India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் இஸ்லாமியர் குறித்து அவதூறு கருத்துகள் உள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளதால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம். முன்னதாக SDPI அமைப்பினர் நேற்று கமல் வீட்டை முற்றுகையிட்டு, அவரது உருவ பொம்மையை எரித்து போராட்டம் செய்தனர். படம் பார்த்தீர்களா? உங்க கருத்து?
இந்தியாவை GREAT POWER என்று ரஷ்ய அதிபர் புதின் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவை இயற்கையான கூட்டாளி, பல்லாண்டு நட்பு நாடு என்றும் அவர் கூறியுள்ளார். உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்று இந்தியா என்றும், அந்நாட்டுடன் அனைத்து துறைகளிலும் உறவை வலுப்படுத்தி வருவதாகவும், இரு நாட்டு நட்புக்கு பிரமோஸ் ஏவுகணையே சிறந்த எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கி, நடிக்கும் ‘இட்லி கடை’ படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கும் படம் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அருண்விஜய், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷுக்கு ஜோடியாக நித்தியா மேனன் மீண்டும் நடிக்க உள்ளார்.
சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்தார். அருந்ததியினருக்கான 3% உள் ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்யக்கோரி அவர் ஆளுநரிடம் மனு அளித்தார். நேற்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்ற அவரை, போலீசார் தடுத்ததால் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஆதரவாளர்களுடன் கைதான நிலையில், இன்று ஆளுநரை சந்தித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட், மனைவி ஜெஸிகா தம்பதிக்கு 2ஆவது குழந்தை பிறந்துள்ளது. 2023இல் திருமணம் செய்த அவர்களுக்கு ஏற்கெனவே மிலா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 2ஆவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு ஹாரிசன் ஜார்ஜ் என பெயரிட்டுள்ளனர். குடும்பமாக 4 பேரும் எடுத்த படம் வைரலாகி வருகிறது. IPLஇல் SRH அணிக்காக விளையாடும் டிராவிஸூக்கு TIGER என்ற செல்லப் பெயரும் உண்டு.
ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன் படம், அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஞானவேல்ராஜா இயக்கிய அந்தப் படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் வெளியான அந்தப் படம் இதுவரை ரூ.250 கோடி வசூலித்துள்ளது. நீங்கள் வேட்டையன் பார்த்து விட்டீர்களா? படம் எப்படி இருக்கு? கீழே கமெண்ட் பதிவிடுங்க.
வெங்காயம் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ₹60க்கு விற்கப்பட்டு வந்த வெங்காயம், இன்று ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ₹130 வரை விற்பனையாகி வருகிறது. வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 3.1 கோடி வாடிக்கையாளர்களின் தரவுகள், சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்படும் DARK NET தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் எண், மொபைல் நம்பர், வருமான விவரம், முகவரியை மர்ம நபர்கள் வெளியிட்டு, விற்பனைக்கு ரெடி என பதிவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கசிவு குறித்து விசாரித்து வருவதாக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் தெரிவித்துள்ளது.
மாடுகள் கடவுள், அவற்றை சாலையில் விட வேண்டாம் என நிக்கி கல்ராணி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாடுகளை வளர்ப்போர், அவற்றை சாலையில் விடுவதை பார்க்கையில் கஷ்டமாக இருப்பதாகவும், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் மீது மட்டுமல்லாமல் அனைத்து விலங்குகள் மீதும் கருணை காட்ட வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீங்கள் மாடு வளர்க்கறீங்களா? அதை எங்கு விட்டுள்ளீர்கள்? கீழே பதிவிடுங்க.
நாட்டின் முன்னணி கோடீஸ்வரர்கள் 203 பேர் 2024 நிதியாண்டில் ரூ.8,783 கோடி நன்கொடை அளித்துள்ளனர். 2023இல் அளித்த ரூ. 8,445 கோடியுடன் ஒப்பிடுகையில் 4%மும், 2023இல் அளித்த ரூ.5,623 கோடியுடன் ஒப்பிடுகையில் 55%மும் இது அதிகமாகும். கிருஷ்ணா சிவுகுலா, IIT MADRAS-க்கு ரூ.228 கோடி நன்கொடை அளித்துள்ளார். நன்கொடை அளிக்கும் வழக்கம் உங்களுக்கு உண்டா? அப்படியெனில் கீழே பதிவிடுங்க.
Sorry, no posts matched your criteria.