news

News November 7, 2024

சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்

image

சபரிமலை பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. நவ.15 முதல் ஜன.16 வரை சென்னை (கோயம்பேடு, கிளாம்பாக்கம்), திருச்சி, மதுரையிலிருந்து பம்பைக்கு Ultra Deluxe, Non-AC இருக்கை, Sleeper பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளின் விவரம் அறிய 9445014452, 9445014424, 9445014463 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

News November 7, 2024

பச்சத்துரோகி : நடிகரை சாடிய மதயானைக் கூட்டம் இயக்குனர்

image

மதயானை கூட்டம் பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் வெளியிட்டுள்ள பதிவில், மதயானை கூட்டத்திற்கு பிறகு வேறு பட வாய்ப்பு வரவில்லை. யாரும் அழைக்கவில்லை என்றே நினைத்தேன். ஆனால் வந்த வாய்ப்புகளை ஒருவன் தடுத்திருக்கிறான் என்பதை இன்றே தெரிந்துகொண்டேன். அவன் வேறு யாருமல்ல, அவனை நான் நடிகனாக்கினேன். பச்சை துரோகி.. என் எதிரிக்கு கைகூலியாக செயல்பட்டு இருக்கிறான் என்று குறிப்பிட்டிருக்கிறார். யார் அந்த நடிகர்..

News November 7, 2024

செந்தில் பாலாஜி வழக்கில் முக்கிய உத்தரவு

image

புதிதாக மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால், ED பதிவு செய்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்தார். குறுக்கு விசாரணைக்காக சாட்சி ஆஜராகியுள்ள நிலையில், விசாரணையை எப்படி ஒத்திவைப்பது? என கேள்வி எழுப்பிய சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, இதற்கு மேல் அவகாசம் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் விசாரணையை நவ.15க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

News November 7, 2024

அதிமுகவில் கள ஆய்வுக்குழு அமைப்பு

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் கள ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக கிளை, வார்டு, வட்டம் வாரியாக நேரில் சென்று இக்குழுவினர் கட்சிப் பணிகளை ஆய்வு செய்வார்கள் என இபிஎஸ் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். இக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

News November 7, 2024

தினசரி ₹ 5.7 கோடி நன்கொடை தரும் தொழிலதிபர்

image

ஒவ்வொருவரும் அவர்களால் இயன்ற அளவில் தொடர்ந்து தானம் செய்து கொண்டே இருக்கிறார்கள். அப்படி, ஒருவர் நாள் ஒன்றுக்கு ₹ 5.7 கோடி நன்கொடையாக வழங்குகிறார். அவர் வேறுயாருமில்லை, HCL நிறுவனர் ஷிவ் நாடார் தான். இத்தகவல் Hurun India என்ற அமைப்பின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நன்கொடை அளிப்பதில் முதல் இடத்தில் இருக்கும் அவரின் அறக்கட்டளை மூலம் 2023-24-ல் சுமார் ₹ 2,153 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

News November 7, 2024

IPL ஏலத்தில் கலந்து கொள்ளும் இந்திய வம்சாவளி வீரர்!

image

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நவ.24, 25இல் நடைபெறும் ஐபிஎல் மெகா ஏலத்தில் USA கிரிக்கெட் வீரர் சௌரப் நேத்ரவால்கர் தனது பெயரை பதிவு செய்துள்ளார். அவர் அடிப்படை விலையாக ரூ.30 லட்சத்தை நிர்ணயித்துள்ளார். மேலும் அவர் தேர்வு செய்யப்பட்டால் ஐபிஎல் போட்டியில் விளையாடும் முதல் அமெரிக்கர் என்ற பெருமையை பெறுவார். இந்திய வம்சாவளியான இவர் T20 WC தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

News November 7, 2024

மக்களே இப்போது விளக்கு ஏற்றுங்கள்.. பணம் கொட்டும்

image

சூரசம்ஹாரம் முடிந்து விட்டதால், இனி வீட்டில் ஷட்கோண கோலத்தில் 6 தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும். அதாவது, “ச,ர,வ,ண,ப,வ” என்ற 6 எழுத்திலும் தீபம் வைத்து வழிபட வேண்டும். அதேபோல் அகல் விளக்கில், நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்தக் கூடாது. ஒருமணி நேரம் விளக்கு நன்றாக எரியவிட வேண்டும். இதனால், கடன் தொல்லை நீங்கி, வீட்டில் பணம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

News November 7, 2024

மேற்கு ஆசியா அமைதிக்கு இந்தியா உதவனும்: ருவென்

image

மேற்கு ஆசியாவில் நிகழும் மோதல்களுக்கு தீர்வுகாண இந்தியாவின் பங்கு முக்கியமானது என இஸ்ரேல் தூதர் ருவென் அசார் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், மேற்கு ஆசியாவில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவது அவசியம் எனக் கூறிய அவர், இதற்கு இந்தியாவின் உதவி முக்கியம் என்றார். இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு-ஈரான் இடையே மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News November 7, 2024

நவ.28இல் சென்னை திரும்பும் அண்ணாமலை

image

லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நவ.28இல் தமிழகம் திரும்புகிறார். ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் சர்வதேச அரசியல் மேற்படிப்பை படிக்க கடந்த ஆக.28ஆம் தேதி லண்டன் சென்றார். அரசியல் படிப்பை முடித்துவிட்ட நிலையில் இம்மாத இறுதியில் நாடு திரும்புகிறார். அதனைத் தொடர்ந்து டிச.1இல் கோவையில் நடைபெறவுள்ள பாஜக நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கிறார்.

News November 7, 2024

கோலியின் Retirement : அதிர வைக்கும் ஜோதிடர் கணிப்பு

image

நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, நடைபெறவுள்ள BGT தொடரில் மிகவும் சிறப்பாக செயல்படுவார் என ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், கோலியின் கிரிக்கெட் வாழ்வின் சிறந்த காலங்களில் ஒன்று இனி வரவுள்ளதாக கூறினார். கோலி 2027-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து விளையாடுவார் ஆரூடம் கூறியுள்ளார். இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்து கோலி ஓய்வு பெற்றார்.

error: Content is protected !!