India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களிடையே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் பழக்கம் அதிகரித்து வருகின்றது. சிறு வணிகர்களும் UPI மூலம் பணம் வசூலிக்கும் முறையை பின்பற்றுகின்றனர். இதனால் மக்கள் ATMஐ பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 4,000 ATMகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் ₹34.70 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ள நிலையில், 1 லட்சம் பேருக்கு 15 ATM என்கிற விகிதமே உள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலைப் பகிருங்க.
ஆயுதப்படைகளை வலுப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை 2015 நவ.7இல் செயல்படுத்த உத்தரவிட்டதை நினைவுகூர்ந்து, நாட்டின் ஹீரோக்களை கவுரவிக்க மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை அது என்று கூறியுள்ளார். அரசின் நடவடிக்கையால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள், குடும்பத்தினர் பயன் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணை பின்தொடர்வோருக்கு அளிக்க வேண்டிய தண்டனை குறித்து BNS சட்டத்தின் 77(2) பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் புகாரின்பேரில், முதல்முறை குற்றமிழைக்கும் நபருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. திரும்பவும் அதே குற்றத்தை அந்த நபர் இழைக்கும்பட்சத்தில், அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன், பருவகால influenza தொற்றும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் MASK அணிந்து வெளியே செல்லுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இவ்வகை influenza காய்ச்சலுடன், நுரையீரல் தொற்றும் அதிகரித்துள்ளதால், தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது. இதனால், காய்ச்சல், உடல்சோர்வு ஏற்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகவும்.
நெப்போலியன் மகன் தனுஷிற்கு திருமணம் நடைபெற்றது. ஜப்பானில் வைத்து நடைபெற்ற திருமணத்தில் மணமகள் அக்ஷயாவை அவர் கரம்பிடித்தார். நிகழ்ச்சியில் சரத்குமார், ராதிகா, சுகாசினி, குஷ்பூ, மீனா, கார்த்தி, பாண்டியராஜன், விதார்த், கலா மாஸ்டர், ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ், அவரது மனைவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனுஷிற்கு தசைபிடிப்பு பாதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி கோப்பை போட்டியில் ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இரட்டை சதம் அடித்துள்ளார். மொத்தம் 201 பந்துகளில் 22 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் ரஞ்சி கோப்பையில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். 2015ல் முதல் இரட்டை சதம் அடித்தார். தற்போது 227* ரன்களுடன் தொடர்ந்து ஆடி வருகிறார். தொடர்ந்து சிறப்பாக ஆடும்பட்சத்தில் இந்திய அணியில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது.
ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி, புரட்சிகர அரசு ரஷ்யாவின் அரியணையை வென்ற நாள் இன்று. வறுமை, உழைப்புச் சுரண்டல், தேசிய இன ஒடுக்குமுறை, வாழ்வாதார பிரச்னை, மத ஆதிக்கம், நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை தோழர் லெனின் தலைமையில், போல்ஷ்விக் செம்படை நவ.7, 1917இல் வீழ்த்தியது. அந்த பொதுவுடைமை அரசியல், அந்நாட்டில் கல்லாமை, இல்லாமையை போக்கி, உழைக்கும் மக்களுக்கான முதல் பொன்னுலக அரசை நிறுவியது.
வெள்ளி விலை கடந்த சில நாள்களாக தாெடர்ந்து அதிகரித்தது. இதனால் வெள்ளி நகை வாங்குவோர் அதிர்ச்சியில் இருந்த நிலையில், இன்று அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரே நாளில் கிலோவுக்கு ₹3,000 சரிந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ₹3 குறைந்து ₹102க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு கிலோ வெள்ளி ₹1,05,000இல் இருந்து ₹3,000 சரிந்து ₹1,02,000ஆக விற்பனை செய்யப்படுகிறது. SHARE IT
தெலங்கானாவில் நவ.9 முதல் டிச.8 வரை சாதிவாரி சர்வே நடத்தப்படுகிறது. சுமார் ஒரு கோடியே 17 லட்சம் குடும்பங்களின் சமூகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட 56 கேள்விகள் இடம்பெறவுள்ளன. நேற்று வீடுகள் கணக்கெடுக்கும் பணியைத் தொடங்கி வைத்த அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர், மக்களின் தகவல்கள் அனைத்தும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்தார்.
Sorry, no posts matched your criteria.