India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செப்டம்பர் மாத காலாண்டு முடிவுகளை OLA நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அந்நிறுவனம் ₹1,240 கோடி வருவாய் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டை விட குறைந்த நஷ்டத்தையும் பதிவு செய்துள்ளது. நஷ்ட அளவீடு ₹524 கோடியில் இருந்து ₹495 கோடியாக குறைந்துள்ளது. EV பைக்குகளின் தரம், சர்வீஸ் குறித்த பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் அந்நிறுவனம் அதிக வருவாயை ஈட்டியுள்ளது.
NZ-க்கு எதிரான டெஸ்டில் படுதோல்வி அடைந்த நிலையில், பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் ரோஹித், தேர்வுக் குழு தலைவர் அகார்கர் ஆகியோரிடம் BCCI ரிவ்யூ மீட்டிங் நடத்தியுள்ளது. சுமார் 6 மணி நேரமாக பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. AUS சுற்றுப்பயணத்திற்கு முன் இப்படியா சந்திப்பு நடப்பது வழக்கம் தான் என்றாலும், கம்பீரின் பயிற்சி குறித்து அதிகம் விவாதம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹிமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தருக்காக ஆர்டர் செய்யப்பட்ட சமோசாவை ஊழியர்கள் சாப்பிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக CID விசாரணைக்கு உத்தரவிட்டதும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தை சமோசாவுக்கு என பாஜகவும், ஊடகமும் மடைமாற்றி விட்டதாக சுக்விந்தர் விமர்சித்துள்ளார். அதிகாரிகளின் தவறான நடத்தை குறித்து விசாரிக்கவே உத்தரவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: இனியவைகூறல். ▶குறள் எண்: 95 ▶குறள் : பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. ▶ விளக்க உரை: அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.
உத்தரபிரதேசத்தில் 5 நாய்க்குட்டிகளை பெட்ரோல் ஊற்றி, 2 பெண்கள் உயிரோடு கொளுத்திய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிறந்து சில நாள்களே ஆன குட்டிகள், சத்தம் போட்டுக் கொண்டே இருந்த ஆத்திரத்தில் ஷோபாவும், ஆர்த்தியும் இந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர். கடந்த 5ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றனர்.
SA-க்கு எதிரான நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் 107 ரன்களை விளாசினார். ஒரே போட்டியில் அதிக சிக்சர்களை அடித்த வீரர், டி20-யில் தொடர்ந்து 2 போட்டிகளில் சதம் விளாசிய வீரர் என 2 சாதனைகளை படைத்தார். இந்நிலையில், இந்த ஒரு தருணத்திற்காக 10 ஆண்டுகளாக காத்திருந்ததாக அவர் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். மேலும், இந்த தருணத்தில் கால்கள் தரையில் இருக்க வேண்டும் என்பது தெரியும் எனவும் கூறியுள்ளார்.
அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 20 புதிய இருசக்கர மற்றும் 3 சக்கர EV மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக OLA நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்காக அதன் ரீடெய்ல் கடைகளை 2,000 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு வருடத்திற்கு 3-5 வாகனங்களை அறிமுகம் செய்தாலே, டிமாண்ட்டுக்கு ஏற்றபடி வாகனங்களை உற்பத்தி செய்வது கடினம் என்ற சூழலில், OLA-வின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶நவ. 9 (ஐப்பசி 23) ▶சனி ▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM, 04:45 PM – 05:45 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM, 09:30 PM – 10:45 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 01:30 PM – 03:00 PM ▶குளிகை: 06:00 AM – 07:30 AM ▶திதி: அஷ்டமி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶ நட்சத்திரம்: திருவோணம் ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம்.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் முழு சீக்கியர்களும் காலிஸ்தானிகள் இல்லை எனவும், நரேந்திர மோடியை ஆதரிக்காத இந்துக்களும் கனடாவில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா அரசு ஆதரவு கொடுப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டி வந்த நிலையில், ஜஸ்டின் அதை ஒப்புக் கொண்டுள்ளார்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் இன்று 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக இது அமைந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.