news

News October 13, 2024

ஈரான் மீது சைபர் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

image

போர் மூளும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது சைபர் தாக்குதலை இஸ்ரேல் அரசு முன்னெடுத்துள்ளது. ஈரான் நாடாளுமன்றம், நீதித்துறை நிர்வாக அலுவலகம், அணுசக்தி நிலையம், மின் விநியோக கட்டமைப்பு உட்பட பல்வேறு இடங்களை குறிவைத்து சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இதில் முக்கியமாக ரகசிய தகவல்கள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் ஈரான் அரசின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News October 13, 2024

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..!

image

அடுத்த 2 நாள்களுக்கு தமிழகத்தில் அதிகனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, வாகனங்களை முன்னெச்சரிக்கையோடு பாதுகாப்பது அவசியமாகிறது. வாகனங்களை மேடான பகுதியில் பார்க் செய்யுங்கள். Rain Cover போட்டு வாகனங்களை மூடி வையுங்கள். சாலையில் செல்லும்போது பள்ளம், மேட்டை கவனத்தில் கொள்ளவும். வெள்ளநீர் புகுந்து வாகனம் நின்று விட்டால், ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காமல் மெக்கானிக்கிடம் விடவும்.

News October 13, 2024

‘ஆரஞ்சு அலர்ட்’ அப்படின்னா என்ன?

image

24 மணி நேரத்திற்கு 115.6 மிமீ – 204.4 மிமீ. வரை பெய்யும் மழைக்கு (காற்றின் வேகம் மணிக்கு 41- 61 கி.மீ) ஆரஞ்சு நிற அலர்ட் விடுக்கப்படுகிறது. இதனை பெரு மழை அல்லது மிகக் கனமழை என்று வானிலை ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். இடி மின்னலுடன் கூடிய பொழியும் இப்பெரு மழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்

News October 13, 2024

பிரச்னையை Left Handஇல் டீல் செய்யும் ஓவியா!

image

அருவருக்கத்தக்க வகையில் கேள்வி கேட்ட நெட்டீசன்களுக்கு ஓவியா கூலாக பதிலளித்துள்ளார். ஓவியா தொடர்பான ஆபாச வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து, OviyaLeaked என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இந்நிலையில், ரசிகர்களின் ட்ரோல்களை Left Handஇல் டீல் செய்து வருகிறார். முன்னதாக, தன்னை போன்று சித்தரிக்கப்பட்ட வீடியோ தொடர்பாக கேரள சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 13, 2024

பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்றது பிஸ்னோய் குழு

image

மராட்டிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் படுகொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஸ்னோய் குழு பொறுப்பேற்றுக் கொண்டது. மும்பையில் வாடகை வீடு எடுத்து தங்கி, கடந்த 2 மாதங்களாக பாபா சித்திக்கின் நடமாட்டத்தை கண்காணித்து, அவரை ஹரியானாவைச் சேர்ந்த குல்மெய்ல் சிங், உ.பி.யைச் சேர்ந்த தர்மராஜ் காஷ்யூப் சுட்டுக்கொன்றுள்ளனர். கொலை அரங்கேற்ற ஒரு கொலையாளிக்கு தலா ₹50,000 வீதம் பணம் தரப்பட்டுள்ளது.

News October 13, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14345105>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) பெங்கால் கெசட் 2) Employees Provident Fund 3) பியரி டெ கூபர்டின் 4) ஆறுமுக நாவலர் 5) ஒட்டகம் 6) டேனிஷ் குரோன் 7) ஆந்தை. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள்.இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 13, 2024

நாளை சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?

image

தமிழ்நாட்டில் 20%க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, நாளை, நாளை மறுநாள் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டதால், மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News October 13, 2024

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்?

image

சதயம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் சொன்ன வார்த்தையை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பெற்றோர், உடன்பிறந்தோர் மீது அன்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டத் தெரியாது. சமூகச் சீர்திருத்த சிந்தனை, இரக்க சுபாவம், பேச்சாற்றல், பல்துறை விஷயஞானம், தன்னடக்கம் உள்ளவராக இருப்பீர்கள் என்கிறது நந்தி வாக்கியம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 13, 2024

அது மாதிரியான படங்களை எடுக்க முடியாது: லோகேஷ்

image

குவென்டின் டரான்டினோ இயக்கிய கில் பில் மாதிரியான படங்களை இந்தியாவில் எடுக்கவோ, வெளியிடவோ முடியாது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக கூறியுள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தான் எடுக்க நினைத்த ஆக்ஷன் திரைப்படத்தை இன்னும் எடுக்கவில்லை எனக் கூறிய அவர், ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை அப்படியே எடுக்க முடியாது என ‘கைதி’ படத்தின் சென்சாரின்போது தெரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

News October 13, 2024

சென்னை மக்களே! நாளை மதியத்திற்கு மேல் எச்சரிக்கை

image

நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் நோக்கி வரக்கூடும். இதனால், நாளை முதல் டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் நாளை மதியம் முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை கனமழை பெய்யலாம். எனவே, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!