India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ராதிகா ஆகியோர் நடிப்பில் 1982-ம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த திரைப்படம் ‘போக்கிரி ராஜா’. இந்தப் படத்தின் SHOOTING SPOT புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, எதிர்பார்க்காத ஒரு நபர் நம் கண்ணில் பட்டார். முதலில் அடையாளம் தெரியவில்லை என்றாலும், பின்னர் உற்றுப்பார்த்த போது நன்றாக தெரிந்தது. நீங்களும் TRY செய்யுங்கள். க்ளூ: பிரபல அரசியல் கட்சியின் தலைவர் அவர்.
போஸ்ட் ஆஃபிஸின் RD திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். தினமும் ₹100 என மாதம் ₹3,000 வீதம், 5 ஆண்டுகளுக்கு ₹1.80 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் தற்போது 6.7% வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், ₹34,097 வட்டியுடன், முதிர்வு காலத்தில் ₹2.14 லட்சம் கிடைக்கும். மேலும், 12 தவணைகளை செலுத்திய பிறகு 50% வரை கடனாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
இந்திய வீரர் SKY T20 போட்டிகளில் சிறப்பாக ஆடிவருவதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிளாசன் கூறியுள்ளார். அவர் அடிக்கும் ஷாட்கள் தனித்துவமாக உள்ளதாகக் கூறிய அவர், ஃபைன் லெக்கில் அவர் அடிக்கும் ஷாட்டை நான் கடனாக வாங்க விரும்புகிறேன் என்றார். T20 போட்டிகளில் பலர் சிறப்பாக ஆடிவந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் முதல் இரட்டை சதம் அடிக்கும் வீரராக இருப்பார் என்றும் குறிப்பிட்டார்.
இன்றிரவு 10 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறையில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
திமுக அரசை மீண்டும் விமர்சித்துள்ளார் ஆளுநர் ரவி. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழக பல்கலைக்கழகங்களில் திராவிடம் சார்ந்த பாடங்களே அதிக அளவில் உள்ளதாக தெரிவித்தார். மேலும், சுதந்திர போராட்ட வரலாறு தொடர்பான பாடங்கள் குறைவாகவே உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். ஒருமுறை தமிழகத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியலை கேட்ட போது, 30 பெயர்களை மட்டும் தமிழக அரசு அனுப்பியதாகவும் அவர் கூறினார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யும் நிலையில், பொது மக்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழை பெய்கையில், மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம் என வலியுறுத்தி உள்ளது. உடனடி உதவிக்கு 94987 94987 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
தான் Decent Politician இல்லை, Deep Politician என சீமான் தெரிவித்துள்ளார். தாங்கள் Underground-ல் வேலை செய்து வருவதாகவும், வேறு எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார். மேலும், 8 கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி நாம் தமிழர்தான் எனவும், உலகளவில் ரசிகர்களை வைத்துள்ள விஜய், தன் கட்சிக்கு உலக வெற்றிக் கழகம் எனப் பெயர் வைக்காதது ஏன் என்றும் வினவியுள்ளார்.
அரசு பொறியியல், பாலிடெக்னிக் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வுக்கு வரும்18ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் தாெழில்நுட்ப கல்வி ஆணையர் டி. ஆபிரகாம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர், பணியிட மாறுதல் விரும்பினால் www.dte.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.
Escalator என்பதும், Elevator என்பதும் அடிப்படையில் இயந்திரத்தையே குறிக்கின்றன. ஆனால், இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. Elevator என்பதை நாம் பொதுவாக லிஃப்ட் என்று குறிப்பிடுகிறோம். தமிழில் அதை மின்தூக்கி எனலாம். Escalator என்பது நகரும் படிக்கட்டுகளைக் கொண்டது. படிகள் சென்சாரில் தொடர்ந்து ஏறிக்கொண்டோ, இறங்கிக்கொண்டோ இருக்கும். Escalator என்பதை நகரும் படி எனலாம். இரண்டையும் நாம் பயன்படுத்த முடியும்.
சென்னை கோவளம் அருகே ECR சாலையில் ரூ.100 கோடியில் நந்தவனம் பாரம்பரிய பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தங்கும் விடுதிகள், படகு சவாரி, ஓப்பன் தியேட்டர் மற்றும் வாலிபால், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டு அரங்கங்களும் அமைக்கப்படவுள்ளன. இந்த பார்க் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமானப் பணிகளை சுற்றுலாத்துறை அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.
Sorry, no posts matched your criteria.