகொரியாவிற்கு அளிக்கும் என்ற பதற்றம் தென்கொரியாவிற்கு உள்ளது. அதனால், வடகொரியா களமிறங்கினால், நாங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுத உதவியை மேற்கொள்வோம் என தெரிவித்திருக்கிறார் தென்கொரியா ஜனாதிபதி யூன் சுக் இயோல்.
வாணலியில் பச்சரிசி (100g), பாசிப் பருப்பு (100g), உளுந்து (250g) நன்றாக வறுத்து, மாவு பதத்தில் அரைத்து தூளாக்கி கொள்ளவும். அடிகனமான கடாயில் 2 தேக்கரண்டி நெய், வடிகட்டிய வெல்லப் பாகு (500ml), பால் (கால் கப்) ஊற்றி கொதிக்க விடவும். பின் அடுப்பை சிம்மில் வைத்து, மாவு கலவையை சேர்த்து கிளறவும். நன்கு வெந்ததும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால் சுவையான செட்டிநாட்டு கும்மாயம் ரெடி.
அமரன் படக்குழுவுக்கு தமிழக முன்னாள் CRPF நலன் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. படத்தில் தேர்தலின் போது நடத்தப்படும் தாக்குதல் காட்சிகளில் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் CRPF வீரர்கள் படுகொலை செய்யப்படுவது வேதனையும், அதிர்ச்சியும் அளிப்பதாக கூறியுள்ளனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளியையொட்டி, வெளியான இத்திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இங்கிலாந்தில் உள்ளங்கை அளவு பெரிய ராட்சத Fen Raft சிலந்திகளில் தற்போது 10,000க்கும் மேற்பட்ட இனப்பெருக்கம் செய்யக்கூடிய பெண் சிலந்திகள் உருவாக்கப்பட்டுள்ளன. செஸ்டர் உயிரியல் பூங்காவில் அழிவின் விளிம்பில் இருந்த இந்த சிலந்திகளை காப்பாற்ற 2011-ல் Royal Society for the Protection of Birds முயற்சி எடுத்தது. 100க்கும் மேற்பட்ட சிலந்திக்குஞ்சுகள் சோதனைக் குழாயில் கவனமாக வளர்க்கப்பட்டு வந்தன.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா குறித்து முன்னாள் வீரர் ஸ்ரீ காந்த் பேசும் போது, ”நியூசிலாந்துக்கு எதிராக மோசமாக விளையாடியதையும், கேப்டனாக மோசமாக செயல்பட்டதையும் ஏற்றுக்கொள்ள ரோஹித்திடம் தைரியம் இருந்தது. நடைபெறவுள்ள BGT தொடரில் ரோஹித் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என நினைக்கிறேன். ரோஹித்திற்கு வயதாவதை மனதில் கொள்ள வேண்டும்” என்றார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இது புயல் சின்னமாக வலுவடைந்து, தமிழக கரையை நெருங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நவ.8ல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளது.
ரப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் காலியாக உள்ள 50 பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை ரப்பர் கழகம் வெளியிட்டுள்ளது. Young Professionals பொறுப்பில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: UG டிகிரி (Agri, Hortic, Forestry). வயது வரம்பு: 20-30. ஸ்டைபண்ட்: ₹40,000. தேர்வு முறை: எழுத்து & நேர்முகத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி: நவ.13. கூடுதல் விவரங்களுக்கு ARC லிங்க்கை கிளிக் செய்யவும்.
தென்னிந்தியாவில் இருந்து ஹிந்தி திரையுலகுக்கு செல்லும் நடிகைகள் நிறைய பிரச்னைகளை எதிர்கொள்வதாக நடிகை ரெஜினா கசாண்ட்ரா வேதனையுடன் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஹிந்தி படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் மும்பையில்தான் தங்க வேண்டும். பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இதை செய்ய வேண்டும். மற்ற மொழி திரையுலகை ஒப்பிடும்போது, பாலிவுட்டில் போட்டி அதிகம்” என்றார்.
Sorry, no posts matched your criteria.