India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்வீடன் நாட்டின் அமைச்சர் பவுலினா பிராண்ட்பெர்க் தான் இருக்கும் இடங்களில் வாழைப்பழம் இருக்கக் கூடாது எனக் கட்டுப்பாடு விதித்துள்ளார். இவர் வித்தியாசமானவர். BananaPhobia என்ற இந்த பயம் வாழைப்பழத்தின் வாசனையோ, அதன் தோற்றமோ இவருக்கு Anxiety, குமட்டல் போன்ற பாதிப்புகளை கொடுக்குமாம். இந்த Phobia விசித்திரமானது என்றாலும், வல்லுநர்கள் இது குழந்தை பருவத்திலேயே உருவாகி இருக்கலாம் என்கிறார்கள்.
Work Life Balance என்பதில் தனக்கு துளியும் நம்பிக்கை இல்லையென இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். வாரத்தில் 6 நாட்களாக இருந்த பணி நாள் 5 நாட்களாகக் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், PM மோடியை பின்பற்றி வாரத்திற்கு 100 மணி நேரம் பணியாற்றி அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா-2 தி ரூல் படத்தில் நடிக்க அவருக்கு ரூ.300 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அவர் நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவரது சம்பளம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்னைகளை டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என சிலர் கடந்த காலத்தில் கூறினர். ஆனால் நான் பிரச்னைகளை எதிர்கொண்டு, தீர்த்து வைக்கிறேன் என EPSக்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது எனக்கூற முடியுமா? என கேள்வி எழுப்பிய அவர், மக்கள் எனக்கு அளிக்கும் ஆதரவைக் கண்டு ஊழல் ஆட்சி நடத்திய EPSக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சாடினார்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிசிச்சை பெறும் மக்கள் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற அவர், மருத்துவர் பணியிடத்தை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று 10 மணிக்கு <<14615718>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) டோன்லே சாப் ஏரி – கம்போடியா 2) Before the Common Era 3) குரோனா மீட்டர் 4) 1978 5) உத்திரமேரூர் கல்வெட்டு 6) மல்பரி 7) Ara macao (Scarlet Macaw). இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களைப் பெற Way2Newsஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் பூஜை நேரம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள புதிய ‘செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் பெயர் ‘SWAMI AI CHAT BOT’ ஆகும். இந்த செயலியை கேரள அரசு AI செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் உருவாக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
திமுக அரசுக்கு எதிராக பொய் மூட்டைகளை இபிஎஸ் அவிழ்த்து விடுகிறார்; பொய்க்கு மேக் அப் போட்டால் அது உண்மையாகாது என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக திட்டங்கள், திமுக திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக மேடைக்கே வருகிறேன் என இபிஎஸ் சவால் விடுத்திருந்த நிலையில், “திட்டங்களை செயல்படுத்துவதால், நான் எங்கு சென்றாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்” என்று ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
BGT தொடருக்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், கே.எல்.ராகுல் Practice ஆட்டத்தின் போது, காயத்தில் சிக்கியுள்ளார். இந்திய அணியின் இன்றைய பயிற்சி ஆட்டத்தின் போது அவரது வலது முழங்கையில் பந்து தாக்கியதில் காயம் ஏற்பட்டது. முதல் டெஸ்டில் ரோஹித்திற்கு பதிலாக ராகுல் களமிறங்குவார் என்றே கருதப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.