India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீமானால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக திருச்சி சூர்யா ஐகோர்ட் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சீமான் குறித்து 15 ஆடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும், இதற்கு பழிவாங்கும் வகையில் சீமான், சாட்டை துரைமுருகன் தன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறி, தனக்கும், குடும்பத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார். இம்மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது.
அரசுக்கு எதிரான தீர்ப்புகளை வழங்குவது மட்டுமே நீதிமன்ற சுதந்திரம் கிடையாது என CJI சந்திரசூட் தெரிவித்தார். தேர்தல் பத்திரங்கள் தீர்ப்புக்கு பிறகு, நீங்கள் சுதந்திரமாக செயல்படுகிறீர்கள் என நீதிமன்றத்தை பாராட்டியவர்கள் பிற வழக்குகளின் தீர்ப்புகளை கண்டு விமர்சிப்பதாக வேதனை தெரிவித்தார். தற்போதைய சமூகவலைதள காலத்தில், Online Media-வை பயன்படுத்தி பல அமைப்புகளிடம் இருந்து அழுத்தம் வருவதாகவும் கூறினார்.
வெளிநாட்டு மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் யூனிட் டிரஸ்டுகளில், இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய SEBI அனுமதித்துள்ளது. அதற்கு அந்நிய நிறுவனங்களின் நிகர சொத்துகளில், 25%-க்கும் குறைவாக இந்திய கடன் பத்திரங்களில் முதலீடு செய்திருந்தால் மட்டுமே, அவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது. வெளிநாட்டு MF நிறுவனங்களில் முதலீடு செய்வதை எளிதாக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைவருமே ராணுவ வீரர்களுக்குப் பெரிய சம்பளம் இருக்கும் என்றே நினைத்திருப்போம். அச்சிந்தனையை மாற்றியுள்ளது அமரன். படத்தில் சொத்து வாங்கும் காட்சி ஒன்று இடம் பெற்று, ராணுவத்தினரின் கஷ்டத்தை வெளிக்காட்டியுள்ளது. இக்காட்சியை மேற்கோள் காட்டிய விக்னேஷ் சிவன், ராணுவ வீரர்களின் சம்பளம் 100 மடங்கு அதிகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, அதற்கு முதல் ஆளாக பங்களிக்க காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் (நவ.7) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். சென்னையில் 2 நாள்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
T-சர்ட்களில் பிடித்தமானவர்கள், பிரபலங்கள் படம் இருக்கும். ஆனால், Flipkart, Meesho தளங்களில் பெரிய கிரிமினலான லாரன்ஸ் பிஷ்னோய் படத்துடன் Gangster, Real Hero வாசகங்கள் கொண்ட T-சர்ட் விற்கப்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் குழந்தைகள் T-சர்ட்டும் உண்டு. கேங்ஸ்டர் என்பதை பெருமையாகவும், கிரிமினல்களை ஹீரோவாகவும் கொண்டாடும் அளவுக்கு நம் சமூகம் தாழ்ந்துவிட்டதா.. இதற்கு சினிமா மட்டும் தான் காரணமா?
நடைபெறவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில், ரிஷப் பண்ட்டை அணியில் எடுக்க பெரும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி, பண்ட்டிற்கு ரூ.50 கோடி கொடுத்தாலும் குறைவு தான். ஷாட் தேர்வில் பண்ட் சிறப்பானவர். நியூசி., தொடரில் எந்த இந்திய பேட்ஸ்மேனும் அவரைப்போல் விளையாடவில்லை. என் பார்வையில் அவர் தான் சாம்பியன் எனப் பாராட்டியுள்ளார்.
பாலியல் சார்ந்தும், நகைப்புக்குரிய விஷயமாகவும் பார்க்கப்படும் ஆண்மைக்குறைவு உயிருக்கே உலை வைக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆண்மைக் குறைவு பாதிப்புக்குள்ளான ஓரிரு ஆண்டுகளுக்குள் 60% பேருக்கு Heart Attack ஏற்படலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆணுறுப்பில் உள்ள ரத்தக் குழாய்களில் பாதிப்பு உண்டாகி ஏற்படும் விறைப்பின்மையை சரி செய்ய முறையான சிகிச்சை எடுக்க வேண்டுமென செக்ஸாலஜிஸ்ட்ஸ் அறிவுறுத்துகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சுற்றிலும் கூரைகளில் தயார் நிலையில் ஸ்னைப்பர்கள், புல்லட் ப்ரூப் கண்ணாடிகள், கட்டங்களை சுற்றிலும் 24 மணிநேர டிரோன் கண்காணிப்பு, ரசாயன தாக்குதலை தடுக்க உபகரணங்கள் என போர்க்கள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கேயும் வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பில்லை போலும்.
மக்களிடம் புழக்கத்தில் இருந்த ₹2,000 நோட்டுகள் 98.04% வங்கிக்கு திரும்பிவிட்டதாக RBI தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், “மே 19, 2023 வரை ₹3.56 லட்சம் கோடி அளவிலான ₹2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்துள்ளது. அதில் சுமார் 2% அதாவது ₹6,970 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் மட்டுமே திரும்பவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டுகளை திரும்ப அளிக்க அக். 7, 2023 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
Sorry, no posts matched your criteria.