India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி T20 போட்டியில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தலாக ஆடிவருகின்றனர். சஞ்சு சாம்சனை தொடர்ந்து அதிரடியாக ஆடிவரும் திலக் வர்மா 22 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்துள்ளார். மறுமுனையில் சரவெடியாக வெடித்துவரும் சஞ்சு சாம்சன் 83* ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணி 183/1 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.
இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால், ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இறுக்கமான ஜீன்ஸ், பேன்ட், உள்ளாடைகள் அணிவதால் சிறுநீர்ப்பாதை தொற்று, விதைப்பைகள் முறுக்கிக் கொள்வது, சிறுநீர்ப் பை பலவீனம் உள்ளிட்ட நீண்டகால பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. ஆகவே, இறுக்கிப் பிடிக்காத, சற்று தளர்வான ஆடைகளை அணியுங்கள். ஸ்டைலை விட லைஃப் முக்கியம் பாஸ்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது T20 போட்டியில் அதிரடியாக ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்துள்ளார். மொத்தம் 28 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 50 ரன்னை பதிவு செய்துள்ளார். கடந்த இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆன அவர், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகிறார். தற்போது வரை இந்தியா 10 ஓவர்கள் முடிவில் 129/1 ரன்கள் எடுத்துள்ளது.
சங்கர் இயக்கி கமல் நடித்து வெளியான இந்தியன்-1 படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் 2ஆம் பாகம் பல ஆண்டுகளுக்கு பிறகு அதே கூட்டணியில் உருவாக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு 2ஆம் பாகத்திற்கு கிடைக்கவில்லை. ஆதலால் ஏற்கெனவே எடுக்கப்பட்ட 3ஆம் பாக படத்திலுள்ள சில காட்சிகளுக்கு பதிலாக வேறு காட்சிகளை படக்குழு எடுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள லாட்டரி கிங் மார்ட்டினின் அலுவலகத்தில் இருந்து ED ரூ.8.8 கோடி பறிமுதல் செய்துள்ளது. மார்ட்டினுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் ED வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குத் தொடர்பாக மார்ட்டின், அவரது மருமகனும் விசிக நிர்வாகியுமான ஆதவ் அர்ஜூனா தொடர்புடைய இடங்களில் ED சோதனை நடத்தியது. அப்போது சென்னையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சில காதல் கதைகள் காலம் கடந்தும் வாழ்கின்றன. அப்படி ஒரு கதைதான் இது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி 2,800 ஆண்டுகளுக்கு முன்பு, ஈரானில் ‘டெபே ஹசன்லு’ பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி, விபத்திலிருந்து தப்பிப்பதற்காக பள்ளத்தில் ஒளிந்து கொண்டது. அங்கு ஒருவரையொருவர் முத்தமிட்டவாறே இறந்தனர். 1972ல் அவர்களது எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதி தற்போது ‘Hasanlu Lovers’ என அழைக்கப்படுகிறது
*தாமதம் கூடவே கூடாது. தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால், முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அனுமதி பெறுங்கள். *உண்மையாக இருப்பது நல்லதுதான். அதற்காக வலிய சென்று உங்கள் பலவீனங்களை பட்டியலிட வேண்டாம். நீங்கள் தற்போது பணிபுரியும் அல்லது முன்பு வேலை செய்த நிறுவனங்கள், நிர்வாகிகள் பற்றி குறை சொல்வதையும் கட்டாயம் தவிர்க்கவும். *வித்தியாசமான டிசைன்கள், வண்ணங்கள், ஸ்டைல்கள் கொண்ட ஆடைகளை தவிர்க்கவும்.
கல்யாணத்திற்கு பிறகு நண்பர்களை சந்திக்கும் வழக்கம் குறைவது இயல்புதான். ஆனால், ஆண்கள் வாரத்திற்கு 2 முறையாவது நண்பர்களை சந்தித்து ஜாலியாக பேசுவது, அவர்களது உடல் நலத்திற்கு நல்லது என ஆய்வில் தெரியவந்துள்ளது. கவலை, மன அழுத்தம் குறையவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் ஸ்ட்ராங் ஃப்ரண்ட்ஷிப் உதவுவதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
TN போலீசாரால் தேடப்படும் கஸ்தூரி, டெல்லியில் பாஜக பிரமுகர் இல்லத்தில் பதுங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்ஜாமின் காேரி கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸ் தேடி வருகிறது.
ஆஸி.,யில் பயிற்சியின்போது கோலிக்கு காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. காயம் காரணமாக அவர் ஸ்கேன் எடுத்ததாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், எந்த இடத்தில் காயம் என்ற தகவல் வெளியாகவில்லை. முன்னதாக, இன்றைய பயிற்சியின்போது கே.எல்.ராகுலுக்கும் காயம் ஏற்பட்டது. டெஸ்ட் தொடர் நெருங்கி வரும் சூழலில், இரண்டு முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பது, இந்திய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.