India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் ஒரே அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. Afro – Asia கோப்பை கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2005, 2007ல் இத்தொடர் நடைபெற்றது. அதில் ஆசிய அணியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் முதல்வர் ஸ்டாலினால் புறக்கணிக்கப்பட்டதாக பாஜக புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
“ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தவறுதலாக ஒரு வரியை விட்டுவிட்டதற்கு திமுக – கூட்டணி கட்சியினர் ஒரு வாரத்திற்கு கூச்சல் எழுப்பி கொக்கரித்தனர். ஆனால், கோவையில் இன்று முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாடப்படவில்லை” என BJP கூறியுள்ளது.
‘ரங்கூன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படம் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டைப் பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்நிலையில், ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் ‘இட்லி கடை’ படத்தை முடித்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படாததால் 21 இடங்களில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தங்களுக்கு சில தொகுதிகளை ஒதுக்க ஹேமந்த் சோரனிடம் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அக்கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 81 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் வருகிற 13 மற்றும் 20இல் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
ஒருவர் நீதிமன்றத்திடமிருந்து எழுத்து பூர்வமாக உத்தரவுப் பெறுவதையே ரிட்டன் ஆர்டர் என்கிறோம். இதன் சுருக்கமே ‘ரிட்’ (WRIT PETITIONS) என்றழைக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனம் ஷரத்து 226இன்படி உயர் நீதிமன்றத்திலும், 32இன்படி உச்ச நீதிமன்றத்திலும் ரிட் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம். ரிட் மனுக்களை Habeas corpus, Prohibition, Mandamus, Certiorari, Quo-Warranto என 5 வகையாகப் பிரிக்கலாம்.
கலப்புத் திருமணம் செய்துகொண்டோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும் என முதல்வரிடம் VCK MP ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். 2006 – 2011 திமுக ஆட்சிக் காலத்தில் கலப்புத் திருமணம் செய்துகொண்டோர் 287 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர். ஆனால், அதன்பின் யாரும் பணி நியமனம் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. எனவே, இத்திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி, அதில் 2 வெற்றிலையை காம்பு நீக்கி பிய்த்து போடுங்கள். பின்னர் 3 கற்பூரவல்லி இலை, சிறிது இஞ்சியை நசுக்கி போடுங்கள். பிறகு, 15 துளசி இலைகளையும், தலா ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம், அரை ஸ்பூன் மஞ்சளையும் போட்டு கொதிக்க வையுங்கள். அரை டம்ளராக வற்றிய பின், அந்த கசாயத்தை எடுத்து வடிகட்டி குடித்தால், எப்பேர்பட்ட நெஞ்சு சளியும் கரைந்து விடும்.
பைக் பிரியர்களிடையே பிரபலமான ‘ராயல் என்ஃபீல்ட்’ தனது முதலாவது எலெக்ட்ரிக் பைக்கின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு Flying Flea C6 என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த பைக் 2026 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளது. பைக்கின் எஞ்சின் இருக்கும் இடத்தில் பேட்டரி வைக்கப்பட்டிருக்கும். இந்த பைக்கில் மணிக்கு 100km வேகத்தில் பயணிக்க முடியும். பைக் எப்படி உள்ளது என கமெண்ட் பண்ணுங்க.
Staring என்பதற்கும், Leering என்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன? அடிப்படையில் இந்த இருசொற்களும் உற்றுப் பார்ப்பது என்ற ஒற்றை செயலையே குறிக்கின்றன. ஆனால், எந்த நோக்கத்தில், எப்படி பார்க்கிறோம் என்பதில் இரண்டும் வேறுபடுகிறது. Staring என்பது நாகரிகமான முறையில் பார்ப்பதை குறிக்கும். Leering என்றால் அநாகரிகமான முறையில் வெறித்துப் பார்த்தலை குறிக்கும். இப்போது சொல்லுங்கள் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அளித்த புகார் அடிப்படையில், அவர் மீது கலவரத்தை தூண்டும் நோக்கில் பேசுவது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், கஸ்தூரி விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.