news

News April 13, 2025

அல்லு அர்ஜுன் படத்திற்கு NO சொன்ன பிரியங்கா.. ஏன்?

image

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க பிரியங்கா சோப்ரா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ்பாபு- ராஜமௌலி படத்திலும், ‘க்ரிஷ்-4’ படத்திலும் நடிக்க ஏற்கனவே டேட் கொடுத்துவிட்டதால் அவர் NO சொன்னதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஷூட்டிங்கிற்கு அழைக்கும்போதெல்லாம் நடிக்க வரவேண்டும் என கண்டிஷனாக கூறி ராஜமௌலி ஒப்பந்தம் போட்டுவிட்டாராம்.

News April 13, 2025

FD வட்டியை குறைத்த SBI.. எவ்வளவு தெரியுமா?

image

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி (RBI) குறைத்ததையடுத்து, பல்வேறு வங்கிகளும்<<16079100>> கடன்கள்<<>> மீதான வட்டியை குறைத்து வருகின்றன. இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, FD திட்டம் மீதான வட்டியை 15ம் தேதி முதல் 10 புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது, 1 முதல் மூன்றரை ஆண்டுகாலம் வரை ரூ.3 கோடிக்கும் குறைந்த தொகை டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் இந்த வட்டி குறைப்பு பொருந்தும்.

News April 13, 2025

அரசு அலுவலகம், வங்கி, பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

image

நாளை (ஏப்.14) தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. இந்நாள் அரசு விடுமுறை தினம் என்பதால், தமிழகம் முழுவதும் நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை ஆகும். இதனால் அனைத்து அரசு அலுவலகங்களும் அடைக்கப்பட்டு இருக்கும். அதேபோல், வங்கிகளும் நாளை திறக்கப்படாது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை. இதனால் அரசுத் தேர்வுகள், பொதுத் தேர்வுகள் நாளை நடைபெறாது.

News April 13, 2025

வைரத்தை விட மதிப்பு வாய்ந்த ரத்தினக் கற்கள்!

image

தங்கத்தை விட பிளாட்டினம், அதைவிட வைரம் ஆகியவை மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் வைரத்தை விடவும் மதிப்பு வாய்ந்ததுதான் கியாதுவைட் மற்றும் பைனைட் படிகங்கள். ஆழமான ஆரஞ்சு ரத்தினக் கல்லான கியாதுவைட், இதுவரை மியான்மரில் ஒரே ஒரு படிகம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடர் சிவப்பு நிற ஆறுகோண படிகமான பைனைட், இதுவரை உலகம் முழுவதும் 3 மாதிரிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

News April 13, 2025

அடையாளம் தெரியாமல் மாறிய ‘கர்ணன்’ பட நடிகை..!

image

‘கர்ணன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனது உடல் எடையை 6 மாதத்தில் 15 கிலோ வரை குறைத்துள்ளார். எடையை குறைப்பதற்கு முன்பு மற்றும் தற்போது இருக்கும் புகைப்படங்களை சேர்த்து அவரது பயிற்சியாளர் வெளியிட்டுள்ளார். புதிய படத்திற்காக தனது எடையை அவர் குறைத்துள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பயிற்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

News April 13, 2025

IPL: பெங்களூரு அணிக்கு இதுதான் இலக்கு..!

image

RCB அணிக்கு 174 ரன்களை இலக்காக RR அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று RCB முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த RR அணியில், ஜெய்ஸ்வால் (75) அதிரடியாக அரைசதம் விளாசினார். துருவ் ஜுரல் (35*), ரியான் பராக் (30) உள்ளிட்டோரும் சிறப்பாக விளையாடினர். RCB அணி தரப்பில், யஷ் தயாள், ஹேசில்வுட், க்ருணால் பாண்டியா உள்ளிட்டோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியில் யார் ஜெயிப்பாங்க?

News April 13, 2025

இடி-மின்னலுடன் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழை

image

இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, கோவை, ஈரோட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

News April 13, 2025

நான் தான் தலைவர்: ராமதாஸ் மீண்டும் அதிரடி!

image

பாமக தலைவர் தாம் தான் என்று ராமதாஸ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராமதாஸ்- அன்புமணி இடையேயான விரிசலை சரிசெய்ய, பாமக மூத்த தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், தன்னை பார்க்கச் சென்ற கட்சி நிர்வாகிகளிடம், தன்னுடைய அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

News April 13, 2025

அம்பேத்கர் பிறந்தநாள் – கட்சியினருக்கு விஜய் அறிவுரை

image

தவெக கொள்கைத் தலைவர்களில் ஒருவரான சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை (ஏப்.14), தமிழ்நாடு முழுவதும் கொண்டாட கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாநகரம் முதல் ஊராட்சிப் பகுதிகள் வரை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த விஜய் அறிவுறுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

News April 13, 2025

அதிமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்

image

ஆரணித் தொகுதி அதிமுக EX எம்எல்ஏ டாக்டர் ஜெய்சன் ஜேக்கப் காலமானார். கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஜெய்சன் ஜேக்கப் மறைவு குறித்து கேள்விப்பட்டு மிகுந்த வருத்தமுற்றதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!