India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ecom மற்றும் qcomஇல் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கான காலாவதி காலக்கெடுவை FSSAI அறிவித்துள்ளது. அதன்படி, உணவுப் பொருட்கள் காலாவதியாக குறைந்தபட்சம் 30% அல்லது 45 நாட்கள் இருக்க வேண்டுமென FSSAI உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘புஷ்பா’ படத்தில் சமந்தாவை விட ஸ்ரீலீலா குறைந்த சம்பளம் வாங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா மாமா…” என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடி இருந்தார். ட்ரெண்டான இப்பாடலில் நடனமாட அவர் ₹5 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். இந்நிலையில், ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெறும் பாடலுக்கு ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். இதற்காக அவருக்கு ₹2 கோடி மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டதாம்.
தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல், கரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
➤16ஆவது மகளிர் சீனியர் T20 தொடரில் பெங்கால் அணியை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை வென்றது. ➤புரோ கபடி: 49ஆவது லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியை 32-39 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் PP அணி வீழ்த்தியது. ➤இத்தாலி ATP டென்னிஸ்: முதல் போட்டியில் இந்தியாவின் போபண்ணா – ஆஸி. எப்டன் ஜோடி தோல்வியடைந்தது. ➤ 6வது டாட்டா ஸ்டீல் பிளிட்ஸ் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கொல்கத்தாவில் இன்று தொடங்குகிறது.
தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால், சென்னை வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து உ.பி.க்கு இரும்பு லோடுடன் சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. ராமகுண்டம் – ராகவபுரம் இடையே சென்றபோது, சரக்கு ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டன. இதனால், வடமாநிலங்களில் இருந்து சென்னை வரும் விரைவு ரயில்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் செலவு குறைவால் தமிழகத்தில் CNG வாகனங்களின் எண்ணிக்கை 1.17 லட்சமாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசை தடுக்கவும், பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்துமாறு மத்திய அரசு அனைத்து தரப்பினரையும் அறிவுறுத்தி வருகிறது. இதனால், 25-30% எரிபொருள் செலவும் குறைவதால் CNG வாகனங்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் தற்போதுவரை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
LSGயில் இருந்து விடுவிக்கப்பட்ட ராகுல் எந்த அணிக்கு செல்வார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தான் யாரிடமும் சென்று கேப்டன் பதவி கேட்க மாட்டேன். தனது தலைமைத்துவ திறமையை நம்பி அணியை ஒப்படைத்தால், அதை மகிழ்ச்சியுடன் செய்வேன் எனக் கூறியுள்ளார். மேலும், CSK , GT-இன் டிரஸ்ஸிங் ரூம், வென்றாலும், தோற்றாலும் அமைதியாக இருக்கும் என மறைமுகமாக தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
‘கங்குவா’ படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிய நிலையில், இருக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகும் இப்படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சி வெளியிடவும் அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில், பெரும்பாலான திரையரங்குகள் முதல் நாளில் ஹவுஸ்புல்லாகி உள்ளன.
கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் தற்போது வரை 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கும் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.