news

News April 13, 2025

8 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

image

ஆந்திராவின் கைலாசப்பட்டினத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹50,000 நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் படுகாயமடைந்து ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 13, 2025

நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம்: அன்புமணி

image

பாமகவின் உட்கட்சி விவகாரத்தை நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வோம் என அன்புமணி தெரிவித்துள்ளார். ராமதாஸ் வழிகாட்டுதலில் பாமகவை ஆளுங்கட்சியாக மாற்ற உழைப்போம் எனவும், மே 11-ம் தேதி நடைபெறும் வன்னியர் இளைஞர் திருவிழாவில் பாமகவின் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, எல்லாம் சரியாகிவிடும், தொண்டர்கள் சோர்ந்து போக வேண்டாம் என ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

News April 13, 2025

ரோஹித்துக்கு ஒரு இன்னிங்ஸ் போதும்: கிளார்க்

image

ரோஹித் போன்ற சூப்பர் ஸ்டாருக்கு, தனது ஃபார்மை நிரூபிக்க ஒரு இன்னிங்ஸ் போதும் என முன்னாள் AUS கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஒரு ஆட்டத்தில் 40- 60 ரன்கள் வரை எடுத்துவிட்டால், அந்த உத்வேகத்தை கொண்டு நிச்சயம் சதம் அடிப்பார் எனவும், அதன்பிறகு அவரது சிறந்த ஃபார்மை பார்க்கலாம் எனவும் கிளார்க் கூறியுள்ளார். நடப்பு IPL-ல் இதுவரை 4 போட்டிகளில் வெறும் 38 ரன்களை மட்டுமே ரோஹித் எடுத்துள்ளார்.

News April 13, 2025

என்னை வைத்து கூட்டணியை உடைக்க முயற்சி: திருமா

image

தன்னை துருப்புச் சீட்டாக வைத்து திமுக கூட்டணியை உடைக்க பலரும் கனவு கண்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். வளைந்து கொடுப்பதால் முறித்துவிடலாம் என முயற்சித்தார்கள், ஆனால் முறிந்துவிடமாட்டேன் எனவும், தான் வளைந்து கொடுப்பவன்தான், ஆனால் அவ்வளவு எளிதாக தன்னை உடைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். சராசரியான அரசியல் நகர்வுகளுக்கு விசிக ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

News April 13, 2025

இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழை

image

இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. பெரம்பலூர், திருச்சி, காேவை, விருதுநகரில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. இதேபோல், சேலம், தஞ்சை, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், அரியலூர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

News April 13, 2025

பிரபல நடிகர் கலைப்புலி ஜி.சேகரன் காலமானார்

image

பிரபல நடிகரும், இயக்குநருமான கலைப்புலி ஜி.சேகரன் (73) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உளவாளி, ஜமீன் கோட்டை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், 2000-ல் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவரான பிறகு சினிமாவில் விநியோகஸ்தர்களின் குரலை ஓங்கச் செய்தவர். ஜி.சேகரன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 13, 2025

7 மாத குழந்தையை கடித்துக் கொன்ற பிட்புல் நாய்

image

அமெரிக்காவில் 7 மாத பெண் குழந்தையை பிட்புல் நாய் கடித்து காென்றுள்ளது. ஓஹியாேவைச் சேர்ந்த கேமரூன் டர்னர், மெக்கன்சி கோப்லி, தம்பதிக்கு எலிசா என்ற 7 மாத குழந்தை இருந்தது. வீட்டில் 3 பிட்புல் நாய்களை வளர்த்த நிலையில், அதில் ஒன்று குழந்தையை கடித்து குதறியது. இதில் குழந்தை உயிரிழந்தது. குழந்தையை நாய் ஏன் கடித்தது எனத் தெரியாத நிலையில், 3 நாய்களை போலீசார் பிடித்து சென்றுள்ளனர்.

News April 13, 2025

சிறுநீரகத்தில் கற்கள்.. இதுதான் அறிகுறிகள்

image

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் பிரச்னையை கீழ்காணும் அறிகுறிகள் மூலம் நாம் அறிய முடியும். 1) இடுப்பின் பின் பகுதியில் வலி உருவாகும் 2) குமட்டல், வாந்தி 3) சிறுநீர் கழிக்கும்போது வலி 4) சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுவது 5) காய்ச்சல் 6) சிறுநீரில் துர்நாற்றம். மேற்கண்ட அறிகுறிகள் இருப்பின், அது சிறுநீரக கற்கள் பிரச்னையாக இருக்கலாம். ஆதலால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

News April 13, 2025

பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்..!

image

மே மாதத்தில் குரு பகவான் மிதுன ராசிக்குள்ளும், புதனும் சுக்ரனும் மேஷ ராசிக்குள்ளும் நுழைகிறார்கள். இதனால், 3 ராசிகளுக்கு பணம் கொட்டும். *மேஷம்: வேலை, தொழிலில் பெரிய வெற்றி கிட்டும். லாபம் ஏற்படும். *மிதுனம்: பணியில் பதவி உயர்வு கிடைக்கும். பரம்பரை சொத்துகள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும். *சிம்மம்: பண வரவு அதிகரிக்கும். பணியில் பதவி உயர்வு, ஆதாயம் கிடைக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

News April 13, 2025

‘குடும்பஸ்தன்’ படத்தை மிஸ் செய்த 2 நடிகர்கள்

image

மணிகண்டன் நடித்த ‘குடும்பஸ்தன்’ படம் மாபெரும் ஹிட்டானது. இந்த படத்தின் கதை முதலில் அசோக் செல்வனிடம் கூறப்பட்டது. ஆனால் கால்ஷீட் இல்லாததால், அவரால் நடிக்க முடியவில்லை. ஆனால், அதற்கும் முன்னதாகவே இந்த கதை தன்னிடம் சொல்லப்பட்டதாக சிபிராஜ் தெரிவித்துள்ளார். சில காரணங்களால் படம் மிஸ் ஆனதாகவும், ஆனால் மணிகண்டன் பண்ண அளவிற்கு அந்த கேரக்டரை வேறு யாராலும் பண்ண முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!