India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு உதவி பெறும் கல்லூரியான சென்னை மீனாட்சி கல்லூரி வளாகத்தில் நடைபெறும் ஆன்மிக நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றால், தேர்வு முடிவுகளை வெளியிட மாட்டோம் என ஆசிரியை ஒருவர் மாணவிகளுக்கு மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளிவந்துள்ளது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவிக்க, மாணவிகள் அதிக அளவில் வராமல் போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில் பேசியதாக கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆசிரியையின் பேச்சு சரியா?
UNION BANK-இல் காலியாக இருக்கும் 1,500 லோக்கல் பேங்க் ஆபிசர் நிலையிலான பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கு unionbankofindia.co.in இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான கால அவகாசம் நாளையுடன் ( நவ.13) முடிவடைகிறது. ஆதலால் வேலைக்கு சேர விரும்புவோர் உடனே அந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். SHARE IT.
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரோடு விராட் கோலி ஓய்வு பெறுவார் என ஆஸி., ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் 25 இன்னிங்ஸில் (19 மேட்ச்) விளையாடிய அவர், மொத்தமாகவே 488 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கோலி இடத்தை ஜெய்ஸ்வால் நிரப்புவார் எனவும், கடந்த 18 மாதங்களாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக ராமதாஸ் குறை கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கைது செய்யப்படும் போது, மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் மட்டுமே எழுதுவதாக விமர்சித்துள்ள அவர், கடிதம் எழுதுவதோடு மாநில அரசின் கடமை முடிந்துவிட்டதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக மீனவர்களுக்கு விடிவுகாலம் எப்போது வரும் எனவும் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்.
SKவின் ‘அமரன்’ திரைப்படத்தால் சூர்யாவின் ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமரன் 3வது வாரமாக வெற்றிகரமாக ஓடி வருவதால் கங்குவாவிற்கு திரை குறைவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 1,100 திரைகளில், கங்குவா 700 திரைகளில் மட்டுமே வெளியாக உள்ளது. லாபம் அதிகம் என்பதால் அமரனுக்கே திரைகளை ஒதுக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார். திமுகவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இபிஎஸ் கூறுவதாகக் குறிப்பிட்ட அவர், பாஜகவும் அதே மனநிலையில் தான் உள்ளது எனவும், பகைமையை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று 11 மணிக்கு <<14589513>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) திருவாரூர் ஆழித்தேர் 2) Potential of Hydrogen 3) மரபியல் 4) சரளா தாக்ரல் 5) டேகோ மீட்டர் 6) சர்க்கரை பாதாமி 7) ஜெல்லி மீன் 8) காப்சைஸின். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களைப் பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கீழே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
நெல்லையில் அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் சினிமா திரையிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் கோட் படத்திற்கு ₹25ம், ரஜினியின் வேட்டையன் திரைப்படத்திற்கு ₹10ம் மாணவிகளிடம் பள்ளி நிர்வாகம் வசூல் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் நடத்திய விசாரணையில், மாணவிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சினிமா திரையிடப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் கூந்தலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பொடுகு பிரச்னைக்கு வேப்பிலை ஹேர் பேக் தீர்வளிக்கும் என சருமநல மருத்துவர்கள் கூறுகின்றனர். வேப்பிலை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, நீர் சேர்த்து அரைக்கவும். அதை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவைத்து, பின் வெந்நீரில் அலச வேண்டும். அதன் கசப்புத்தன்மை, தலையில் உள்ள பூஞ்சை, பாக்டீரியா தொற்றுகளைப் போக்கும் என பரிந்துரைக்கின்றனர்.
நடிகை ஹன்சிகா மோத்வானி மஞ்சள், சிவப்பு கலர் தாவணியில் எடுத்த போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் விஜய், சிம்பு, சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்துப் பிரபலமான ஹன்சிகா, கடந்த டிசம்பரில் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவை திருமணம் செய்துகொண்டார். சில காலம் சினிமாவுக்கு லீவு விட்டிருந்த அவர் தற்போது பாரம்பரிய உடையான தாவணியில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.