news

News November 12, 2024

புற்றுநோய்க்கு வழிவகுக்கும் உப்பு.. டாக்டர்கள் எச்சரிக்கை

image

உப்பை அதிகம் உணவில் சேர்ப்பது பல்வேறு உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும், வயிறு புற்றுநோய்க்கு வழிவகுக்கும், இதய நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்னையை ஏற்படுத்தும் என்பது ஆய்வில் தெரிய வந்திருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே உப்பை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News November 12, 2024

அனைத்து பள்ளிகளுக்கும் CM ஸ்டாலின் உத்தரவு!

image

பள்ளி மாணவ – மாணவிகளை பாலியல் ரீதியான தொந்தரவுகளில் இருந்து காப்பதற்காக, பல முக்கிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி, மாணவ-மாணவிகளை ஆசிரியர்களை வெளியே அழைத்து செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாணவ-மாணவிகள் பாலியல் புகார்களை தெரிவிக்க 14417, 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. Share It.

News November 12, 2024

10 ஆண்டுகளே சினிமாவில் நடிப்பேன்.. அமீர்கான் பேட்டி

image

இன்னும் 10 ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் நடிப்பேன் என்று பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அவர், லால் சிங் சத்தா படத்துக்கு முன்பே ஓய்வு பெற விரும்பியதாகவும், ஆனால் குழந்தைகள் ஓய்வு பெற வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் நடிப்பதாகவும் கூறினார். அடுத்த 10 ஆண்டுகளும் சிறந்த இயக்குநர்கள், எழுத்தாளர்களுடன் பயணிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News November 12, 2024

மரங்கள் எப்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றன?

image

மரங்கள் ஒளிச்சேர்க்கை எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் கார்பன் டை ஆக்சைடை (CO2) உணவாக மாற்றுகின்றன. இந்த செயல்முறையில், மரங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி, காற்றில் உள்ள CO2 உடன் நீரை இணைத்து, குளுக்கோஸ் & ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றன. குளுக்கோஸ் மரத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மரங்கள் வளிமண்டலத்தில் உள்ள CO2 அளவை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றன.

News November 12, 2024

‘வா வாத்தியாரே’ டீசர் நாளை வெளியீடு

image

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியாரே’ படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 12, 2024

‘மதம் என்பது மனிதர்கள் உருவாக்கியது’

image

உலகில் நிம்மதியாக வாழ சிறந்த நாடு இந்தியா என ’12த் பெயில்’ புகழ் விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்தார். ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ ப்ரோமோஷனில் அவர், ‘இந்தியாவில் முஸ்லிம், இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக பலர் சொல்கின்றனர். ஆனால், யாரும் ஆபத்தில் இல்லை. என் சகோதரர் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியபோது எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மதம் என்பது மனிதர்கள் உருவாக்கியது’ என்றார்.

News November 12, 2024

அரசுப் பஸ்களில் பயணித்தால் பைக், டிவி பரிசு!

image

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து பயணிப்போருக்குக் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.21 முதல் ஜன.20 வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிப்போருக்குச் சிறப்பு குலுக்கல் முறையில் முதல் பரிசாக இருசக்கர வாகனம், 2-ஆம் பரிசாக ஸ்மார்ட் டிவி, 3-ஆம் பரிசாக ஃப்ரிட்ஜ் வழங்கப்படும் என TNSTC அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News November 12, 2024

நீலிக் கண்ணீர் இபிஎஸ்: தங்கம் தென்னரசு

image

அரசு ஊழியர்களின் நலன் பற்றி பேச EPS-க்கு எந்த தகுதியும் இல்லை என தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். அரசு ஊழியர்களை பலமுறை ஒடுக்கிய அதிமுக, அரசு ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதை போல் அறிக்கை வெளியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார். அரசு ஊழியர்களின் மீதான வெறுப்பு அதிமுகவின் இரத்தத்தில் ஊறிப்போனது என்ற அவர், இபிஎஸ் வடிக்கும் முதலை கண்ணீரை பார்த்தால், முதலையே தோற்றுவிடும் என்றார்.

News November 12, 2024

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா வெற்றி

image

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் தென் கொரியா அணியை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
பிஹாரில் நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென்கொரியா, சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடைபெற்ற போட்டியில் மலேசிய அணியை இந்தியா வீழ்த்திய நிலையில், இன்று மேலும் ஒரு வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது.

News November 12, 2024

மோடி விரைவில் வெளிநாடு பயணம்

image

PM மோடி வருகிற 16 முதல் 21ஆம் தேதி வரை 3 நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ளவுள்ளார். முதல்கட்டமாக நைஜீரியாவில் 16ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பயணம் செய்கிறார். இதையடுத்து பிரேசில் செல்லும் அவர், அங்கு 17, 18ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். அங்கு அவர், ஜி20 தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார். பின்னர் கயானாவில் 19- 21 தேதி வரை மோடி பயணம் மேற்கொள்கிறார்.

error: Content is protected !!