news

News November 13, 2024

நெல்சனின் நல்ல மனசு..!

image

‘பிளடி பெக்கர்’ படத்தால் விநியோகஸ்தருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அப்படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் திரும்ப அளிப்பதாக உறுதி அளித்துள்ளார். ₹11 கோடிக்கு படத்தை வாங்கி வெளியிட்டவருக்கு, ₹7 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. நஷ்ட தொகையை திரும்ப கொடுக்க தேவையில்லை என்ற முறையிலேயே வியாபாரம் நடந்தாலும், ₹5 கோடியை கொடுக்க நெல்சன் முன் வந்துள்ளார். இருப்பினும் டிஜிட்டல் உள்ளிட்ட இதர உரிமைகளில் அவர் லாபம் பார்த்துள்ளார்.

News November 13, 2024

அடியோடு சீர்குலைந்த சுகாதாரத்துறை: TTV

image

சென்னையில் அரசு டாக்டருக்கு கத்திக்குத்து, கோத்தகிரியில் டார்ச்லைட் வெளிச்சத்தில் சிகிச்சை என சீர்குலைந்திருக்கும் சுகாதாரத்துறையை சீரமைப்பது எப்போது? என டிடிவி தினகரன் வினவியுள்ளார். தாக்குதல் சம்பவம், சட்டம் ஒழுங்கு சீரழிந்திருப்பதையே காட்டுவதாகவும் அவர் சாடியுள்ளார். எனவே, ஹாஸ்பிடல்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு, டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

News November 13, 2024

DANGER: கூகுளில் தேடக்கூடாத ஒரே வார்த்தை!

image

GOOGLE யூஸர்களுக்கு சைபர் செக்யூரிட்டி நிறுவனமான SOPHOS பகீர் வார்னிங்கை விடுத்துள்ளது. அதாவது, கூகுளில் “Are Bengal Cats legal in Australia?” என்ற வாக்கியத்தை தவறியும் டைப் செய்யக் கூடாதாம். இப்படி டைப் செய்து வரும் முதல் லிங்க்-ஐ தொட்டாலே ஹேக்கர்கள் நம் செல்போன், லேப்டாப்பை ஹேக் செய்து, வங்கி விவரங்கள், பாஸ்வேர்டுகளை எடுத்து பணத்தை திருடி விடுவார்கள் என SOPHOS எச்சரித்துள்ளது. Share It.

News November 13, 2024

Wow: 75 வீடுகள் கொண்ட உ.பி. கிராமத்தில் 51 IAS, IPS

image

உ.பியில் 75 வீடுகளே உள்ள கிராமத்தில் 51 IPS, IAS அதிகாரிகள் உருவாகியுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? மதோபட்டி கிராமத்தில் எந்த பயிற்சி மையங்களும் இல்லை என்பது கூடுதல் சுவாரஸ்யம். சுதந்திர போராட்ட வீரர் தாக்கூர் பகவதி தின் சிங், அவரது மனைவி ஷியாம்ரதி சிங் இருவரும் 1917ஆம் ஆண்டில் கிராம குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கத் தொடங்கினர். அன்று போட்ட விதை, இன்று விருட்சமாகியுள்ளது.

News November 13, 2024

டெல்லியில் டிச.6,7இல் ஆர்ப்பாட்டம்: புதிய தமிழகம்

image

டெல்லியில் டிச.6,7ஆம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் அருந்ததியினருக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கியதால் தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர்களுக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.

News November 13, 2024

சிக்ஸரில் சாதனை படைத்த இந்திய அணி!

image

2024-ல் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. மேற்கிந்திய தீவு அணியுடனும் முதல் இடத்தை பகிர்ந்துள்ளது. மேலும் இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இந்திய அணியில் மொத்தம் 32 வீரர்கள் குறைந்தது ஒரு சிக்ஸராவது அடித்துள்ளனர். ஹாங்காங் (172), நேபாளம் (158), ஆஸ்திரேலியா (157) ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.

News November 13, 2024

உஷார்: இதை செய்தால் பணம் போய் விடும்

image

செல்போன் பயனாளர்களுக்கு கஸ்டமர் கேரில் இருந்து பேசுவதாக வரும் போலி அழைப்புகளில் பேசும் நபர்கள், நூதன முறையில் வங்கிப் பணத்தை திருடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி கஸ்டமர் கேர் ஊழியர்கள், தாங்கள் அனுப்பும் பைலில் இருக்கும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறி, பிறகு ஓடிபி உள்ளிட்டவற்றை அறிந்து திருடுவதாக கூறப்படுகிறது. எனவே உஷாராக இருந்தால் நமது பணம் திருடு போகாமல் காக்கலாம். SHARE IT

News November 13, 2024

விஜய் என் சகோதரன்: சீமான்

image

விஜய் தன் சகோதரன். அன்பு, பாசத்தில் துளி அளவும் குறையவில்லை என சீமான் கூறியுள்ளார். கட்சிக் கொள்கை, கோட்பாடுகளில் தான் நிறைய முரண்பாடு வருவதாகவும், இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுகவை தான் எதிர்க்கவில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, விஜய்யை சீமான் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அவரது இன்றைய பேட்டி, விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

News November 13, 2024

டாக்டர்கள் போராட்டம் வாபஸ்: அமைச்சர் பேட்டி

image

கிண்டி அரசு ஹாஸ்பிட்டலில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து மருத்துவ சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்திருந்தன. இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவ சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அமைச்சர் அறிவித்தார்.

News November 13, 2024

BREAKING: டாக்டர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு!

image

கிண்டி அரசு ஹாஸ்பிட்டலில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அகில இந்திய மருத்துவ சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. ICUவில் மட்டும் டாக்டர்கள் பணிபுரிவர்.

error: Content is protected !!