India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராம்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம் என RMC கூறியுள்ளது.
*இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு பவுலில், 5 பாதாம், 5 உலர் திராட்சை, 5 பிஸ்தா, 3 பேரிச்சம் பழம், 3 உலர் அத்தி ஆகியவற்றை ஊற வைக்கவும்.
*காலை எழுந்த பிறகு, Dry Fruitsஐ ஊற வைத்த அதே நீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஜூஸாக்கவும்.
*இவ்வாறு ரெடி செய்த ஸ்மூத்தி பானத்தை நாள்தோறும் அருந்தினால் உடல் வலிமைபெறும். ஆரோக்கியத்தின் அதிபதியாகிவிடலாம்.
நடப்பாண்டில் MBBS கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் விவரங்களை NMC இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய நவ.23 வரை அவகாசம் வழங்கி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல, மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளை தொடங்கவும், ஏற்கெனவே இடங்களை அதிகரிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தையும் நவ.22 வரை நீட்டித்துள்ளதாக NMC தெரிவித்துள்ளது.
8ஆவது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடங்குகிறது. பிஹார் ராஜ்கிர் நகரில், நவ.20 வரை நடைபெறவுள்ள தொடரில் இந்தியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, மலேசியா, தாய்லாந்து அணிகள் பங்கேற்கின்றன. IND மகளிர் அணி இன்றைய முதல் போட்டியில் மலேசியாவை எதிர்கொள்கிறது. நாளை தென்கொரியா, நவ.16இல் சீனா, நவ.17இல் ஜப்பானை இந்திய அணி எதிர்கொள்கிறது.
ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதத்தை தூண்டும் செயலில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிடுவது கடந்த ஒரு மாதமாக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ள உளவுத்துறை, தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் பணி தீவிரமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சமீப நாள்களாக காஷ்மீரில் அதிகளவில் தீவிரவாத தாக்குதல்கள் அரங்கேறி வருகிறது.
பசியின்மையை போக்க – அகத்திக் கீரை
இரத்த சோகைக்கு தீர்வு தரும் – பசலை கீரை
மலச்சிக்கலை தீர்க்க – முளைக் கீரை
நீரிழிவு நோயை விரட்ட – வெந்தயக் கீரை
தோல் நோய்களை தீர்க்கும் – அரை கீரை
மூட்டு வலியை போக்கும் – முடக்கத்தான் கீரை
சிறுநீர் பிரச்னைக்கு – சிறு கீரை
குடல் புண்ணை ஆற்றும் – மணத்தக்காளி கீரை
மஞ்சள் காமாலைக்கு – கரிசலாங்கண்ணி கீரை
பார்வை கோளாறை நீக்கும் – பொன்னாங்கண்ணி
‘லக்கி பாஸ்கர்’ படம் 10 நாளில் ₹88.70 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளியன்று வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சாதாரண நபரான நாயகன், அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதைக்களத்தில் படம் உருவாக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. லக்கி பாஸ்கர் படம் எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பல நாடுகள் பயத்தில் இருந்தாலும், இந்தியாவுக்கு எந்த கவலையும் இல்லை என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். டிரம்புடன் தனிப்பட்ட முறையில் PM மோடி பரஸ்பர நட்புணர்வுடன் உள்ளதாக குறிப்பிட்ட அவர், பல்வேறு அதிபர், ஜனாதிபதிகளுடன் அவர் நேச உணர்வை கட்டி எழுப்புவதாக தெரிவித்தார். USA அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே.
*அரை டீ ஸ்பூன் ஓமத்தை, 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதித்து வைத்துக் குடித்தால் ஆஸ்துமா அண்டாது. செரிமானம் சீராகும்.
*வயிற்று வலி ஏற்பட்டால், 5 கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் சட்டென வயிறு வலி சரியாகும்.
*ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
ஷாருக்கானை முதன்முதலில் சந்தித்தபோது அவர் யாரென்றே எனக்கு தெரியாது என ஆஸி., வீரர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். அவருடனான சந்திப்பின்போது தனக்கு 18 அல்லது 19 வயது இருக்கும் என நினைவுகூர்ந்த அவர், IPL அணி உரிமையாளர்களில் ஷாருக்கான் சிறந்தவர் என புகழாரம் சூட்டினார். மேலும், KKR வீரர்களை சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் விளையாட அவர் எப்போதும் அறிவுறுத்துவார் எனவும் கம்மின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.