news

News November 6, 2024

அங்கீகாரம் இல்லாமல் பான் விவரங்களை பயன்படுத்த தடை!

image

நிறுவனங்கள் அங்கீகாரம் இல்லாமல் பான் கார்டு விவரங்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. தனிநபர்களின் விவரங்களை பெறும் சில நிறுவனங்கள், அவற்றை வணிக நோக்கத்திற்காக பகிர்கின்றன. அந்த வகையில், பான் கார்டு மூலம் சிபில் ஸ்கோரை அறிந்து, வாடிக்கையாளர்களை அணுகுகின்றன. இது தனித்தகவல் விதி மீறலில் வராவிட்டாலும், மின்னணு தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டத்தின் முன்னோட்டமாகத் தடுக்கப்பட்டுள்ளது.

News November 6, 2024

ரயில்களில் ஏன் சீட் பெல்ட் இல்லை..?

image

ரயில்களில் ஏன் இல்லை சீட் பெல்ட் இல்லை என்ற சந்தேகம் உண்டா? காரணமில்லாமல் காரியங்கள் இல்லை. ரயில் பயணத்தை பலரும் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் சவுகரியமே. சீட் பெல்ட் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அவை வழங்கப்படுவதில்லை. ஆய்வுகளின் படி, மிகவும் வேகமாக செல்லும் ரயில்கள், விபத்தில் சிக்கும் போது, இருக்கைகளே தூக்கி எறியப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் சீட் பெல்ட்டுகள் இருப்பதில்லை.

News November 6, 2024

‘இன்டர்ன்ஷிப்’ திட்டத்தில் சேர விருப்பமா?

image

பிரதமர் ‘இன்டர்ன்ஷிப்’ திட்டத்தில் சேர pminternship.mca.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். முன்னணி நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் வழங்கும் திட்டம் இந்தாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில் 1.25 லட்சம் இளைஞர்களுக்கு ஒருமுறை மானியமாக ₹6,000 மற்றும் மாத உதவித்தொகை ₹5,000 வழங்கப்படுகிறது. பயிற்சி வாய்ப்புக்கான இறுதிப்பட்டியல் டிச.2ஆம் தேதி வெளியாகிறது.

News November 6, 2024

அக்டோபரில் 10% வேலை வாய்ப்பு அதிகரிப்பு

image

அக்டோபரில் அமைப்பு சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு 10% அதிகரித்துள்ளதாக ‘நவுக்ரி’ நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் மாநிலங்களை பொறுத்தமட்டில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு 24% உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் துறைகளில் 39%, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 18%, மருந்து துறையில் 12%, கன்ஸ்யூமர் துறையில் 8% வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News November 6, 2024

பிரபல பாடகி சாரதா சின்கா காலமானார்

image

பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா (72) உடல்நலக் குறைவால் காலமானார். நாட்டுப்புற பாடல்களால் மக்களை பெரிதும் கவர்ந்த இவருக்கு, 2018ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. புற்றுநோயால் அவதி அடைந்து வந்த இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு PM மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News November 6, 2024

இளைஞர்களை ஈர்க்க திமுகவின் புதிய வியூகம்!

image

விஜய் பக்கம் இளைஞர்கள் செல்வதை தடுக்கவும், அவர்களை தங்கள் பக்கம் இழுக்கவும் திமுக பல்வேறு வியூகங்களை வகுக்கிறது. NOV.27 உதயநிதி பிறந்தநாளை தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட முடிவு செய்துள்ளது. அத்துடன், திமுக பூத் கமிட்டிகளில் இதுவரை இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. 2026 தேர்தலில் அனைத்து பூத் கமிட்டிகளிலும், இளைஞர்கள் இருக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

News November 6, 2024

இளம் வயதில் முடி உதிர்வுக்கான காரணங்கள்..

image

☛ சத்துக்கள் இல்லாத உணவு உண்பது ☛ மன உளைச்சல், மரபணு காரணங்கள் ☛ கெமிக்கல்கள் அதிகம் உள்ள ஜெல், ஷாம்பு, கலரிங், ஹேர் Wax பயன்பாடு ★ முடிய உதிர்வதை தடுக்க ஊட்டச்சத்து அவசியம். ★ மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் செய்யுங்கள். ★ இயற்கை எண்ணெய்களைக் கொண்டு முடியை மசாஜ் செய்யுங்கள். ★ சுத்தமான தண்ணீரை பருகுங்கள். ★ தொடர்ந்து முடி உதிர்ந்தால், மருத்துவரை அணுங்கள்.

News November 6, 2024

இன்று அதிமுக மா.செ கூட்டம்

image

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. EPS தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாநிலச் செயலாளர்களும் பங்கேற்க உள்ளனர். இதில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

News November 6, 2024

பிக்பாஸை தடை செய்யணும் – வெடித்த போராட்டம்?

image

மற்றொருவர் வீட்டில் நடப்பதை எட்டி பார்க்க இருக்கும் ஆர்வம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலீடு. வரவேற்பை போலவே, எதிர்ப்புகளும் அதிகம். தூத்துக்குடி கோட்டாச்சியர் அலுவலம் முன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பிக்பாஸை தடை செய்யவேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர். கலாசாரத்திற்கு எதிராக இருப்பதால் இந்தியா முழுவதும் தடை வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள். நீங்க என்ன நினைக்கிறீங்க..?

News November 6, 2024

13 ஆண்டுகளுக்கு பின் IPL-ல் ஆண்டர்சன்..

image

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் IPL மெகா ஏலத்தில் பங்கேற்க உள்ளார். அடிப்படை விலையான ரூ.1.25 கோடிக்கு தனது பெயரை அவர் பதிவு செய்திருக்கிறார். 42 வயதான ஆண்டர்சன் 2011 மற்றும் 2012 IPL ஏலத்தில் இருந்த போதும், ​​அவரை எந்த அணியும் வாங்கவில்லை. அதன் பிறகு தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு IPL-க்குள் நுழைய இருக்கிறார் ஆண்டர்சன். எந்த அணி அவரை வாங்க வாய்ப்புள்ளது? கமெண்ட்ல சொல்லுங்க

error: Content is protected !!