India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டீசல் விலையைக் குறைக்க வேண்டும், சுங்கச்சாவடி, செக்-போஸ்ட்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கர்நாடகாவில் இரவு முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழக லாரிகள் கர்நாடகாவிற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்டிரைக் காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்தேன்; பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தோற்றேன் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியிருந்தார். ஆனால், அவர் பேசிய அடுத்த வாரமே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. கூட்டணி அறிவிப்புக்கு பின் அவர் மவுனமாக இருந்த ஜெயகுமார் வெளியிட்ட தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இபிஎஸ் புகைப்படத்தை தவிர்த்துள்ளார். இது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
* 1891 – சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த தினம்
* 1907 – எம். ஆர். ராதா பிறந்த தினம்
* 1950 – தமிழக ஆன்மீகவாதி ரமண மகரிஷி மறைந்தார்
* நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதல் பதிவுக்கான காப்புரிமையை பெற்றார் (1828)
* உலக சித்தர்கள் நாள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் SK நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மதராஸி’. பக்கா ஆக்ஷன் கமர்ஷியலாக உருவாகி வரும் இப்படத்தில் முக்கியமான சமூக பிரச்னையை முருகதாஸ் பேசியிருக்கிறார். மேலும், இப்படத்தினை செப்.5-ம் தேதி வெளியிடும் வகையில் பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இசை மற்றும் வெளிநாட்டு உரிமை விற்பனையான நிலையில் ஓடிடி உரிமையினை விற்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
CSK தொடர் தோல்வியை சந்தித்ததால், அதிருப்தியடைந்த ரசிகர்கள், தோனியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், CSK பயிற்சியாளர் பிளெமிங், தோனி கேப்டனாக இருப்பது நிச்சயம் எங்களுக்கு சாதகமான விஷயம் தான். ஆனால், அவரிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை. அவர் ஏதோ கையை வைத்தவுடன் அணி அப்படியே மாறிவிடும் என நினைக்கக்கூடாது. நாங்கள் தோனியுடன் இணைந்து சரியான திசையில் பயணிப்போம் எனத் தெரிவித்தார்.
பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய உடனே அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில், அங்கிருந்து 3 நாள் ஆன்மிக பயணமாக உத்தரகாண்ட் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட புனித தலங்களில் அண்ணாமலை வழிபாடு செய்ய இருப்பதாகவும், பின்னர் அங்கிருந்து இமயமலை சென்று தியானத்தில் ஈடுபட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
▶வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள் ▶ சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன ▶சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை ▶ஒரு முறை வந்தால் அது கனவு, இரு முறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அது இலட்சியம் ▶துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை ▶ வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெற சிறந்த வழி.
லக்னோ அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் LSG அணியை CSK இன்று எதிர்கொள்கிறது. பீல்டிங், பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருவதால் தொடர்ந்து 5 போட்டிகளில் CSK தோல்வியடைந்தது. இன்றை போட்டி மிக முக்கியமானது என்பதால், CSK தனது தவறை சரி செய்துக்கொண்டு இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டும். இல்லையென்றால் தகுதிச் சுற்றுக்கு செல்ல அடுத்த வரும் அனைத்து போட்டியிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 306 ▶குறள்: சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும், ஏமப் புணையைச் சுடும். ▶பொருள்: சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.
இன்று அனைத்து மாவட்டக் கழக அலுவலகங்களிலும் “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்று அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என திமுக உத்தரவிட்டுள்ளது. சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க, நாம் அனைவரும் பாடுபடுவோம். சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் எனவும் உறுமொழி எடுக்க அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.