news

News November 8, 2024

தல தோனினா சும்மாவா..!

image

தோனிக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பார்த்து வியந்து போனதாக ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தெரிவித்துள்ளார். DC-யின் ஹோம் கிரவுண்டில் CSK-க்கு எதிராக ஆடிய போது, மைதானத்தில் எங்கு பார்த்தாலும் தோனியின் ஜெர்ஸி தான் தென்பட்டதாகவும், தோனி சிக்ஸ் அடிக்கும் போதெல்லாம் கோஷம் விண்ணைப் பொளந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒருவருக்கு இவ்வளவு ஆடியன்ஸ் இருப்பதை நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

ஜக்கி வாசுதேவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

image

ஜக்கி வாசுதேவுக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது. இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஜக்கி மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வாதிட்டும், தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

News November 8, 2024

‘அமரன்’ படத்தை விமர்சித்த ‘வெயில்’ இயக்குநர்

image

‘அமரன்’ திரைப்படம் காஷ்மீர் மக்களின் வாழ்வியலையும், வாழ்க்கை சூழலையும், அங்குள்ள அரசியலையும் பதிவு செய்ய தவறிவிட்டதாக இயக்குனர் வசந்தபாலன் விமர்சித்துள்ளார். வழக்கமான தீவிரவாத மற்றும் ராணுவ படமாகவே இருக்கும் என நினைத்து முதலில் பார்க்காமல் விட்டதாகவும், ஆனால் நல்ல விமர்சனங்கள் வந்ததால் படம் பார்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் SK கெரியரில் முக்கியமான படமாக இது அமைந்துள்ளது.

News November 8, 2024

ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழிகள்

image

*மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது, ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம். *என்னால் ஒரு கதவு வழியாகச் செல்ல முடியாவிட்டால், வேறொரு கதவு வழியாகச் செல்வேன், அல்லது ஒரு கதவை உருவாக்குவேன். *ஒரு பெண்னின் இயல்பில் மிகப்பெரிய மாற்றங்கள் காதலால் ஏற்படுகின்றன, ஒரு ஆணின் இயல்பில் மிகப்பெரிய மாற்றங்கள் இலட்சியத்தால் ஏற்படுகின்றன. *இந்த உலகை நாம் தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுவதாக சொல்கிறோம்.

News November 8, 2024

அமேசான், ஃபிளிப்கார்ட்டுக்கு செக் வைக்கும் ED?

image

அமேசான், ஃபிளிப்கார்ட் தளங்களின் முக்கிய விற்பனையாளர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் ED ரெய்டு நடத்தியுள்ளது. வெளிநாட்டு செலவாணி மேலாண்மை சட்டம் (FEMA) மற்றும் வெளிநாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் சொந்தமாக பொருள்களை விற்க கூடாது என்ற FDI சட்டத்தை இந்நிறுவனங்கள் மீறியுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை மிகப்பெரிய விசாரணையை தொடங்கியுள்ளது.

News November 8, 2024

டிரம்ப் அரசில் முடிசூடும் இந்தியர்கள்

image

2025 ஜனவரியில் அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப், தனது அமைச்சரவையில் 4 இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விவேக் ராமசாமிக்கு உள்துறை வழங்கப்படலாம் என கருதப்படுகிறது. காஷ்யப் காஷ் படேலுக்கு உளவுத்துறையான CIA இயக்குநராகலாம் என கூறப்படுகிறது. பாபி ஜிண்டாலுக்கு சுகாதரத்துறையும், நிக்கி ஹேலிக்கு வெளியுறவுத்துறையும் வழங்கப்படலாம் என கருதப்படுகிறது.

News November 8, 2024

மௌனம் கலைத்த ஆண்டர்சன்

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன் (42), IPL மெகா ஏலத்திற்கு பதிவு செய்தது ஏன் என தெரிவித்துள்ளார். தன்னுள் இருக்கும் ஏதோ ஒன்று தொடர்ந்து தன்னால் விளையாட முடியும் என கூறி வருவதாகவும், IPL-ல் இதற்கு முன் விளையாடியது இல்லை உள்ளிட்ட பல காரணங்கள் தன்னை பதிவு செய்ய வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆண்டர்சன் கடைசியாக கடந்த 2014ல் டி20 போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: இனியவைகூறல். ▶குறள் எண்: 94 ▶குறள் : துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. ▶ விளக்க உரை: எவரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பம் தரும் வறுமை வராது.

News November 8, 2024

சனாதனத்திற்கு தடையாக இருந்தால்.. RSS எச்சரிக்கை

image

சனாதனம் மற்றும் துறவிகளின் பணிகளுக்கு தடையாக இருக்கும் அனைத்தையும், சங்க தொண்டர்கள் தடி கொண்டு அகற்றுவார்கள் என RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையில் இருந்து பாடம் கற்குமாறும், நாம் அஞ்சவோ, அநீதியை பொறுத்துக் கொள்ளவோ தேவையில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், வேறுபாடுகள் இருப்பினும் நாம் அடிப்படையில் ஒரு மக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

TrueCaller அலுவலகத்தில் ரெய்டு

image

இந்தியாவில் உள்ள TrueCaller நிறுவனத்தின் அலுவலகங்களில் IT அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து பெங்களூரு, மும்பை மற்றும் குருகிராமில் உள்ள அலுவலகங்களில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னறிவிப்பு இல்லாமல் ரெய்டு நடத்தியதாகவும், சர்வதேச தரநிலைகளுக்கு உட்பட்டே பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக TrueCaller தெரிவித்துள்ளது.

error: Content is protected !!