India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Chest Thumping என்பதற்கும், ஒப்பாரி வைப்பவர்களுக்கும் தொடர்பில்லை. நெஞ்சு வலி போன்ற சாவின் விளிம்பில் இருப்பவர்களுக்குச் செய்யப்படும் முதல் உதவியாகவும் இதை நினைத்துவிடாதீர்கள். அப்படியானால் Chest Thumping என்றால் என்ன? Chest Thumping என்ற சொல் தற்பெருமை அடித்துக்கொள்வதை குறிக்கின்றது. இதற்கு சமமான சொற்களாக Bragging, Boasting (தற்பெருமை, வீண் பெருமை பேசுதல்) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
தென்மேற்கு வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அங்கு நேற்று நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதியில் நிலவுவதாகவும், இதன் காரணமாக அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் கூறியுள்ளது. இது 2 நாள்களில் மேற்கு திசையில், தமிழக – இலங்கை கடலோரப்பகுதியை நோக்கி நகரும் எனவும் கணித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி விரைவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதில் தோல்வியடைந்தால், பயிற்சியாளர் பதவியை பகிர்ந்தளிக்க BCCI முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, ஒருநாள், டெஸ்ட், டி20 கிரிக்கெட்டுக்கு தனித்தனி பயிற்சியாளரை நியமிக்க BCCI முடிவு செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரை தனித்தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 7 நாள்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, குமரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, 11ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. SHARE IT.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா இன்று காலை 8.30 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் நாளான இன்று கருத்தரங்கம், 1,039 பேர் பங்கேற்கும் பரத நாட்டியம், பட்டிமன்றம், ‘சதய நாயகன் ராஜராஜன்’ வரலாற்று நாடகம் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து நாளை ஓதுவாமூர்த்திகளுடன் ராஜ வீதிகளில் வீதியுலா, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேராபிஷேகம் நடைபெறும்.
சோறு வடித்த கஞ்சியை சருமத்துக்கும் கூந்தலுக்கும் பயன்படுத்துவது நல்ல பலன்களை அளிப்பதாக American Chemical Society ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், கஞ்சியில் மிக அதிகளவில் இருக்கும் Peptides புரத அமிலங்கள் இளமை, முடி வளர்ச்சி & எலாஸ்டிக் தன்மைக்கு காரணமான கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது. வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் Suntan, Sunburn போன்ற பாதிப்புகளை போக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை செல்ல ஜெகன் மோகனுக்கு தைரியம் இல்லையென காங்., மாநிலத் தலைவர் ஷர்மிளா கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து பேசிய அவர், பேரவைக்கு செல்ல தைரியம் இல்லாதவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். இதனிடையே பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மோடி பிரதமராக இருப்பது மகிழ்ச்சி எனவும், ஆனால் அவரது ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில் வளர்ச்சி இல்லை என்றும் விமர்சித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரியில் பதவியேற்க உள்ளார். அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கருக்கலைப்பு, பெண்களுக்கான சுதந்திரம் பறிக்கப்படும் எனக் கூறி கொரிய பெண்ணியவாத ‘4B’ இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டேட்டிங், No Sex Strike-ல் ஈடுபடப் போவதாகக் கூறி சிலர் பெண்கள் மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ஃபோன்களுக்கு சிறுவர்கள் அடிமையாகி வருவதாக தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வில் சமூக வலைதளங்கள், Online games, OTT தளங்களுக்கு சிறார்கள் அடிமையாகிவிட்டதாக 66% பேர் தெரிவித்துள்ளனர். பெற்றோர்களும் பிள்ளைகள் அவர்களை தொல்லை செய்யாமல் இருக்க ஃபோனை அவர்களிடம் கொடுக்கிறார்கள். அதை மாற்றி வெளியில் விளையாட அனுப்பினால் குழந்தைகள் வாழ்க்கை பாடத்தை கற்க முடியும்.
நீரில் ஊற பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சம் ஆகியவற்றை சிறிது பால் சேர்த்து அரைக்கவும்.
கேழ்வரகை 6 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து அதிலிருந்து பால் எடுக்கவும். அதை 10 நிமிடங்கள் மிதமான தீயில் காய்ச்சவும். அதனுடன் அரைத்த பாதாம் கலவை, ஏலக்காய் பொடி சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான & ஆரோக்கியமான கேழ்வரகு டிரை ஃப்ரூட்ஸ் மில்க் ஷேக் ரெடி.
Sorry, no posts matched your criteria.