India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு “கொம்புசீவி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 1996 -97 காலகட்டத்தில் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த உண்மைக் கதைகளின் அடிப்படையில் இப்படம் உருவாகி வருகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில், சரத்குமார் நாற்காலியில் அமர்ந்திருக்க, சண்முக பாண்டியன் கையில் நாட்டு துப்பாக்கியுடன் நின்றிருக்கிறார்.
மிஸ்டர் கூல் என்று செல்லமாக அழைக்கப்படும் சிஎஸ்கே நட்சத்திர வீரர், எம்.எஸ். தோனி நியூ லுக்கில் செம மாஸாக இருக்கிறார். பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் செதுக்கிய நியூ லுக்கில், 43 வயதான தோனி, 18 வயது இளைஞரை போல் காட்சியளிக்கிறார். சிஎஸ்கே அதன் எக்ஸ் பக்கத்தில் “Xtreme Cool” என்ற கேப்ஷன் கொடுத்து, இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் கூறியுள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில் ஏற்பட்டது போல் மழை பாதிப்பு இம்முறை ஏற்படாதெனக் கூறிய அவர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.அத்துடன் அவசரகால செயல்பாட்டு மையம் மூலம் உதவும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட்டின் X பதிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே புயலைக் கிளப்பியுள்ளது. “நான் IPL ஏலத்தில் பங்கேற்றால், எந்த அணியாவது என்னை வாங்குவார்களா? மாட்டார்களா? எந்த விலைக்கு வாங்குவார்கள்?” என்று பண்ட் அந்த பதிவில் கேட்டுள்ளார். அவரை CSK வாங்க உள்ளதாக ஒரு தகவல் உலாவரும் நிலையில், பண்ட் DC-யை விட்டு வெளியேறப் போகிறாரா? தோனிக்கு மாற்றாக CSK வைத்துள்ள குறி பண்ட் தானோ?
இந்தியாவின் முன்னணி மோட்டார் சைக்கிள் நிறுவனமான TVS, ரைடர் டிரம் பைக்கின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ், 130 mm டிரம் பிரேக், 11.38 PS பவர், LCD இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 124.8 cc ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 3 வால்வு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளன. லிட்டருக்கு 67 Km மைலேஜ் தரும். 7 புது வண்ணங்களில் கிடைக்கும்
இதன் ஷோரூம் விலை ₹84,869 ஆகும்.
ITBPஇல் காலியாக உள்ள 545 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கான்ஸ்டபிள் (ஓட்டுநர்) பணிகளில் சேர தகுதி உள்ளவர்கள் இன்றே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு (கனரக வாகன ஓட்டுநர் உரிமம்). வயது வரம்பு: 21-27. சம்பளம்: ₹21,700 – ₹69,100. விண்ணப்பிக்கக் கட்டணம்: ₹100. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.6. கூடுதல் விவரங்களுக்கு<
நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை நாளை மறுநாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார். மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் தொடங்கி ஏப்ரல் வரை வழக்கமாக நடைபெறும். தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்படையாத வகையிலும், ஒவ்வொரு தேர்வுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி இருக்கும் வகையிலும் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
BAN-க்கு எதிரான தொடரை IND அணி கைப்பற்றியதால் 3வது T20 போட்டியில் ஹர்ஷித் ராணாவிற்கு வாய்ப்பளிக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த துணை பயிற்சியாளர் ரியான் டோஸ்கேட், IND அணியில் யார் சமநிலையை ஏற்படுத்துவார்களோ அவர்களை விளையாட வைக்க முயற்சித்து வருகிறோம். அந்த வகையில் ஹர்ஷித் ராணாவுக்கு சரியான நேரத்தில் வாய்ப்பு வழங்கப்படும். நிச்சயம் நீல நிற உடையில் விளையாட வாய்ப்புள்ளது என்றார்.
திருவள்ளூரில் நிகழ்ந்த மைசூரு-தர்பங்கா ரயில் விபத்து, ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்தை பிரதிபலிக்கிறது என ராகுல் தெரிவித்துள்ளார். பல விபத்துகளில், பல உயிர்கள் பறிக்கொடுக்கப்பட்டாலும் எந்த பாடமும் இந்த அரசு கற்கவில்லை என விமர்சித்த அவர், மத்திய அரசே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தினார். மேலும், அரசு விழித்துக்கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிய வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பினார்.
BSNL அதன் பயனர்களுக்காக மற்றொரு சூப்பர் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் ₹666 ரீசார்ஜ் செய்தால், 105 நாட்களுக்கு ஃபோன் கால்ஸ், 2GB அதிவேக டேட்டா, 100 SMS ஆகியவற்றை பெற முடியும். JIO, AIRTEL நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் ரேட்ஸ் உயர்த்தியதன் காரணமாக BSNLஇன் பயனர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதை தக்க வைக்க நெட்வொர்க் பிரச்னை உள்ளிட்டவற்றில் BSNL கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
Sorry, no posts matched your criteria.