India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நிர்வாண காட்சியாலேயே தனக்கு பட வாய்ப்பு கிடைத்ததாக ஹாலிவுட் நடிகை Shannon Elizabeth தெரிவித்துள்ளார். ஹாலிவுட் காமெடி திரைப்படங்களில் முக்கியமான படம் American Pie. ஆபாச வசனங்கள் நிறைந்த அடல் காமெடி படமான அதில் ஏராளமான காட்சிகள் இன்றும் பேசப்படுகின்றன. அதில் Shannon Elizabeth-ன் நிர்வாண காட்சியும் ஒன்று. அந்த காட்சியில்லையேல் ஹாலிவுட்டில் தனக்கு கேரியரே இருந்திருக்காது என அவர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் 5 வயது சிறுமியை ரேப் முயற்சியின் போது கொலை செய்தவரை போலீஸ் என்கவுன்ட்டர் செய்துள்ளது. சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்திய போலீஸ், சிசிடிவி காட்சி மூலம் இந்த கொடுஞ்செயலுக்கு காரணம் பீகாரைச் சேர்ந்த ரித்தேஷ் குமார் என்பதை உறுதிப்படுத்தியது. அவனை கைது செய்ய முயன்ற போது போலீஸை தாக்கிவிட்டு அவன் தப்பியோட முயன்றுள்ளான். அப்போது, ரித்தேஷை போலீஸ் என்கவுன்ட்டர் செய்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட போவதாக அதிமுகவில் இருந்து விலகிய EX எம்எல்ஏ கே.ஏ.யு. அசனா அறிவித்துள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காரைக்கால் தெற்கு தொகுதி EX எம்எல்ஏவான அவர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகினார். மத்தியில் ஆட்சியிலுள்ள பாஜக கூட்டணி அரசு, வக்ஃப் வாரிய சட்டம் மூலம் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுவதாக அவர் சாடியிருந்தார்.
CM ஸ்டாலின் தலைமையில் வரும் 16-ம் தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. TN அரசு வெளியிட்ட அறிவிப்பில், CM தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வேந்தராக CM இருப்பது குறித்த மசோதாவுக்கு SC ஒப்புதல் அளித்த நிலையில் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும்.
BSP கட்சித் தலைவர் மாயாவதியின் சகோதரர் மகள், ஆலீஸ். தன் மாமியார் ₹50 லட்சம், பிளாட் கேட்டு கொடுமைப் படுத்துவதாக ஆலீஸ், போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும், பாடி பில்டிங் செய்யும் தன் கணவன் விஷால், அடிக்கடி ஸ்டீராய்டு ஊசிப் போட்டுக் கொண்டதால் ஆண்மையை இழந்துள்ளதாகவும், இதனால் குழந்தை பெற மச்சினனுடன் உடலுறவு கொள்ள மாமியார் வீட்டார் வற்புறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழலை பாதுகாக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த, <<16071420>>மறைந்த ‘வனஜீவி’ ராமைய்யாவின்<<>> உடல் அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த இவர் 1 கோடி மரங்களை நட்டதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டார். பிரதமர் மோடியும் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியபின், அவர் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு மரம் நடப்பட்டது. RIP
தமிழ் சினிமா கடந்த 10 நாள்களில் மட்டும் 4 நடிகர்களை இழந்துள்ளது. கடந்த 4-ம் தேதி நடிகர் ரவிக்குமார் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். அவர் மறைந்து 2 நாள்களுக்குள் நடிகர் சஹானா ஸ்ரீதர் மறைந்தார். நேற்று நடிகர் பிரபாகரன் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், இன்று(ஏப்.13) பிரபல நடிகரும், இயக்குநருமான கலைப்புலி ஜி.சேகரன் காலமானார். நடிகர்களின் அடுத்தடுத்த மரணம் கோலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #RIP
டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள 6 புதிய <<16067320>>பீர் <<>>விலை விவரம் கசிந்துள்ளது. ஹைதராபாத் நிறுவனத் தயாரிப்பில் புதிய பீர்கள் விற்கப்படுகின்றன. இந்நிலையில், கர்நாடகா நிறுவனத்தின் மேலும் 5 புதிய பீர்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. அவை ரூ.182-ரூ.250 வரை விற்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே டாஸ்மாக்கில் ரூ.140- ரூ.210 விலையில் பீர்கள் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தினசரி 5 நிமிடங்கள் ஒதுக்கி இப்பழக்கங்களை கடைப்பிடியுங்கள்: *1 நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளியிடுங்கள் *கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள் *நாளை நன்றாகவே இருக்கும் என்று `ஆல் இஸ் வெல்’ சொல்லுங்கள் *கடந்தகால கசப்புகளை போக விடுங்கள், நாளை நமதே *நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.
முதலில் தனக்கு பிடித்த விளம்பரங்களில் நடித்ததாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார். இனி மக்களுக்கு உண்மையிலேயே பயனளிக்கும், டாக்டர்களால் உறுதிசெய்யப்படும் விளம்பரங்களில் மட்டுமே நடிப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டில் மட்டும் 15 நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.