news

News November 16, 2024

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

image

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல காலத்தின் முதல் நாளான இன்று முதல் 18 மணி நேரம் கோயில் நடை திறந்திருக்கும். ஆன்லைன் முறையில் தினசரி 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங் முறையில் தினசரி 10,000 பேர் வரையிலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தேதி & நேரம் வாரியாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News November 16, 2024

அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா!

image

ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இன்றைய நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். 48 நாள் விரதத்திற்கு பிறகு இருமுடி கட்டிக்கொண்டு காடு மேடு மலையெல்லாம் கடந்து சபரிமலை நோக்கி பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு சென்று ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களுக்கு தீராத பிரச்னைகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.

News November 16, 2024

நீதிமன்றத்தை கண்டு அஞ்ச மாட்டோம்: ரகுபதி

image

திமுக மீது பழி சுமத்த இபிஎஸ்ஸுக்கு உரிமை இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். திமுக அமைச்சர்கள் எந்த தவறுகளையும் செய்யவில்லை எனக் குறிப்பிட்ட அவர், நீதிமன்றம் சென்றாலும் வெற்றி பெறுவோமே தவிர, நீதிமன்றத்தை கண்டு அஞ்சமாட்டோம் என்றார். மேலும், இபிஎஸ் ஒருமுறை அங்கு சென்றால்தான் தெரியும் என்பதால், அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு பேச வேண்டும் என்றார்.

News November 16, 2024

Voter ID சிறப்பு முகாம்.. இதை செய்யுங்கள்

image

வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், முகவரி, தொகுதி, பாகம் உள்ளிட்டவற்றை திருத்த தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமுக்கு சென்று என்னென்ன திருத்த செய்ய வேண்டும் என்பதை, அதற்கான படிவத்தில் குறிப்பிட்டு புகைப்படம், முகவரி சான்று நகல் உள்ளிட்டவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபின் உங்களுக்கான புதிய Voter IDஐ தேர்தல் ஆணையம் வழங்கும். SHARE IT.

News November 16, 2024

தமிழகம் முழுவதும் இன்று Voter ID திருத்த சிறப்பு முகாம்

image

தமிழகம் முழுவதும் இன்று Voter ID திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 2025 ஜனவரி 1 வரை, வாக்களிக்க தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு போட்டோவுடன் கூடிய Voter ID தயாரிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், திருத்தம் ஏதேனும் மேற்கொள்ள விரும்புவோர், இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்.

News November 16, 2024

$1 பில்லியன் டாலரை தாண்டிய அரிசி ஏற்றுமதி

image

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி $1 பில்லியனை (₹8,400 கோடி) தாண்டியுள்ளது. நாடு முழுவதும் உற்பத்தி அதிகரித்ததால், அரிசி ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு தளர்த்தியது. இதையடுத்து ஏற்றுமதி சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு அக்டோபரில் $565 மில்லியன் (₹4,750 கோடி) என்றிருந்த அரிசி ஏற்றுமதி, நடப்பு அக்டோபரில் 85.79% அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

News November 16, 2024

ரோஹித் ஷர்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது

image

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு, ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2015 டிசம்பர் மாதம் அவர் ரித்திகா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2018ஆம் ஆண்டு பிறந்த அழகான பெண் குழந்தைக்கு சமைரா என பெயர் சூட்டப்பட்டது. 6 ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரோஹித்-ரித்திகா ஜோடிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

News November 16, 2024

Beauty Tips: முகத்தில் கரும்புள்ளிகள் மறைய…

image

➤கரும்புள்ளிகள் மறைய இலுப்பை இலையை அரைத்து தூங்கும் முன் பூசி காலையில் கழுவலாம். ➤உருளைக் கிழங்கு, தக்காளி, பப்பாளி ஆகியவற்றின் சாற்றை எடுத்து தேய்த்து வரலாம். ➤சோறு வடித்த கஞ்சியை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம். ➤மஞ்சள், மல்லி, தேன் ஆகியவற்றை அரைத்து, பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவலாம். ➤ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவி வர சருமம் பொலிவு பெறும்.

News November 16, 2024

இஸ்ரோவுக்கு செலவு ₹1, வரவு ₹2.54: சோம்நாத்

image

இஸ்ரோவுக்காக ₹1 செலவிட்டால், ₹2.54 வருவாய் கிடைப்பதாக சோம்நாத் கூறியுள்ளார். கர்நாடகாவில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், இஸ்ரோவின் நிதித் தேவைக்காக அரசை மட்டும் சார்ந்திருக்காமல் வணிக வாய்ப்புகளை நாங்களே உருவாக்குகிறோம் என்றார். மேலும், 2023இல் இஸ்ரோவின் வருவாய் $6.3 பில்லியனாக உயர்ந்த நிலையில், நடப்பாண்டில் $8.4 பில்லியனாக உயரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

News November 16, 2024

மாரடைப்பை தடுக்கும் புடலங்காய்

image

*இதயம் பலவீனமாக உள்ளவர்கள் அடிக்கடி உணவில் புடலங்காய் சேர்த்துக்கொள்ளலாம்.
*புடலைக் கொடியின் இளந்தளிர் இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து சாறாக பிழிந்து வேளைக்கு 2 தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டால் இதயம் வலுப்பெறும்.
*இதய நோயாளிகள் 48 நாள்கள் தொடர்ந்து புடலங்காய் ஜூஸ் குடித்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
இந்த பயனுள்ள தகவலை உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!