news

News November 10, 2024

Bigg Boss 8 தமிழ்: இந்த வார Elimination இவரா…?

image

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடந்த வாரம் 5 போட்டியாளர்கள் புதிதாக உள்ளே சென்றார்கள். அதே நேரத்தில், ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் ஆகிவிட்டார்கள். கடந்த வாரம் தீபாவளி என்பதால் யாரும் எலிமினேட் ஆகவில்லை. இந்த வாரம் எலிமினேஷனாக சுனிதா வெளியேறுவார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நீங்க சொல்லுங்க யார் எலிமினேட் ஆக போறாங்க..?

News November 10, 2024

அரசியல் கட்சிகள், தனியாரிடம் இருந்து அழுத்தம்: CJI

image

நீதிபதிகளுக்கு அரசியல் கட்சிகள், தனியார் நலக் குழுக்களிடம் இருந்து அழுத்தம் தரப்படுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திராசூட் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளையுடன் அவர் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். இந்நிலையில் அவர், செய்தி தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் மூலம் குறிப்பிட்ட திசையில் பயணிக்கும்படி நீதிபதிகளுக்கு தனியார் அழுத்தம் தருவதாக தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

காலையில் வெறும் வயிற்றில் பாலை குடிக்கலாமா?

image

உடல் நலனுக்காக பாலை குடிப்பது அவசியமானது தான். எனினும் காலையில் வெறும் வயிற்றில் அதை குடிப்பது நல்லதன்று. அல்மிடிக், ஒலிக் அமிலங்களைக் கொண்ட இதை குடிக்கும்போது குடலில் அமிலத்தன்மை அதிகரிக்க நேரிடலாம். அதில் உள்ள லாக்டோஸ் வயிறு உப்புசம், வாயு தொல்லை உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும். சளி தொல்லைக்கு வழிவகுக்கும். புரதம் & இதர விஷயங்களால் படை நோய், அரிப்பு போன்ற சரும பாதிப்புகளை உண்டாக்கலாம்.

News November 10, 2024

நடிகை கஸ்தூரி தலைமறைவு?

image

சென்னையில் தங்கியிருந்த நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சம்மன் அளிக்க போலீசார் அவரது வீட்டிற்கு சென்றபோது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. தனது செல்போனையும் ஸ்விட் ஆஃப் செய்துவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

News November 10, 2024

X-Ray-க்கு பதில் Xerox எடுத்து கொடுத்த அரசு மருத்துவமனை

image

எக்ஸ்ரேக்கு பதில் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்த சம்பவம் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. காளிபாண்டி என்பவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளார். அவருக்கு எக்ஸ்ரே எடுத்த போது, ஃபிலிம் தீர்ந்ததால், ரிப்போர்ட்டை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்துள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள். மனமுடைந்த காளிபாண்டி, இதில் உரிய நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News November 10, 2024

அடுத்தாண்டு ‘சமுத்ரயான்’ திட்டத்தை செயல்படுத்த திட்டம்

image

ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் ‘சமுத்ரயான்’ திட்டத்தை அடுத்தாண்டு தொடக்கத்தில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேசிய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன், படிப்படியாக 6,000 மீட்டர் ஆழத்துக்கு சென்று ஆய்வு நடத்தவுள்ளதாகக் கூறினார். ஆழ்கடலின் வளங்களையும், பல்லுயிர் மதிப்பீடுகளையும் ஆய்வு செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

News November 10, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) உலகின் மிகப் பழமையான நிலப்பகுதி எது? 2) RDX என்பது யாரை குறிக்கும்? 3) Ornithology என்றால் என்ன? 4) உலக அழகி பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்? 5) உடலுறுப்புகளின் அசைவுகளை வரைபடமாக வரைய பயன்படும் கருவி எது? 6) நண்டின் ரத்த நிறம் என்ன? 7) எந்த தனிமம் F என்ற வேதியியல் குறியீட்டைக் கொண்டுள்ளது? 8) ஜாஸ்தி எந்த மொழி சொல்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.

News November 10, 2024

கோழி இறைச்சி வாங்குவோர் கவனத்திற்கு..

image

கறிக்கோழி கொள்முதல் விலை இன்று கிலோவுக்கு ரூ.7 குறைந்துள்ளது. பல்லடத்தில் நேற்று பண்ணை கறிக்கோழி ( உயிருடன்) கொள்முதல் விலை கிலோ ரூ.106ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அந்த விலை இன்று ரூ.7 குறைக்கப்பட்டு ரூ.99ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பல்லடத்தில் உள்ள பண்ணை கறிக்கோழி கொள்முதல் குழு, நாள்தோறும் கோழி கொள்முதல் விலையை நிர்ணயித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News November 10, 2024

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மகன் கைது!!

image

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை கோவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக, நக்கீரன் இதழைக் கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாலாஜி, மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக வந்த புகாரின் அடிப்படையில் பாலாஜி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதாகியுள்ளார்.

News November 10, 2024

பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

image

ஜம்மு – காஷ்மீர் குறித்து பொய் சொல்வதால் உண்மை மாறாது என பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. ஐ.நா.வின் அமைதி காக்கும் நடவடிக்கை தொடர்பான விவாதத்தின்போது, காஷ்மீர் பிரச்னையை பாக்., எழுப்பியது. இதற்கு பதிலளித்த இந்திய குழுவின் தலைவர் சுதான்ஷூ திரிவேதி, JK மக்கள் ஜனநாயக உரிமை மூலம் புதிய அரசை தேர்வு செய்துள்ளனர். JK எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்றார்.

error: Content is protected !!