India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று நடைபெறும் மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் பவுலிங்கை தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் இந்திய அணி அரையிறுதிக்கு எளிதாக முன்னேறும். இன்று எந்த அணி வெற்றிபெறும் என நினைக்கிறீர்கள்?
ஞாயிறு பிரதோஷ வழிபாடு – மங்கள ஓசை மனையில் கேட்கும்.
திங்கள் பிரதோஷ வழிபாடு – சிந்தனைகள் வெற்றி பெறும்.
செவ்வாய் பிரதோஷ வழிபாடு – பூமி யோகம் உண்டு
புதன் பிரதோஷ வழிபாடு – கல்வி, கேள்விகளில் தேர்ச்சி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
வியாழன் பிரதோஷ வழிபாடு – புத்திரப்பேறு கிடைக்கும். பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.
வெள்ளி பிரதோஷ வழிபாடு – செல்வ வளம் பெருகும். சனி பிரதோஷ வழிபாடு – இழந்ததை மீண்டும் பெறலாம்.
பழங்கால மக்களின் வாழ்க்கை தொடர்பான கண்டுபிடிப்புகள் நமக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும் விதமாக உள்ளன. அந்தவகையில், சமீபத்தில் எகிப்திய பாலைவனங்களில் வட்ட வடிவிலான நடுகற்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 7,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் இந்த கற்களை காலண்டராக பயன்படுத்தியதாகவும், அதை பயன்படுத்தி நட்சத்திரங்களைப் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஜெயவர்த்தனே, ஐபிஎல் MI அணியின் ஹெட் கோச் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 2022 முதல் ஹெட் கோச் ஆக மார்க் பவுச்சர் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது ஜெயவர்த்தனே மீண்டும் ஹெட் கோச் ஆக மும்பைக்கு திரும்புகிறார். முன்னதாக 2017-2022 காலகட்டத்தில் MI கோச்சாக ஜெயவர்த்தனே இருந்த போது 3 முறை அந்த அணி கோப்பையை வென்றுள்ளது. ஜெயவர்த்தனே வருகை MI-க்கு வெற்றியை கொண்டு வருமா?
அழுகிய மற்றும் கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்துவது; பிளாஸ்டிக் ஷீட்டுகளில் சாப்பாடு வைப்பது; கேன்சர் விளைவிக்கும் நிறமிகளை பயன்படுத்துவது என பெரும்பாலான ஓட்டல்களில் அட்டூழியம் நடக்கிறது. இந்நிலையில், ஓட்டல்களில் இதுபோன்று நடந்தால் 94440 42322 என்ற எண்ணுக்கு வீடியோ, புகைப்படம் அல்லது மெசேஜ் மூலம் புகார் அளிக்கலாம் என உணவுப் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. Share It.
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள புதிய படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இப்படத்தில் ராம் சரனுடன், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அக்.16-ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 204.5 மி.மீ அல்லது அதற்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு இருந்தால் மட்டுமே ரெட் அலர்ட் விடுக்கப்படும். இப்படி எச்சரிக்கை வந்தால், மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என அர்த்தம். எனவே, மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்வது நல்லது.
நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ என்ற பெயரில் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது நீங்களா? இல்லையா? என ரசிகர் ஒருவர் இன்ஸ்டாவில் ஓவியாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துள்ள ஓவியா, “அது ஒரு புதிராகவே இருக்கட்டும்” என பதிலளித்துள்ளார். மேலும், அந்த வீடியோ தொடர்பாக அவர் சைபர் கிரைமில் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக மாநாட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தவெக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை நியமித்து விஜய் உத்தரவிட்டுள்ளார். மாநாட்டிற்கான ஒருங்கிணைப்பு குழு தொடர்பான அறிவிப்பை விஜய் நேற்று வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் அக்.27 அன்று நடைபெறுகிறது.
Patronize என்பதற்கும் Patriotism என்பதற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? ஒருவரை அனுதாபத்துடன் அணுகி, அவருக்கு உதவும் வகையில் நடந்துகொண்டால் Patronize செய்வதாகப் பொருள். Patriotism என்றால் (National Pride) தேசபக்தியைக் குறிக்கும். Patronize என்ற லத்தின் சொல்லில் இருந்து Patronisare என்பதும், Patriotism என்ற கிரேக்க சொல்லில் இருந்து Pater என்பதும் உருவானதாக சொற்பிறப்பியல் அகராதி கூறுகிறது.
Sorry, no posts matched your criteria.