news

News November 6, 2024

3% வட்டி சலுகையுடன் கல்விக்கடன்

image

மாணவர்களுக்கு பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ் 75% மத்திய அரசின் உத்தரவாதத்துடன் ₹7.50 லட்சம் கடன் வழங்கப்படும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹8 லட்சம் வரை இருக்கும் மாணவர்கள், இத்திட்டத்தின் கீழ் ₹10 லட்சம் வரை கடன் பெற்றால் 3% வட்டி சலுகையும் கிடைக்கும். அதேவேளையில் இந்த மாணவர்கள் கல்விக்காக அளிக்கப்படும் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பிற சலுகைகளைப் பெற முடியாது.

News November 6, 2024

கல்விக்கடன்.. மாணவர்களுக்கு GOOD NEWS

image

PM வித்யாலட்சுமி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதே இத்திட்டத்தின் நோக்கம். வங்கிகளிடம் இருந்து மாணவர்கள் கடன் பெற உத்தரவாதம் ஏதும் அளிக்க தேவையில்லை. படிப்புக்கு தேவைப்படும் முழு தொகையையும் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். <>PM வித்யாலட்சுமி<<>> தளத்தில் விண்ணப்பித்து கல்விக் கடன் பெறலாம்.

News November 6, 2024

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில் திருப்பம்

image

நிவின் பாலி மீதான பாலியல் புகாரில், நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றத்தில் கேரள போலீசார் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளனர். துபாயில் நிவின் பாலி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்த நிலையில், தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நிவின் பாலி நன்றி தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

முதல்வர் பிரிவினைவாதம் பேசக்கூடாது: வானதி

image

தமிழக முதல்வர் பிரிவினைவாதம் பேசுவதை ஏற்க முடியாது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற திமுகவின் பழைய பேச்சையே முதல்வர் தற்போது மீண்டும் பேசுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக இன்று காலை கோவையில் நடைபெற்ற விழாவில், வடக்கு வாழ்வதற்கு தெற்கு உதவி செய்கிறது என முதல்வர் கூறியிருந்தார்.

News November 6, 2024

15 மாவட்டங்களில் இடியுடன் மழை

image

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், நாகை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

News November 6, 2024

WHATSAPP பயனாளர்கள் கவனத்திற்கு..

image

WHATSAPPஇல் முன்பின் தெரியாதோர், உங்கள் நம்பரை குழுவில் சேர்ப்பதால் அவதியடைவது உண்டு. இதை கட்டுப்படுத்த WHATSAPP வசதி அளிக்கிறது. Privacy செட்டிங்ஸ் சென்று கிளிக் செய்தால் Everyone, My contacts, My contacts Except என்பது வரும். அதில் ஒன்றை தேர்வு செய்தால், குழுவில் யார் உங்களை சேர்க்கலாம் என்பது அப்டேட் ஆகும். அதன் பிறகு உங்கள் நம்பரை தேவை இல்லாமல் குழுவில் சேர்க்க முடியாது. SHARE IT

News November 6, 2024

சாதிய ஆதிக்க வெறியை ஒடுக்குக: முத்தரசன்

image

சாதி ஆதிக்க வெறியை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசை CPI மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். ராணிப்பேட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இதுபோன்ற கொடிய சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், சாதி ஆதிக்கத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News November 6, 2024

சித்தார்த், விஜய் சங்கர் சிறப்பான ஆட்டம்

image

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் நாள் முடிவில் 299-7 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய சித்தார்த் 94, விஜய் சங்கர் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முகமது அலி 27*, சோனு யாதவ் 12* ரன்களுடன் களத்தில் உள்ளனர். அசாம் தரப்பில் தர்ஷன், ராகுல் சிங், Swarupam Purkayastha தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

News November 6, 2024

கோர விபத்தில் 10 பேர் பலி.. நெஞ்சை உலுக்கும் போட்டோ

image

உ.பி.,யில் ஆட்டோ மீது டிரக் மோதியதில் 3 குழந்தைகள், 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோஷன்பூர் கிராமத்திற்கு அருகே பில்கிராம் – மாதவ்கஞ்ச் சாலையில் சென்ற டிரக், பைக் ஒன்றின் மீது மோதாமல் இருக்க முயன்றபோது, ஆட்டோ மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயமடைந்துள்ளனர். நெஞ்சை பதைபதைக்கும் விபத்தின் போட்டோ வெளியாகியுள்ளது.

News November 6, 2024

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி? திருமா பதில்

image

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார். கூட்டணி ஆட்சி தொடர்பாக விசிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும், தங்களின் கொள்கையே எல்லோருக்கும் எல்லாம் என்பதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது கூட்டணி ஆட்சி என்பது பொருத்தமற்ற கேள்வி எனவும், எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு வரும்போது விசிக குரல் எழுப்பும் எனவும் தெரிவித்தார்.

error: Content is protected !!