India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லெபனான் பேஜர் தாக்குதலுக்கு உத்தரவிட்டதை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார். லெபனான், சிரியாவில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான பேஜர்கள், வாக்கிடாக்கிகள் கடந்த செப்டம்பர் மாதம் வெடித்துச் சிதறின. இதில் 40 பேர் பலியாகினர். 3,000 பேர் காயமடைந்தனர். இஸ்ரேல் அரசு மீது லெபனான் குற்றம்சாட்டி வந்த நிலையில் இதனை பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார்.
அகலமான மண் சட்டியில் நல்லெண்ணெய் (50ml) ஊற்றி, கடுகு, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு (25g) விழுதையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதன் பிறகு விதை நீக்கிய வர மிளகாயை சேர்க்கவும். அதனுடன் நாட்டுக் கோழிக்கறி (1kg) சேர்த்து வதக்கி, மஞ்சள், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து, 1.5 ltr நீர் ஊற்றவும். 45 நிமிடங்கள் நன்கு வேக வைத்து கறிவேப்பிலை போட்டு இறக்கினால் சுவையான நல்லாம்பட்டி கோழி வறுவல் ரெடி.
நடிகர் சத்யராஜ் மனைவி மகேஸ்வரி 4 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சத்யராஜ் மகள் திவ்யா, அம்மாவுக்கு PEG குழாய் மூலம் தான் உணவு அளிக்கிறோம். இதனால், எங்கள் குடும்பம் முற்றிலும் உடைந்து போயிருக்கிறது. ஆனாலும், மிகுந்த நம்பிக்கையோடு மருத்துவ முன்னேற்றத்திற்காக காத்திருக்கிறோம். அப்பா 4 வருஷமாக single parent-ஆக இருக்கிறார் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸின் நீக்ரோஸ் ஆக்சிடென்டல் தீவில் 114 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள சேவல் வடிவிலான ஹோட்டல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதில், அதிநவீன வசதிகளுடன் 15 அறைகள் உள்ளன. 2023 ஜூன் 10ல் தொடங்கிய கட்டுமான பணிகள் கடந்த செப்.8இல் நிறைவடைந்து தற்போது திறக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் செல்லும் சுற்றுலா பயணிகளை சேவல் கட்டடம் பெரிதும் ஈர்த்துள்ளது. சேவல் ஹோட்டல் பற்றி உங்கள் கருத்து என்ன?
5,960 ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உடனே பணி ஆணை வழங்க ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர்கள் நியமனத்தில் நிதி நெருக்கடி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடாது என்று கூறிய அவர், 3,192 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பல மாதம் முன்பே நிறைவுபெற்றதையும் சுட்டிக்காட்டினார். மேலும், 2,768 இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய ஜுலை 21ல் போட்டித் தேர்வு நடந்ததாகவும் கூறினார்.
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இன்று உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நாளை உருவாக உள்ளது. இது மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் 15ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இன்று உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நாளை உருவாக உள்ளது. இது மேற்கு திசையில், தமிழ்நாடு, இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் 15ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு திருமா கடிதம் எழுதியுள்ளார். இலங்கையின் சப்ரகமுவ பல்கலை.,யில் இந்தியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு தங்கப் பதக்கமும் ₹25,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படுவதுபோல், தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, கடந்த சில நாள்களாக குறைந்து வருகிறது. அக்.31ம் தேதி வரலாற்று உச்சமாக ஒரு சவரன் ₹59,640க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து, நவ.1 முதல் படிப்படியாக தங்கம் விலை குறைந்து வருகிறது. அதன்படி, கடந்த 11 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,880 குறைந்துள்ளது. இதனால், வரும் நாள்களிலும் தங்கம் விலை குறையாதா என்ற எதிர்பார்ப்பு நடுத்தர மக்களிடையே எழுந்துள்ளது.
பென்னி ஸ்டாக்ஸ் (Penny Stocks) என்பது மிகவும் குறைந்த விலையில் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் நிறுவனங்களின் பங்குகளைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல்லாகும். இவற்றின் விலை பொதுவாக ஒரு பங்கிற்கு ₹10 அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே இருக்கும். இந்த குறைந்த விலைதான் முதலீட்டாளர்களை மிகவும் கவர்ந்திழுக்கிறது. ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என்ற எண்ணம் பலரின் மனதில் எழுகிறது.
Sorry, no posts matched your criteria.