India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான ‘கோட்’ படம் ஒட்டுமொத்தமாக ₹465 கோடி வசூலித்திருந்தது. இந்த வசூலை ரஜினியின் ‘கூலி’ படம் 11 நாள்களிலேயே முறியடித்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், படத்தின் வசூல் ₹500 கோடியை நெருங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில் ஏற்கெனவே ‘2.O’ மற்றும் ‘ஜெயிலர்’ ஆகிய படங்கள் ₹600 கோடிக்கு மேல் கலெக்ஷனாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி EPS பிரச்சாரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுகவினர் தாக்கிய சம்பவம் சர்ச்சையானது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் வாகனம் & ஓட்டுநர் மீது தனி நபரோ, கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3-10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கைதாகுபவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்படும் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி பரமேஸ்வரன் மற்றும் திருப்பூர் பாரதியார் நூற்றாண்டு அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தினத்தையொட்டி செப்.5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த விருதை வழங்க உள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில், அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அச்சு, டிவி, ரேடியோ, டிஜிட்டல் சார்ந்த ஊடக படிப்புகள் ஓராண்டுக்கு வழங்கப்படுகின்றன. விடுதி வசதியும் உள்ளது. கல்விக்கட்டணம் ₹10,000 ஆகும். செய்முறை பயிற்சிக்கான ஸ்டுடியோக்களும் உள்ளன. நடப்பு ஆண்டு முதலே படிப்புகள் தொடங்கியுள்ளன. ஆண்டுக்கு 40 மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்படுகிறது.
வங்கக் கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாகவும் அது 2 நாள்களில் வலுப்பெறும் எனவும் IMD கணித்துள்ளது. மேலும், தமிழகத்தில் ஆக.31-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் ஒரு வாரத்திற்கு குடையை மறக்க வேண்டாம்..!
சிபிஐ மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து, அவரது குடும்பத்தினரிடம் விஜய் கேட்டறிந்தார். கடந்த 22-ம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்த நல்லகண்ணுவுக்கு நந்தனத்தில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, ராஜீவ் காந்தி அரசு ஹாஸ்பிடலில் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை, சிகிச்சைகள் குறித்து தவெக தலைவர் விஜய் கேட்டறிந்தார்.
‘தனுஷ் எனக்கு நல்ல நண்பர் தான்’ என்று கூறி, பரவி வந்த கிசுகிசுவை நாசுக்காக அமைதிப்படுத்திய மிருணாள் தாகூர், தற்போது மீண்டும் வைரலாகிறார். ‘Accidental magic is the best creation’ (தற்செயலான மேஜிக் தான் சிறந்த உருவாக்கம்) என்ற சொல்லுடன் இன்ஸ்டாவில் ஒரு போட்டோவை பதிவிட்டார் தனுஷ். இதற்கு மிருணாள் லைக்கை தட்டிவிட, ‘பத்த வச்சிட்டியே பரட்ட’ என்று நெட்டிசன்கள் மீண்டும் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர்.
1+ 1 = 3 என குட்டி கால் தடங்கள் இருக்கும் கேக்கை பதிவிட்டு, பிரபல பாலிவுட் பட நடிகை பரினீதி சோப்ரா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். இவர், 2023-ல் ஆம் ஆத்மி கட்சி MP ராகவ் சத்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் அறிமுகமான பரினீதி, Ishq, Shuddh desi romance, Golmaal again என மெகா ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் பிரியங்கா சோப்ராவின் தங்கையாவார்.
ஆக.28-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. தொலைவுக்கு புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
PM, CM பதவி பறிப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக சிறை செல்லும் அரசியல்வாதிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கும் போக்கு உருவாகியுள்ளதாக அமித்ஷா சாடியுள்ளார். சிறையில் இருந்தே யாராவது அரசை நடத்த வேண்டுமா? என கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தில் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.