India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரேஷன் கடைகளுக்கு இந்த வாரம் 2 நாட்கள் விடுமுறை. நாளை (ஏப்.14) தமிழ் புத்தாண்டு அரசு விடுமுறை தினம் என்பதால், மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் திறக்கப்படாது. இதுபோல் வருகிற 18ம் தேதி புனித வெள்ளி கொண்டாடப்படவுள்ளது. இதனால் அன்றைய தினமும் ரேஷன் கடைகள் திறக்கப்படாது. எனவே ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படவும். ஏமாந்து விட வேண்டாம்.
USA-ல் சட்டவிரோதமாகக் குடியேறிய வெளிநாட்டினர் உடனே வெளியேற வேண்டுமென டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. X பக்கத்தில் USA உள்துறை வெளியிட்டுள்ள பதிவில், 30 நாள்களுக்கு மேல் USA-ல் தங்கியிருப்போர் அரசிடம் பெயரை பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் கூறியுள்ளது. இந்த உத்தரவு, H-1 B விசா, மாணவர் விசா பெற்று USA-ல் தங்கியிருப்போருக்கு பொருந்தாது.
அழைப்பின்போது எண்ணுக்கு பதில் செல்போன் திரையில் பெயர் வருவது குறித்த பரிசோதனையை நாளைக்குள் முடித்து, 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு கெடு விதித்துள்ளது. 2ஜி தவிர்த்து, பிற போன்களில் திரையில் பெயர் வருவது போன்ற வசதியை செய்துதர தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான பரிசோதனை முடிந்ததும் நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.
திருமணத்திற்கு பிறகு ஒரு வாரம் மணப்பெண் நிர்வாணமாக இருக்கும் வழக்கம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளது. மணிகாரன் அருகே உள்ள பினி கிராமத்தில் இந்த வித்தியாசமான வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் மணப்பெண்ணும், மணமகனும் ஒருவரையாெருவர் பார்ப்பதில்லை, பேசுவதுமில்லை. இதேபோல் மணமகனும் மது அருந்துவதில்லை. இப்படி செய்தால், அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
டெல்லி – மும்பை அணிகள் சற்றுநேரத்தில் பலப்பரீட்சை நடத்த காத்திருக்கின்றன. புள்ளிப் பட்டியலில் முதலில் இருக்கும் டெல்லி அணி நடப்பு சீசனில் தோல்வியே காணாமல் 4 போட்டிகளில் வென்றுள்ளது. 9-வது இடத்தில் உள்ள மும்பை அணி ஒரே ஒரு போட்டியை தவிர மற்ற போட்டிகளில் எல்லாம் தோல்வியை தழுவியுள்ளது. வெற்றியை தொடர டெல்லியும், கண்டிப்பாக வெல்ல மும்பையும் முனைப்பு காட்டும். இன்று ஜெயிக்கப் போவது யார்?
சினிமா வாய்ப்புக்காக நடிகைகள் முக அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்ற கருத்து பொதுவாகவே உள்ளது. இந்த விவகாரத்திற்குள் தற்போது சிக்கி இருப்பவர் ‘நாகினி’ நடிகை மவுனி ராய். பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்த நிலையில், மவுனி ராய் பதிலடி கொடுத்துள்ளார். முகத்தை மறைத்துக் கொண்டு மோசமான கருத்துகளை வெளியிட்டு மகிழ்ச்சி அடைபவர்களை பற்றி கவலையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை எளிதில் எட்டிப் பிடித்து 4-வது வெற்றியை பெங்களூரு அணி பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானில் ஜெய்ஸ்வால்(75), பராக்(30), துருவ் ஜுரல்(35*) சிறப்பாக விளையாடினர். இதனை அடுத்து களமிறங்கிய பெங்களூரு வீரர்கள் பில் சால்ட்(65), கோலி(62*) அரைசதம் அடித்ததால் அந்த அணி ஈஸியாக வென்றது. டி20 போட்டிகளில் 100 முறை அரைசதம் அடித்து கோலி சாதனை படைத்துள்ளார்.
வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமானது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், வக்ஃப் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி விஜய் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்.
வக்ஃபு சட்டம் அமலானதை தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. இந்த கலவரத்துக்கு மத்தியில், அப்பகுதியின் TMC MP யூசுப் பதான், இன்ஸ்டாவில் டீ குடிப்பதை போன்ற ஒரு போட்டோவுடன், ‘Relaxing afternoon, good tea and peaceful atmosphere. Just enjoying this moment’ என பதிவிட்டார். இது பெரும் கண்டனங்களை பெற்று, யூசுப் பதானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
டாஸ்மாக்கில் ஏப்.1 முதல் 7-ம் தேதி வரையிலான பீர் விற்பனை புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 95.64 லட்சம் பீர் விற்பனையாகி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 2024ல் இதேகாலத்தில் 1.30 கோடி பீர்கள் விற்பனையாகி இருந்தன. அந்த விற்பனை தற்போது சரிந்துள்ளது. சில மாவட்டங்களில் மழை பெய்ததே விற்பனை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. எனவே விற்பனையை அதிகரிக்க 5 புதிய பீர்களை டாஸ்மாக் அறிமுகப்படுத்தவுள்ளது.
Sorry, no posts matched your criteria.