news

News November 12, 2024

‘அமரன்’ படத்தை பள்ளி, கல்லூரிகளில் திரையிடுக: BJP

image

‘அமரன்’ படத்தை பள்ளி, கல்லூரிகளில் திரையிட வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஏ.என்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமரன்’ படம் எதிர்ப்பு என்ற பெயரில் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்க முயல்பவர்களை அரசு தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், தேச பக்தியை வலியுறுத்தும் இந்த படத்திற்கு, தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News November 12, 2024

நவம்பர் 12: வரலாற்றில் இன்று

image

1927 – மகாத்மா காந்தி, இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார்.
1970 – போலா சூறாவளி கிழக்கு பாகிஸ்தானை (இன்றைய வங்காளதேசம்) தாக்கியதில் 5 லட்சம் பேர் வரை இறந்தனர்.
1980 – நாசாவின் விண்கலன் வொயேஜர்-1, சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
நவம்பர் 12 – உலக நுரையீரல் அழற்சி நாள்.

News November 12, 2024

இலங்கை கடற்படைக்கு K.B. கண்டனம்

image

இலங்கை கடற்படை தொடர்ந்து அடாவடி செயல்களில் ஈடுபடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், தமிழக மீனவர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வு காணவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News November 12, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News November 12, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News November 12, 2024

‘அவதார் 3’ படத்தின் போஸ்டர் வெளியானது

image

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி உலக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய படம் ‘அவதார்’. இப்படத்தின் இரண்டாம் பாகம் 2022ல் வெளியான நிலையில், தற்போது அவதார் 3ஆம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் 2025 டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர் எப்படி இருக்கிறது.

News November 12, 2024

இடைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி

image

பீகாரில் இடைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய பிரசாந்த் கிஷோரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சத் பூஜை விழா காரணமாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என ஜன் சுராஜ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சத் பூஜை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இங்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது.

News November 12, 2024

கம்பீருக்கு இது தேவையில்லாத வேலை: மஞ்ச்ரேக்கர்

image

கம்பீரின் செய்தியாளர் சந்திப்பை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார். செய்தியாளர் சந்திப்புகளிலிருந்து கம்பீரை விலக்கி வைத்துவிட்டு, பயிற்சியளிப்பதில் அவரது கவனத்தைச் செலுத்த வைப்பதே பிசிசிஐ எடுக்கும் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரோஹித் & அகர்கர் கம்பீரை விட செய்தியாளர் சந்திப்பை சிறப்பாக மேற்கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News November 12, 2024

உங்கள் கனவில் பணத்தை பார்க்குறீங்களா…

image

ஆழ்ந்த தூக்கத்தில் ஒரு மனிதன் காணும் கனவிற்கு சில அர்த்தங்கள் உண்டு என்கிறார்கள். அப்படி நாம் கனவில் அடிக்கடி பணத்தையோ அல்லது பணம் சம்மந்தப்பட்ட விஷயங்களான ரூபாய் நோட்டு – நாணயம், தங்கம் – வெள்ளி போன்றவற்றை கண்டால், அது அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறதாம். அதிர்ஷ்டம் தேடி வருமாம். வாழ்க்கையில் செல்வ நிலை – செல்வாக்கு அதிகரித்து, அந்தஸ்து கூடும் என்பதையும் குறிக்கும். உங்களுக்கு என்ன கனவு வருகிறது?

News November 12, 2024

JOB ALERTS: இந்திய ராணுவத்தில் வேலை

image

இந்திய ராணுவ பிராந்திய படைப்பிரிவில் (TERRITORIAL ARMY) காலியாக உள்ள 1,185 பணியிடங்களுக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. சோல்ஜர்ஸ், கிளார்க், சமையல் கலைஞர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. வேலைக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு 40 வயதாகும். கல்வித் தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவலை இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!