India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊர்க்காவல் படை வீரர்கள் உயிரிழந்தால் அளிக்கப்படும் இழப்பீடு தொகையை அதிகரித்து TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பணியின்போது உயிரிழக்கும் ஊர்க்காவல் படை வீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை ரூ.15,000இல் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தோருக்கான தொகை ரூ.10,000இல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. SHARE IT
முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை கௌதமி, 2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தமிழ் சீரியல்களிலும் நடித்தார். தற்போது மீண்டும் சீரியல் ஒன்றில் அவர் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஜி தமிழில் ஒளிபரப்பாகும் “நெஞ்சத்தை கிள்ளாதே” தொடரில் கெளதமி நடித்து வருவதாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடன் பேச வேண்டும் என ADMK Ex அமைச்சர் CV.சண்முகத்துக்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது. தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தொடர்ந்த வழக்கில், ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் கடமைதான் எனவும் ஐகோர்ட் தெரிவித்தது. மேலும், இந்த வழக்கை, பிற மனுக்களுடன் சேர்த்து நவ.22ல் விசாரிப்பதாகவும் கூறி ஒத்திவைத்தது.
இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, புதுக்காேட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
உலகில் அதிகமாக பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளில் ‘123456’ என்பது முதலிடத்தில் இருப்பதாக NORDPASS ஆய்வில் தெரியவந்துள்ளது. 44 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு நொடிக்குள் பலரின் பாஸ்வேர்டை CRACK செய்ய முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் PASSWORD என்ற வார்த்தையை 30,18,050 பேர் பாஸ்வேர்ட்டாக வைத்துள்ளனர். படு வீக்கான இத்தகைய பாஸ்வேர்டுகளை நீங்கள் வைத்திருந்தால் முதலில் அதனை மாற்றுங்கள்!
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கடந்த 24ஆம் தேதி முதல் புதிய சான்றிதழ் முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, “U”, “UA 7+”, “UA 13+”, “UA 16+” “A” என சான்றிதழ்கள் அளிக்கிறது. U எனில் அனைத்து வயதினரும் பார்க்கும் படமாகும். UA 7+ எனில் 7 வயதிற்கு மேற்பட்டவர்கள், UA 13+ எனில் 13 வயதுக்கு மேற்பட்டவர்கள், UA 16+ எனில் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள், A எனில் வயது வந்தோர் பார்க்கும் படம் என அர்த்தமாகும்.
கணினி நெட்வொர்க் மூலம் வேலை செய்ய வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் நாணயத்தை கிரிப்டோகரன்சி என அழைக்கின்றனர். பிட்காயின், எத்தரியம் உட்பட 4,000 வகையான Virtual Coins சந்தையில் இருக்கின்றன. இதனை டிஜிட்டல் பரிவர்த்தனைகளின்போது, பயன்படுத்த முடியும். பிற நாணயங்கள் போல Cryptocurrency-ஐ எந்த சர்வதேச அமைப்போ, அரசோ, வங்கியோ கட்டுப்படுத்துவதில்லை. இவற்றில் முதலீடு செய்வது அதிக அபாயம் உள்ளதாகக் கருதப்படுகிறது.
ஐ.நாவுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத்தை, தொழிலதிபர் எலான் மஸ்க் சந்தித்ததாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திங்களன்று நியூயார்க்கில் ரகசிய இடத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகள் இடையே பதற்றத்தை தணிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டத்தை விரும்பாத அமெரிக்கா, அதன் மீது பல ஆண்டுகளாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல் நடிப்பில் நேற்று வெளியான ‘கங்குவா’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. குறிப்பாக இப்படத்தில் சத்தம் என்ற பெயரில் இரைச்சல் அதிகமாக இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், Volumeஐ சற்று குறைக்க சொல்லி, தியேட்டர் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளதாக புரொடியூசர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். இந்த படத்தை பார்த்துவிட்டீர்களா? உங்க அனுபவம் எப்படி?
PM மோடி பயணிக்க இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு டெல்லிக்கு மோடி புறப்பட இருந்தார். இந்நிலையில், அவரின் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் தியோகர் விமான நிலையத்தில் அது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.