news

News November 16, 2024

நவ.29இல் ரிலீஸாகும் ‘ராஜாகிளி’

image

‘ராஜாகிளி’ படம், நவம்பர் 29இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 50 வயதைக் கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தம்பி ராமையா தான் இசையமைப்பாளர்.

News November 16, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶குறல் இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: இனியவைகூறல்
▶குறள் எண்: 100
▶குறள்:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
▶விளக்க உரை: இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.

News November 16, 2024

திலக், சஞ்சு அதிரடி.. 93 பந்துகளில் 210 ரன்கள்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி T20 போட்டியில் இந்திய அணி வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ருத்ர தாண்டவம் ஆடினர். SA பந்துவீச்சாளர்கள் வீசிய பந்துகளை அவர்கள் நாலாபுறமும் பறக்க விட்டனர். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் 93 பந்துகளில் மட்டும் 210 ரன்களை குவித்தனர். இதனிடையே இந்த தொடரில் கேம் சேஞ்சர் விருது வருண் சக்ரவர்த்திக்கு வழங்கப்பட்டது.

News November 16, 2024

போதைப்பொருள் இல்லாத பாரதம்: அமித் ஷா

image

போதைப்பொருள் இல்லாத பாரதத்தை மோடி அரசு உருவாக்குவதாக அமித் ஷா கூறியுள்ளார். டெல்லியில் இன்று ₹900 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றி Xஇல் பதிவிட்டுள்ள அவர், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான வேட்டை தொடரும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒரே நாளில் போதைப்பொருள்களுக்கு எதிரான பெரிய முன்னேற்றம், மோடி அரசின் அசைக்க முடியாத உறுதியை காட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News November 16, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶நவ.16 (கார்த்திகை 1) ▶சனி ▶நல்ல நேரம்: 07:45-08:45 AM, 04:45-05:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15-01:15 AM, 09:30-10:30 PM ▶ராகு காலம்: 09:00-10:30 AM ▶எமகண்டம்: 01:30-03:00 PM ▶குளிகை: 06:00-07:30 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶நட்சத்திரம்: 09:30 PM வரை கிருத்திகை பின்பு ரோகிணி ▶சந்திராஷ்டமம்: 09:30 PM வரை சித்திரை பின்பு சுவாதி.

News November 16, 2024

3 முறை 200+ ரன்கள் குவித்த இந்திய அணி

image

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் 202 ரன்கள் குவித்த IND அணி, 61 ரன்கள் வித்தியாசத்திலும், 3வது போட்டியில் 219 ரன்கள் குவித்து 11 ரன்கள் வித்தியாசத்திலும், கடைசி போட்டியில் 283 ரன்கள் குவித்து 135 ரன்கள் வித்தியாசத்திலும் IND அணி வென்றது. 2வது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் SA வென்றது.

News November 16, 2024

தோனி ஸ்டைலை ஃபாலோ செய்த SKY

image

SAவுக்கு எதிரான T20 தொடரை, சூர்யகுமார் தலைமையிலான இந்திய இளம்படை வென்றது. இதையடுத்து வெற்றிக் கோப்பை SKYயிடம் வழங்கப்பட்டது. அப்போது நிர்வாகியின் கையை பிடித்து அழைத்துச் சென்ற SKY, புதிய வீரர்களுக்கு மத்தியில் கோப்பை வழங்கிவிட்டுச் சென்றார். Ex கேப்டன் தோனியும், தான் வெற்றி பெறும் தொடர்களின் கோப்பையை சக வீரர்களிடம் வழங்கிவிட்டு ஒரு ஓரத்தில் நிற்பார் என்பது நினைவுகூரத்தக்கது.

News November 16, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News November 16, 2024

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை

image

சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, வேளச்சேரி, தரமணி, கிண்டி, தி.நகர், நந்தனம், அடையாறு, திருவான்மியூர், பல்லாவரம், ஆலந்தூர், தாம்பரம், வடபழனி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து 5ஆவது நாளாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. உங்க பகுதியில் மழையா? எந்த இடம்னு கமெண்ட்ல சொல்லுங்க.

News November 16, 2024

இந்திய அணி இமாலய வெற்றி

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி T20 போட்டியில், இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் விளையாடிய IND, திலக் (120), சாம்சன் (109) அதிரடி ஆட்டத்தால் 283/1 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய SA, 20 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அர்ஷ்தீப் 3, வருண், அக்‌ஷர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் T20 தொடரை 3-1 என்ற கணக்கில் IND அணி கைப்பற்றியது.

error: Content is protected !!