India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆதார் மூலம் மோசடி நடைபெறுவதை தடுக்க UIDAI பல்வேறு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி, ஆதார் கடிதம், ஆதார் பிவிசி அட்டை ஆகியவற்றை போதிய கவனமில்லாமல் தவற விடக்கூடாது. முகநூல், எக்ஸ் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆதார் விவரங்களை பகிரக் கூடாது. ஆதார் ஓடிபியை யாரிடமும் பகிரக் கூடாது. ஆதார் M-Pin கோடை யாரிடமும் அளிக்கக் கூடாதென்று கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
மநீம தலைவர் கமலுக்கு Deputy CM உதயநிதி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “கலைஞரால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை. திமுகவுடன் கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம். மதவாத, பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மழை & பனிக்காலத்தில் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, மூச்சிரைப்பு, உடல்சோர்வு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர் கருஞ்சீரகம் டீயைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கருஞ்சீரகம், சுக்கு, திப்பிலி, மிளகு, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான கருஞ்சீரகம் தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
27 மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவுபெறுகிறது. இதனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் முடிந்ததும் தேர்தல் நடத்த வேண்டும், எக்காரணம் கொண்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடக்கூடாது என திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்கமல் நிறுவனம் ‘தக் லைஃப்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு கமலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. எங்களின் அச்சமற்ற தலைவர் சினிமா மீதான ஈடு இணையற்ற புத்திசாலித்தனத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும் எப்போதும் முன்னணியில் இருப்பவர் எனக் குறிப்பிட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துவரும் ‘தக் லைஃப்’ படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.
பெங்களூரு வந்து தன்னுடன் விவாதம் நடத்தத் தயாரா என்று PM மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சவால் விடுத்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 11 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றியுள்ளார். எத்தனை வாக்குறுதிகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றியுள்ளது
என விவாதிப்பாரா என்று கேள்வியெழுப்பினார்.
சென்னை அருகே தண்டவாளத்தில் கிடந்த கல்லால், மீண்டும் ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர் அருகே அண்மையில் ரயில் தடம்புரண்ட விபத்தில் சதி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அம்பத்தூர் அருகே தண்டவாளத்தில் கல் கிடந்ததை மங்களூர் விரைவு ரயில் ஓட்டுநர் பார்த்து தகவல் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடக்கிறது.
விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீனாட்சி சௌத்ரி அறிமுகமானார். இதையடுத்து ‘தி கோட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இன்ஸ்டாவில் படு ஆக்டிவ்வாக இருக்கும் மீனாட்சி, தற்போது பகிர்ந்துள்ள போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.
‘அமரன்’ படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், அப்படத்தை தடை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் அலுவலகத்தை SDPI கட்சியினர் இன்று முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர். மேலும், தியேட்டர்கள் முன்பும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவரவே, போலீசார் அலர்ட் படுத்தப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டு இருப்பதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், சகிப்புத்தன்மை காட்டாது பயங்கரவாதத்தை இந்தியாவில் முடிவு கட்ட மோடி அரசு தீர்மானித்து இருப்பதாக கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான 2 நாள் மாநாடு இன்று தாெடங்க இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மாநாட்டில் உரை நிகழ்த்துவதை எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.