news

News November 14, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶நவ.14 (ஐப்பசி 28) ▶வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 – 01:15 PM, 06:30 – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 – 07:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: 08:07 AM வரை திரியோதசி பின்பு சதுர்த்தசி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶நட்சத்திரம்: 01:51 AM வரை ரேவதி பின்பு அஸ்வினி ▶சந்திராஷ்டமம்: 01:51 AM வரை பூரம் பின்பு உத்திரம்.

News November 14, 2024

வெளுத்து வாங்கும் கனமழை

image

சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்து வருகிறது. இதனால், கடந்த 3 நாள்களாகவே பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கிறது. குறிப்பாக இரவு நேரத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க மாவட்டத்தில் மழையா? கமெண்ட்ல சொல்லுங்க.

News November 14, 2024

நவம்பர் 14: வரலாற்றில் இன்று

image

1889 – இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்.
1922 – BBC தனது வானொலி சேவையை ஐக்கிய இராஜ்ஜியத்தில் தொடங்கியது.
1996 – டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1957 – தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர் R.பார்த்திபன் பிறந்தநாள்
2015 – தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் K.S.கோபாலகிருஷ்ணன் நினைவு நாள்.
நவம்பர் 14: தேசிய குழந்தைகள் தினம், உலக சர்க்கரை நோய் தினம்.

News November 14, 2024

இந்திய அணி த்ரில் வெற்றி

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது T20 போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. செஞ்சூரியனில் நடைபெற்ற போட்டியில், முதலில் விளையாடிய IND, 219/6 ரன்கள் குவித்தது. திலக் வர்மா சதம் விளாசினார். 220 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய SA, 20 ஓவர்களில் 208/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 3, வருண் 2 விக்கெட் வீழ்த்தினர். கடைசி போட்டி நாளை நடைபெறவுள்ளது.

News November 14, 2024

டாக்டரை தாக்கியது தனிப்பட்ட விஷயம் அல்ல: வானதி

image

சென்னையில் டாக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை, தனிப்பட்ட சம்பவமாக கருதக்கூடாது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இந்த சம்பவம் உதாரணம் என சுட்டிக்காட்டிய அவர், அரசு மருத்துவமனைகளின் நிலை இவ்வாறு தான் இருக்கிறது என்றார். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என டாக்டர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார்.

News November 14, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News November 14, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News November 14, 2024

புரோ கபடி லீக்: குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி

image

புரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே குஜராத் அணியினர் ஆதிக்கம் செலுத்திய நிலையில், 47-28 என்ற புள்ளிக்கணக்கில் அந்த அணி வெற்றி பெற்றது. இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் – அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. 12 அணிகள் மோதும் இந்த தொடரில் புனே அணி முதலிடத்தில் இருந்து வருகிறது.

News November 14, 2024

தமிழ்நாடு அணி சிறப்பான ஆட்டம்

image

ரஞ்சி கோப்பையில் ரயில்வேஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி சிறப்பாக ஆடியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ரயில்வேஸ் அணி தமிழக அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய அஜித் ராம் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய தமிழக அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.

News November 14, 2024

டாக்டர் மீது தாக்குதல்: கோர்ட் முக்கிய ஆர்டர்!

image

கிண்டி அரசு ஹாஸ்பிட்டலில் டாக்டரை கத்தியால் தாக்கிய விக்னேஷை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது தாயாருக்கு முறையாக சிகிச்சை அளிக்காத ஆத்திரத்தில், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் அளித்திருந்தார். இந்தத் தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ஒருநாள் ஸ்டிரைக் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!