news

News November 15, 2024

4வது T20: இந்திய அணி பேட்டிங்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி T20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் IND தொடரை வெல்லும். SA வெற்றிபெற்றால் தொடர் சமனாகிவிடும். India Team: சாம்சன் (wk), அபிசேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (c), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி.

News November 15, 2024

கல்லூரி மாணவர்களுக்கு HAPPY NEWS

image

பட்டப்படிப்பு பயிலும் காலம் தற்போது 3 ஆண்டு, 4 ஆண்டுகளாக உள்ளன. இந்நிலையில், மாணவ, மாணவிகள் விரும்பினால் 2025 கல்வியாண்டு முதல் இக்காலத்தை குறைத்து கொள்ளலாம் என்று UGC அறிவித்துள்ளது. அதாவது, 3 ஆண்டு பட்டப்படிப்பு காலத்தை இரண்டரை ஆண்டுகளாகவும், 4 ஆண்டுகால படிப்பை 3 ஆண்டுகளாகவும் குறைத்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. UGC அறிவிப்பு குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க. கீழே அதை பதிவிடுங்க.

News November 15, 2024

தீபாவளியில் அசைவம்.. UK பிரதமர் அலுவலகம் மன்னிப்பு

image

தீபாவளி விருந்தில் அசைவம், மது பரிமாறியதற்காக இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது. கடந்த 29ஆம் தேதி இங்கிலாந்து பிரதமரின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் பிரதமர் ஸ்டார்மர் தலைமையிலான நிகழ்ச்சியில் இச்சம்பவம் நடந்தது. இந்திய வம்சாவளி MP ஷிவானி உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், வருங்காலங்களில் இதுபோன்று நடைபெறாது என பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது.

News November 15, 2024

இந்தியாவை சீண்டிப் பார்க்கும் பாகிஸ்தான்

image

ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியை பாகிஸ்தான் நடத்தவுள்ளது. இந்நிலையில், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு (PoK) சாம்பியன்ஸ் டிராபியை ஊர்வலமாக எடுத்துச்செல்ல உள்ளதாக பாக்., கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதற்கு பதிலடியாக, விளையாட்டில் பாகிஸ்தான் அரசியலை புகுத்துவதாக ஜெய்ஷா கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, PCB-யின் முடிவுக்கு ICC தடை விதித்து, பாகிஸ்தானுக்கு குட்டு வைத்துள்ளது.

News November 15, 2024

தவெகவில் விரைவில் மாவட்ட செயலாளர்கள் நியமனம்?

image

தவெகவை ஆரம்பித்து விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்தி கட்சியை அடுத்த கட்டத்துக்கு விஜய் நகர்த்தி வருகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தவெகவை தயார்படுத்தும் நோக்கில், கட்சிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க அவர் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் தவெகவுக்கு 100 மாவட்ட செயலாளர்கள், 28 சார்பு அணி நிர்வாகிகளை நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 15, 2024

லவ் பண்ணும்போது KISS குற்றமில்லை: கோர்ட்

image

லவ் பண்ணும்போது முத்தமிடுவது குற்றமில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. காதலியின் வழக்கை எதிர்த்து இளைஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கோர்ட், காதலர்கள் கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதும் இயல்பானதே என்று கூறியது. புகார் உள்நோக்கம் கொண்டதாக இருப்பதால், மனுதாரர் மீதான வழக்கு, ஏற்கெனவே ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

News November 15, 2024

கங்குவா முதல் நாள் வசூல் இவ்வளவா?

image

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நேற்று வெளியான ‘கங்குவா’ முதல் நாளில் உலகம் முழுவதும் ₹58.62 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் முதல் நாளில் வசூலை குவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் விடுமுறை என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

News November 15, 2024

புதிய வாக்காளர் அட்டை பெற வேண்டுமா?

image

18 வயதான இளைஞர்கள் வாக்காளர் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது என தெரியாமல் இருப்பர். அவர்களுக்காக நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. அங்கு சென்று “படிவம் எண் 6″ஐ நிரப்பி அளித்தால் அது சரிபார்க்கப்பட்டு, அவர்கள் வீட்டுக்கே தபாலில் அட்டை அனுப்பி வைக்கப்படும். பட்டியலில் பெயர் நீக்க படிவம் 7, தொகுதி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு படிவம் 8-ஐ நிரப்பி அளிக்க வேண்டும். SHARE IT

News November 15, 2024

ஐயப்ப சாமிகளே ரெடியா..!

image

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்பட்டது. வாண வேடிக்கை, பக்தர்களின் கோஷம் என சபரிமலை விழாக்கோலம் பூண்டது. நாளை முதல் (கார்த்திகை 1) மண்டல பூஜை வழிபாடு தொடங்கும் நிலையில், தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மண்டல பூஜை டிச.26ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை 2025 ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெற உள்ளன. அன்றைய தினங்களில், 90,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News November 15, 2024

நம்ம ‘மகாராஜா’-வோட அடுத்த டார்கெட் சீனா..!

image

சீனாவில் வரும் 29ஆம் தேதி ‘மகாராஜா’ படம் ரிலீசாக உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான இந்த படம், ₹100 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் இந்திய அளவில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த படங்களின் வரிசையிலும் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!